யாரும் செல்லமுடியாத
திருமணத்திற்கு
நான் போகவேண்டியதாயிற்று.....
மிகநெருக்க சொந்தங்களாம்...
மண்டபத்தில்
வந்தோர் கேட்டோர் யாரும்
முன்பின் அறிமுகமில்லை.....
நிழல் ஒதுங்க இடமில்லா
இடத்தில் நான் ஒதுங்க....
மின்னலென வந்தவள்
துள்ளலும் சிரிப்புமாய்
நிறைந்தாள்
அம்மண்டபத்தில்...
என் மனதில்....
எங்குமாய்.....
எல்லோரும் மிகநெருக்கச்
சொந்தகளாய் தெரிந்தனர்.
**********
டிஸ்கி 1) போன பதிவில் கவிதையை ஒரு கேள்வியுடன் முடித்திருந்தேன். அதற்கு பதில் நெருப்பென்பது நீர்மமோ திண்மமோ வாயுவோ அல்ல. நெருப்பென்பது ஒரு வினை(செயல்). செயலுக்கு வடிவம் கிடையாது. ஒரு பொருளுக்கு(உலோகம்,அலோகம், சேர்மம், தனிமம்...) மட்டுமே வடிவம் உண்டு. ஒரு அறிவியல் கேள்வி ஒன்றை கேட்டு அதை தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்குமே என்று ஒரு சின்ன முயற்சி. அதற்கு கவர்ச்சிகரமாக உதவியது காதல். அவ்வளவு தான் மற்றபடி ஏற்கனவே ஒர்க் அவுட் ஆன கெமிஸ்டிரிக்கே துண்டை காணோம் துணியை காணோம்னு ஒடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மறுபடியுமா? அவ்வளவு நல்லவியலா நீங்க?
2) போன பதிவை படித்தவுடன் போன் செய்த என் நண்பன் SUPER என்றான். எனக்கு அப்படியே தலைகால் புரியவில்லை. பின்னர் அட்ரஸ் என்ன என்று கேட்டான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த படத்தில் உள்ள பெண்ணின் அட்ரஸ் என்ன என்று கேட்டான். அப்ப நீ என் கவிதையை SUPERன்னு சொல்லலியா என்றேன் வடிவேல் முகத்துடன். போட நீயும் உன்னோட கவிதையும் அந்த அட்ரஸ் இருந்தா அதுவே ஒரு அழகான கவிதையாக இருந்திருக்குமே என்றான். அந்த நன்பனுக்கு ஸாரி இப்போதும் அட்ரஸ் கிடைக்கவில்லை.

20 comments:
வேலு இன்னும் நிறைய படியுங்கள் ..
பத்திரிகை இல்லாத கல்யாணத்துக்கு சாப்பிட போனா இப்படி தான் .,
பொண்ணுங்க போட்டோஸ் கலக்குது .,,
என்னமோ போங்க .,
ஓ..
உங்க நண்பர்கள் படிக்கிறாங்களா
நீங்க....
அதிர்ஷ்டசாலிதான் போங்க
மனசுக்குப் பிடிச்சவங்க யாரைப் பார்த்தாலும் இப்பிடித்தான் தோணுமோ !
good one...nice expressive
உங்கள் கவிதை ,நான் அக்காவின் தோழியின் திருமண விழாவிற்கு சென்ற நாளை ஞாபகப் படுத்துகிறது ....
நன்றாக வந்திருக்கிறது தோழர் ...
கதிர் சொன்ன மாதிரி நண்பர்களால் படிக்கப் படும் பதிவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம் ...
சற்று பொறாமை தான் உங்கள் மீது தோழர் !
நல்லா எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
இந்த பொண்ணை பார்க்க எதுக்கு கல்யாணத்துக்கு போகணும்?
கூகிலில் தேடினால் போட்டோ கிடைக்கப் போகுது.. பார்க்க வேண்டியதுதானே.. அதைவிட்டு?
Alagiya Tamil mahal and Alagiya Pudhukkavithai. Nanru um rasanayum pulamayum. Sakthi
எதார்த்தம்.
அருமை.
கவிதை நல்லாயிருக்கு...
ஆனா அந்த புள்ள சினிமாக்காரியாட்டமில்ல தெரியுது??
அருமை..
தங்கள் அறிவுரைக்கு நன்றி கே.ஆர்.பி செந்தில்
நன்றி ரோகிணிசிவா
நன்றி ஈரோடு கதிர்
நன்றி ஹேமா
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி நியோ
//பிரேமா மகள் said...
இந்த பொண்ணை பார்க்க எதுக்கு கல்யாணத்துக்கு போகணும்?
கூகிலில் தேடினால் போட்டோ கிடைக்கப் போகுது.. பார்க்க வேண்டியதுதானே.. அதைவிட்டு?
//
அரசாங்க ரகசியத்தை வெளியிடக்கூடாது ஆத்தா
நன்றி சக்தி
நன்றி பாலமுருகன்
நன்றி ஆறுமுகம் முருகேசன்
//
Blogger சி. கருணாகரசு said...
கவிதை நல்லாயிருக்கு...
ஆனா அந்த புள்ள சினிமாக்காரியாட்டமில்ல தெரியுது??
//
நம்புங்க மண்டபத்தில பாத்த புள்ளதாங்க, கூகுள்ள சர்ச் பண்ணி 3ம் பக்கத்தில போய் எடுத்து Insert பண்ணவே இல்லைங்க
நல்லா இருக்கு தொடருங்கள் நண்பரே...
VELU.G said...
//
Blogger சி. கருணாகரசு said...
கவிதை நல்லாயிருக்கு...
ஆனா அந்த புள்ள சினிமாக்காரியாட்டமில்ல தெரியுது??
//
நம்புங்க மண்டபத்தில பாத்த புள்ளதாங்க, கூகுள்ள சர்ச் பண்ணி 3ம் பக்கத்தில போய் எடுத்து Insert பண்ணவே இல்லைங்க//
இந்த நேர்மை பிடிச்சிருக்கு!
//எல்லோரும் மிகநெருக்கச்
சொந்தகளாய் தெரிந்தனர்.//
தெரிவாங்கய்யா...தெரிவாங்க..:)
நல்ல கவிதை
காரிருளில் ஒரு மின்னல் வெட்டு உலகத்தையே ஒரு வினாடியில் ஒளி தருவது போல் அந்தைக் காரிகை யாரையும் தெரியாத இடத்தில் அனைவரையும் அறியவைத்தாளா?
மின்னல் வாம்மா வா
Post a Comment