Thursday, May 27, 2010

இரண்டு கவிதைகள்

வக்ரம்

சீப்பெடுத்து தலைவார

படிந்து போகும் முடிகள்....


கண்ணாடி முகம்

விட்டகன்றதும்

முடிதூக்கி உறுத்தும்
மூளைக்குள்.....

வணங்காமுடிகள்.....


சமூகத்தின் பிடிவிடத்

தனிமையில்

தலைதூக்கும் வக்ரங்கள்

இருக்கத்தானே செய்கின்றன

மனசுள்...



பஸ் திருப்தி

முகூர்த்த நாட்களில்

மூச்சுத் திணறும் பஸ்கள்....


உள்விடும்

அந்நிய சுவாசங்களின்

உச்ச வெப்பத்தில்

புளுங்கித் தவிக்கும்....


மித வேகமோ.....

மிஞ்சிய வேகமோ....

தள்ளாடும் பஸ்ஸினுள்

கரையும்

மண்டபத்தில் மிளிர

போட்டுவரும்

சாயங்களும் பவுடர்களும்...


மண்டப நிறுத்தத்தில்

மனுஷம் இறங்கும்

இயல்பு முகத்துடன்....

பஸ்கள் செல்லும்

வர்ண திருப்திகளுடன்....




Thursday, May 20, 2010

யார் வருவார் இங்கே?

சிறைதாண்டிச் செல்லும்

வாழ்க்கை

சிறுகச்சிறுக வெறுத்துபோனது...


பள்ளிச்சிறை முடித்து

பட்டச்சிறை முடிக்க

பொருளாதார வலைவிரித்து

காத்திருக்கும்

வீட்டுச்சிறை....

வேலைச்சிறை...


எல்லாமே சிறையெனில்

எது வெளி?


எல்லோரும் சிறையிலெனில்

நமை மீட்க

எவர் வருவார் இங்கே?


  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...