இந்த வருட
இன்டலிஜன்ட் பெர்ஷன் விருது
எங்கள் நிறுவனத்தில்
எனக்கு கிடைத்த்து.
விற்பனை சம்பந்தமாய்
நான் வகுத்த
விதிமுறைகளில்
அள்ளிய லாபம்
அலுவலக நிமித்தம்
நான் செய்த
மாற்றங்களில்
கிடைத்த பலன்கள்
கிளை மேலாளருக்கோ
பெருமை
சக ஊழியர்களுக்கோ
மகிழ்ச்சி
நான் போடும் கணக்குகள்
எப்போதும் தப்பாதென
என்னைத்தெரிந்த
எல்லோருக்கும்
தெரியுமென்றாலும்
குழம்பி விடுகிறது மனது
முத்தின முருங்கை
மூன்று ரூபாய்
அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி
மானத்தை வாங்குகிறாரே
எனும் என் மனைவியிடமும்
நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு
மிஸ் திட்றாங்கப்பா
இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்
எனும் என் மகனிடமும்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
11 comments:
முத்தின முருங்கை
மூன்று ரூபாய்
அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி
மானத்தை வாங்குகிறாரே
எனும் என் மனைவியிடமும்
நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு
மிஸ் திட்றாங்கப்பா
இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்
எனும் என் மகனிடமும்.///////
எல்லா எடத்திலேயும் இப்படிதான் போல ..........
ஹா ஹா.. அருமை..
அது தான் நம்ம பப்பெல்லாம் வீட்டில வேகாது...
நமது கணக்கு எல்லா இடத்திலும் சரியாக வந்துவிடுவதில்லை. கவிதை நன்று.
வாவ் சூப்பர்
Intelligent person!!!!
:-))
:)) athusari
super....ha...haa.....haaa......
அது இன்டல்லிஜென்ட் பெர்சனா ? குழம்பியது முதலில்.
கணக்குக் கவிதை நல்லாயிருக்கு.
ஆனைக்கும் அடி சறுக்கும்தானே !
கொடுத்து வச்சது அவ்வளவுதான்..
நன்றி மண்டையன்
நன்றி வெறும்பய
நன்றி தமிழ்உதயம்
நன்றி அன்பரசன்
நன்றி சித்ரா
நன்றி வானம்பாடிகள்
நன்றி நித்திலம் சிப்பிக்குள் முத்து
நன்றி திரு
நன்றி ஹேமா
நன்றி கலாநேசன்
நன்றி ரிஷபன்
நன்றி samudra
Post a Comment