Friday, December 17, 2010

மனிதர்களுக்குத்தான் எல்லாமே.....

மறுபடியும்
பாற்கடலைக் கடைந்தபோது

வெண்ணைதான் வந்ததாம்.


கோபத்தில்

சிவன் தொண்டையில்

இருந்த விஷத்தை கக்கியதும்

இருமல் சரியானது.

பெனடிரில் சிரப்

ஒத்துக்கொள்வதில்லை

இப்போதெல்லாம்.


பிரம்மச்சுவடி

தொலைந்த வருத்தத்தில்

அரிச்சுவடி படிக்க

ஆரம்பித்து விட்டார் பிரம்மா.

எட்டாம் வாய்ப்பாட்டிற்குமேல்

வரவில்லையாம்


சிவன், பிரம்மா, விஷ்னு
மூவரும்
ஒன்றாம் வகுப்பிலிருந்தே
நண்பர்கள்தான் என்றாலும்
அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
தொழில்கள் வேறு வேறு.

நடுத்தரக் குடும்பங்கள் தான்

என்றாலும்

குகை மலைகள் தான்

வீடு என்பதால்

வாடகை தொல்லை இல்லை.


சூரியன் சந்திரனென்று

பவர்கட் எப்போதுமில்லை.


வாகனங்களுக்கு

பெட்ரோல் பிரச்சனையுமில்லை.


மனிதர்களுக்குத் தான்

எல்லாமே.

29 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:(

பதிவுலகில் பாபு said...

சூப்பருங்க..

ரிஷபன் said...

காளமேகப்புலவர் ஞாபகம் வருகிறார். என்ன ஒரு நையாண்டி.. குறும்பு கொப்பளிக்கிற அழகான கவிதை..

Samudra said...

good one!

அரசன் said...

அருமையான வரிகள்..
நகைச்சுவை இருந்தும் அதில் ஆயிரம் அர்த்தங்கள்...
வாழ்த்துக்கள் ...

இராமசாமி said...

i like this one.. too good :)

நியோ said...

தோழர் ... அதி அற்புதம் ...
ஒரு அன்பின் வேண்டுகோள் ...
உண்மை இதழுக்கு இந்த கவிதையை அனுப்புங்களேன் ...
அவ்விதழில் தி.க. வுடன் முழுமையாக ஒத்துப் போகாதவர்கள் கூட எழுதுகின்றார்கள் ...
அங்கதமும் நிதர்சனமும் கலந்த உன்னத கவிதை இது ...
சில வாழ்க்கை சூழல்களால் இணையம் வருவது சில மாதங்களாக கடினமாக இருக்கின்றது ..
puththaandu muthal thodarnthu varuven தோழர்!
nantrigalum magilchiyum!!!

ஈரோடு கதிர் said...

ஆமாங்க ஆமா!!!

கலாநேசன் said...

அட ஆமாங்க.....

Chitra said...

அவ்வ்வ்வ்......

தஞ்சை.வாசன் said...

ஆண்டவனும் மனிதனாய் பிறந்தால் அவனும் அனுபவித்தே ஆகவேண்டும்...

சிரிக்கவும்.. சிந்திக்கவும்... படியான நல்லதொரு கவிதை...

வாழ்த்துகள்...

ஹேமா said...

சாமிகுத்தம்.இப்பிடியெல்லாம் சொன்னா சாமி
கண்ணைக் குத்திடும் வேலு !

வெறும்பய said...

நல்லாயிருக்குதுங்கோ...

பிரதீபா said...

:)

அப்பாவி தங்கமணி said...

வித்தியாசமான சிந்தனை... அருமை..

அசோக்.S said...

உங்களது கர்ப்பனை திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

VELU.G said...

மிக்க நன்றி S.அசோக்

தமிழ்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

VELU.G said...

நன்றி நண்டு @ நொரண்டு

நன்றி பதிவுலகில் பாபு

நன்றி ரிஷபன்

நன்றி samudra

நன்றி அரசன்

நன்றி இராமசாமி

நன்றி நியோ

நன்றி ஈரோடு கதிர்

நன்றி கலாநேசன்

நன்றி சித்ரா

நன்றி தஞ்சை வாசன்

நன்றி ஹேமா

நன்றி வெறும்பய

நன்றி பிரதீபா

நன்றி அப்பாவி தங்கமணி

நன்றி தமிழ்த்தோட்டம்

சி. கருணாகரசு said...

வெலுத்து வாங்குறிங்க.....
கவிதை மிக கலக்கல்.....

சி. கருணாகரசு said...

மிக ரசித்தேன்....

பாராட்டுக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....கலக்குங்க வேலு

தாராபுரத்தான் said...

கவலை இல்லாத கடவு...ள் களைப்பற்றி...அசத்தல்.

VELU.G said...

நன்றி சி.கருணாகரசு

நன்றி ஆரூரன் விசுவநாதன்

VELU.G said...

நன்றி தாராபுரத்தான் ஐயா

சுந்தர்ஜி said...

//கோபத்தில்
சிவன் தொண்டையில்
இருந்த விஷத்தை கக்கியதும்
இருமல் சரியானது.
பெனடிரில் சிரப்
ஒத்துக்கொள்வதில்லை
இப்போதெல்லாம்.//

புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிளையும் ஞாபகத்துக்கு வந்தது வேலு ஜி.

VELU.G said...

நன்றி சுந்தர்ஜி

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சிந்திக்க வைத்த கவிதை......

VELU.G said...

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி சந்திரகௌரி