எத்திலின்களும் எஸ்டர்களும்
உடலை பின்னி
உஷ்ணத்தில் இறுக்க
செருப்புக்கால் மேல் ஒட்டும்
எச்சில் சகதிகளோடு
பாதரஸ சோடிய
விளக்குகள் அணைய அணைய
விடிகிறது நகரம்.....
கலர் விளக்குகளின் காலடியில்
உச்ச சத்தகதியின் லயிப்பில்
காற்று மனோபல வேகத்தில்
கனவுகள் நிகழ்வுகள்....
கார்பனை சுவாசித்து
சிலிக்கன் மேல் நடக்கும்
மனிதர்கள்
எங்கும் கரிபடித்த நரகம்
மூச்சுக் குழல் தவமிருக்கும்
சுத்த ஆக்ஸிஜன் வேண்டி....
சில்வரை வேகவைத்து
இரும்பைத் தின்றுவிட்டு
கால்சியத்தில் சிரிக்க
செதில் செதிலாய்
சதைகள் உதிரும்
வைட்டமின் தேடி....
கவர்ச்சியில் சிக்காவிடில்
நகரம் தேவையில்லை
எனக்கான கனவுகள்
எப்போதும்
நீரோடையின் சலசலப்பில்
வயல்களினோடே திரியும்
கிராமங்கள் தான்.
உங்களுக்கு????
10 comments:
Wov..........very nice....Velu!
Vaazthukkal!
எனக்கும்தான்..
தலைப்பிலேயே கவிதை முழுக்கவும் சொன்ன உணர்வு.ஆதங்கம் தெரிகிறது கவிதையில்.
எனக்க்க்க்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்
எனக்கும்தான்...
கவிதை நல்லாருக்கு அண்ணா...
அருமை
//எனக்கான கனவுகள்
எப்போதும்
நீரோடையின் சலசலப்பில்
வயல்களினோடே திரியும்
கிராமங்கள் தான்.//
வேல்.ஜி,
எங்களுக்குந்தான்!
(’கவிதைக்கான’ ஆதங்கத்தை தான் ஒன்னும் செய்யமுடியாது.)
உங்களுக்கு????
எனக்கும்தான் ...
வேற என்ன சொல்ல..
எனக்கும் தான்..
ஆனா புழைப்புக்கு இங்கதான இருக்க வேண்டியிருக்கு..
ரொம்ப இனிமையாயிருக்கு!
Post a Comment