நான்
இருந்ததிலிருந்து
எட்டிய உயரங்கள் அதிகம்.
எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது
இன்னும் அதிகம்.
எட்டாமலிருப்பதை எட்டுவதும்
எளிதே…
அருகிலிருக்கும் உயரங்களை
அடைந்துகொண்டே வர
அருகிலிருக்கும் எட்டாததும்….
இருப்பதும்….
எட்டியதும், எட்டாமலிருப்பதும்,
தவிர்த்து மிஞ்சும்
நான்-ஐ
எட்டுவதைத்தான்
எட்டமுடிவதிவல்லை எப்போதும்….
No comments:
Post a Comment