Thursday, May 27, 2010

இரண்டு கவிதைகள்

வக்ரம்

சீப்பெடுத்து தலைவார

படிந்து போகும் முடிகள்....


கண்ணாடி முகம்

விட்டகன்றதும்

முடிதூக்கி உறுத்தும்
மூளைக்குள்.....

வணங்காமுடிகள்.....


சமூகத்தின் பிடிவிடத்

தனிமையில்

தலைதூக்கும் வக்ரங்கள்

இருக்கத்தானே செய்கின்றன

மனசுள்...



பஸ் திருப்தி

முகூர்த்த நாட்களில்

மூச்சுத் திணறும் பஸ்கள்....


உள்விடும்

அந்நிய சுவாசங்களின்

உச்ச வெப்பத்தில்

புளுங்கித் தவிக்கும்....


மித வேகமோ.....

மிஞ்சிய வேகமோ....

தள்ளாடும் பஸ்ஸினுள்

கரையும்

மண்டபத்தில் மிளிர

போட்டுவரும்

சாயங்களும் பவுடர்களும்...


மண்டப நிறுத்தத்தில்

மனுஷம் இறங்கும்

இயல்பு முகத்துடன்....

பஸ்கள் செல்லும்

வர்ண திருப்திகளுடன்....




15 comments:

அ.முத்து பிரகாஷ் said...

ஆமாம் தோழர் ...
பேருந்துகள் தினமும் ஹோலி கொண்டாடுகின்றன ...
சாயம் களையும் முகங்களை தோலுரிக்கிறது
உங்கள் இரு கவிதையும் ...
நன்றி தோழர் வேலு ...

dheva said...

வேலு....

//சமூகத்தின் பிடிவிடத்

தனிமையில்

தலைதூக்கும் வக்ரங்கள்

இருக்கத்தானே செய்கின்றன

மனசுள்...//

வாஸ்தம்வம்தான்....!


//மண்டப நிறுத்தத்தில்

மனுஷம் இறங்கும்

இயல்பு முகத்துடன்....

பஸ்கள் செல்லும்

வர்ண திருப்திகளுடன்....///


இது நிஜம்தன் வேலு.....எல்லா பஸ்களும் வர்ண திருப்தியோடு செல்ல மக்கள் கலைந்த முகங்களுடன்...வாவ்! சூப்பர் பாஸ்!

vasu balaji said...

/சமூகத்தின் பிடிவிடத்
தனிமையில்
தலைதூக்கும் வக்ரங்கள்
இருக்கத்தானே செய்கின்றன
மனசுள்.../

வாஸ்தவம்.

/மண்டப நிறுத்தத்தில்
மனுஷம் இறங்கும்
இயல்பு முகத்துடன்....
பஸ்கள் செல்லும்
வர்ண திருப்திகளுடன்....//

அருமை

அகல்விளக்கு said...

இரண்டுமே அருமை அண்ணா...

Chitra said...

சமூகத்தின் பிடிவிடத்

தனிமையில்

தலைதூக்கும் வக்ரங்கள்

இருக்கத்தானே செய்கின்றன

மனசுள்...


..... எதார்த்தம்.... கவிதைகள் அருமை.

Anonymous said...

wonderful twins by sakthi

ஈரோடு கதிர் said...

ரெண்டும் அருமை வேலு

ஹேமா said...

முதாலாவது கவிதையால் அடித்திருக்கிறீர்கள் வக்ர புத்தி கொண்டோரை.அடுத்ததும் அருமை.

VELU.G said...

நன்றி நியோ

நன்றி தேவா

நன்றி வானம்பாடிகள்

நன்றி அகல்விளக்கு

நன்றி சித்ரா

நன்றி சக்தி

நன்றி ஈரோடு கதிர்

நன்றி ஹேமா

பனித்துளி சங்கர் said...

////////சமூகத்தின் பிடிவிடத்
தனிமையில்
தலைதூக்கும் வக்ரங்கள்
இருக்கத்தானே செய்கின்றன
மனசுள்...
///////

மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இரண்டுமே அருமையாக மனிதனின் எண்ணங்களையும் செயல்களையும் எடுத்துரைத்து...

வாழ்த்துகள்...

Unknown said...

ரெண்டுமே சூப்பர் ..
:)

VELU.G said...

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி தஞ்சை வாசன்

நன்றி ஆறுமுகம் முருகேசன்

குட்டிப்பையா|Kutipaiya said...

யதார்த்தமான, சுடும் உண்மை..

cheena (சீனா) said...

அன்பின் வேலு

இரண்டுமே அருமை - பிடித்திருக்கிறது.வக்ரங்கள் தனிமையில் தலை தூக்கத்தான் செய்யும். அடக்க வேண்டும். ம்ம்ம்ம்ம்

பேருந்தில் சாயங்கள் வெளுக்கும் - இயல்பு முகத்துடன் மனிதம் இறங்க - வெளுத்த வர்ணங்களுடன் பேருந்து செல்கிறது. கற்பனை அருமை - சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...