சிறைதாண்டிச் செல்லும்
வாழ்க்கை
சிறுகச்சிறுக வெறுத்துபோனது...
பள்ளிச்சிறை முடித்து
பட்டச்சிறை முடிக்க
பொருளாதார வலைவிரித்து
காத்திருக்கும்
வீட்டுச்சிறை....
வேலைச்சிறை...
எல்லாமே சிறையெனில்
எது வெளி?
எல்லோரும் சிறையிலெனில்
நமை மீட்க
எவர் வருவார் இங்கே?
26 comments:
நல்லா இருக்குங்க...
சிறை எனில் சிறை
வானம் எனில் வானம்
நாமே மீட்டுக்கொள்ள வேண்டும்
சிறையிலிருந்து வானத்திற்கு
சிறகடித்து பறந்திடவே!!!
:-)
சிறையிலிருந்து நோக்க வெளிதான் சிறை...
(எப்ப்ப்ப்ப்பூடி....இஃகிஃகி)
// ஈரோடு கதிர் said...
சிறையிலிருந்து நோக்க வெளிதான் சிறை...
(எப்ப்ப்ப்ப்பூடி....இஃகிஃகி)//
இப்புடி:)). கவிதை நல்லாருக்குங்க வேலு:))
உள்ளே வெளியே தானுங்க வாழ்க்கை!
இதைப் போயி சிறையுன்னு,
பெரிய வார்த்தையெல்லாம்.
கல்யாணமுன்னு ஒன்னு இருக்குள்ள?
ரொம்ப நல்லா இருக்குங்க.. :)
மீட்பனை தேடாத போது
சிறை விலங்குகள் உடையக் கூடும் ....
// எல்லாமே சிறையெனில்
எது வெளி? //
யோசிக்க வச்சுட்டீங்க வேலு !
பள்ளிச்சிறை முடித்து
பட்டச்சிறை முடிக்க
பொருளாதார வலைவிரித்து
காத்திருக்கும்
வீட்டுச்சிறை....
வேலைச்சிறை...
....... சிறையிலும் லூட்டி...... அது attitude..... :-)
சிறையும் சிட்டாய்
பறத்தலும் எங்கள் மனங்களில்தான் !
வேலு,
வெளுத்து வாங்கும் ... தத்துவக் கவிதை.
(எங்கும் சிறை, எங்கும் வெளி)
யப்பே...
கலக்கல் அண்ணா..
Nice one Velu!
arumai nanbare
////பள்ளிச்சிறை முடித்து
பட்டச்சிறை முடிக்க
பொருளாதார வலைவிரித்து
காத்திருக்கும்
வீட்டுச்சிறை..../////
//////////////
பள்ளியை சிறையேன்று ஆக்கியத்தில் எனக்கு உடன்பாடில்லை .
நன்றி அமுதா
நன்றி கதிர்
நன்றி வானம்பாடிகள்
நன்றி வாசன்
நன்றி ஆனந்தி
நன்றி நியோ
நன்றி சித்ரா
நன்றி ஹேமா
நன்றி சத்ரியன்
நன்றி அகல்விளக்கு
நன்றி தேவா
நன்றி கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன்(L.K)
நன்றி பனி்த்துளிசங்கர்
கவிதை வரிகள் இப்போது மனச் சிறையில்..
பேசாம கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க.. அவங்க சிறைப்படுத்த புது ஆள் கிடைக்கும்...
Nice..... - sakthi
//எல்லாமே சிறையெனில்
எது வெளி?
எல்லோரும் சிறையிலெனில்
நமை மீட்க
எவர் வருவார் இங்கே?//
நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்!
கற்பனைச் சிறையில் இருந்து வெளிவந்த கவிதையிது...
மீட்காத கைதிகளின் சிறை இன்னொரு ப்ரபஞ்சமே.
அங்கு காலத்தின் நீட்சி வேறு; நிலத்தின் திணைகள் வேறு.
அருமையான சிந்தனை வீகே! நட்போடு வாழ்த்துக்கள்!!
நன்றி வேலு.ஜி
உங்களுடைய வலைதளத்தை பார்த்தேன். கலக்கி இருக்கிறீர்கள்.
என்னுடைய வரிசை...
ராணுவத்தில் தங்கராசு
யார் வருவார் இங்கே?
அரியர் எக்ஸாம்
புதுமையான சிந்தனைதான் .
நன்றி ரிஷபன்
நன்றி பிரேமா மகள்
நன்றி சக்தி
நன்றி மனோரஞ்சன்
நன்றி வேல் தர்மா
நன்றி ஜெகநாதன்
நன்றி நளினிசங்கர்
நன்றி பனித்துளி சங்கர்
@ பனி்த்துளிசங்கர்
//பள்ளியை சிறையேன்று ஆக்கியத்தில் எனக்கு உடன்பாடில்லை//
நமக்கு அவை பொற்காலமாக இன்று தெரிந்தாலும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அவை சிறைச்சாலைகளாக தான் தெரியும்...
வகுப்புறையை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும்போதோ இல்லை விளையாட்டு வகுப்பிற்கு செல்லும்போதோ முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி தோன்றாததை உதாரணமாக கூடச்சொல்லலாம்...
தங்களின் கவிதை மிகவும் அருமை...
வாஸ்துவமான வார்த்தை... கடைசி பயணம் வரை எல்லோரும் ஏதோ ஒரு சிறையில் இருக்கவே நிர்பந்திக்கபட்டிருக்கிறோம்... நல்ல பதிவு
அருமை நண்பரே.. ..
Post a Comment