Friday, June 4, 2010

நான்காம் நிலை?


நீ நீர்மம் என்றால்

எனைப்புரிய வைப்பேன் உனக்கு

என்னையே உருக்கி.....


நீ தின்மம் என்றால்

எனைப்புரிய வைப்பேன் உனக்கு

என் இதயவலிமையைக் காட்டி...


நீ வாயு என்றால்

எனைப்புரிய வைப்பேன் உனக்கு

என் இளகிய மனதைக் காட்டி......


என் ஆசான் உரைத்துள்ளார்

இப்புவியில் எதுவும்

இம்மூன்று நிலைகளிலேயே இருக்குமென்று...


நீயோ நெருப்பாய் இருக்கிறாய்!!!!!


எனைத்தெரிந்தோர் யாரேனும்

உதவுவீரோ

நான் அவளை அணுக....


நெருப்பென்பது........

திடமா?......திரவமா?.... வாயுவா?.....





15 comments:

ரோகிணிசிவா said...

//
நெருப்பென்பது........
திடமா?......திரவமா?.... வாயுவா?.....//
இதுக்கு பதில் தெரிலிங்க ஆனா ஏதோ உங்களுக்கு கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆகிடுச்சுனு விளங்குதுங்க

அகல்விளக்கு said...

sarithan.......

thans-kku ithu theriyuma anna......

vasu balaji said...

அய்யோ இது வில்லங்கமாச்சே:). நீராப்போனா நெருப்பு அணைஞ்சிடும், திடமா போனா இவரு கருகிடுவாரு இல்லைன்னா உருக்குலைஞ்சிடுவாரு, காத்தாப் போனா இன்னும் நெருப்பு எரியும். ராங் கால்குலேசன்:))

பிரேமா மகள் said...

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுப் போல....

ஹேமா said...

கஸ்டமா கேள்வியெல்லாம் கேக்ககூடாது...அதுவும் கவிதைல.
நீங்க அன்பாயிருங்க வேலு போதும் !

Unknown said...

நீங்களும் நெருப்பை மாறுங்கள்...

Vel Tharma said...

தீயதை விலக்குங்கள்
திண்மத்தை நீர்மமாக்கும்
நீர்மத்தை வாயுவாக்கும்

Anonymous said...

photovula irukkiravanga per$addressa eluthiruntheengana irandu kavithaya irunthuirukkume velugee - sakthi

அன்புடன் நான் said...

கொஞ்சம் பொறுமை!
தணியட்டும்.... நெருங்கிடலாம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இங்கயும் கேள்வியா? சாரிங்க நான் Arts Group .. so...accounts commerce ல எதுனா டவுட்னா கேளுங்க... இது நமக்கு ஆவாது... Jokes apart, nice post... chemistry சீக்கரம் workout ஆக வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மூன்றையும் அடைக்க இயலும்... ஆனால் அடைக்க இயலாத தீ...காதல் என்னும் தீ... வந்து பத்தி விட்டாலே அப்படிதான்...

நல்லதொரு கேள்விகனையுடன் மனதை சொ(கொ)ல்லும் அருமையான கவிதை...

நெருப்பை வாயுனு சொல்லலாம்... ஏன்? மனச போட்டு குழப்பிக்கொண்டு.

கனிமொழி said...

கேள்வி நல்லா இருக்கே.....
:-)

மேடேஸ்வரன் said...

வேறு வழியேயில்லை ...செந்தில் சொல்வது போல் நீங்களும் நெருப்பாக மாறிவிட வேண்டியதுதான்..

VELU.G said...

நன்றி ரோகிணி சிவா

நன்றி அகல்விளக்கு

நன்றி வானம்பாடிகள்

நன்றி பிரேமா மகள்

நன்றி ஹேமா

நன்றி கே.ஆர்.பி. செந்தில்

நன்றி வேல்தர்மா

நன்றி சக்தி

நன்றி சி.கருணாகரசு

நன்றி அப்பாவி தங்கமணி

நன்றி ஆறுமுகம் முருகேசன்

நன்றி தஞ்சை வாசன்

நன்றி கனிமொழி

நன்றி மேடேஸ்வரன்

goma said...

ஹி ஹி ஹி கெமிஸ்ட்ரி ரொம்பத்தான் ஒர்க் அவ்ட் ஆகுது.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...