அதிகாலை பூத்த முதல்பூவே என்றேன்
எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் என்றாய்
மார்கழியின் வெண்பனித்துளியே என்றேன்
பனித்துளிகள் காய்ந்துவிடும் என்றாய்
உணர்வுகள் சிலிர்க்கும் நறுமணமே என்றேன்
மணங்கள் காற்றில் கரைந்துவிடும் என்றாய்
நவரத்தினமும் மயங்கும் பத்தாவது ரத்தினமே என்றேன்
எல்லாம் களவு போய்விடும் என்றாய்
உனை எப்படித்தான் அழைப்பேன் என்றேன்
என்பெயர் நித்யஸ்ரீ என்றாய்
அது எனக்குத்தெரியுமென்றேன் விழித்தபடி
நான் நானகவே இருக்க விரும்புகிறேன் என்றாய்
எனக்கும் அப்படித்தான் என்றேன் வழிந்தபடி
10 comments:
சூப்பர் வரிகள்.
அப்ப தொடருங்கள் உங்கள் உவமைகளை ....
படமும் கவிதையும்
அழகாயிருக்கு வேலு.
கலக்கல் அண்ணா...
கவிதையில் நல்லா காதல் வழியுது. :-)
நீங்க வழிஞ்சது நல்லா இருக்கு..
figure super
வேலு,
நல்லாத்தான் வழிஞ்சிருக்கீங்க.
‘என்றேன்’,’என்றாய்’!
மென்பொருள் நீயென்றேன் வைரஸ் பிடித்து விடும் என்றாள்...
வழிந்தாலும் நல்லாத்தான் வழியிரீங்க..
Post a Comment