Monday, December 13, 2010

சரியோ தவறோ....

இதுசரி இதுதவறு
என்று

அம்மா சொன்னாள்

அப்பாவும் அதையே

சொன்னார்.


மாமாவும் அத்தையும்

வேறு மாதிரி

சொன்னார்கள்


நண்பர்கள் இன்னும்

வேறு மாதிரி

சொன்னார்கள்.


எல்லாவற்றையும் குழப்பி

நானொன்றை செய்தால்

தவறென்றனர்

எல்லோருமே.


எல்லோருக்கும் சரி

என்று

இங்கே ஏதுமில்லை.


சரியோ தவறோ.....

நேரே செய்துகொண்டிருப்பதால்

உணரப்படுகிறது

என் இருப்பு

ஒரு கடவுளைப்

போலில்லாமல்.

11 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//எல்லோருக்கும் சரி
என்று
இங்கே ஏதுமில்லை.//

உண்மை.

//சரியோ தவறோ.....
நேரே செய்துகொண்டிருப்பதால்
உணரப்படுகிறது
என் இருப்பு
ஒரு கடவுளைப்
போலில்லாமல்.//

மிக அருமை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நீங்க(நாம்) செய்றது எல்லாமே சரிதான்...

நடைமுறை வாழ்க்கை வரிகளாய் யதார்த்தமாக... வாழ்த்துகள்...

அகல்விளக்கு said...

வாவ்...

சூப்பர் அண்ணா...

அன்பரசன் said...

அருமை.

Chitra said...

ஒருவருக்கு சரி என்று படுவது, மற்றொருவருக்கு தவறாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டு.

ஹேமா said...

சரி தவறு கேட்டுக்கொண்டே இருந்தோமேயானால் நாம் நினைப்பதும் குழம்பிப்போம் !

Unknown said...

உண்மைதாங்க..

Unknown said...

நல்லாயிருக்குங்க..

ஆனந்தி.. said...

நல்லா இருக்குங்க !!!

ரிஷபன் said...

நைஸ்.. நாம் இருக்கும்வரை ஏதாச்சும் செய்துதானாக வேண்டும்.. சரியோ தப்போ தீர்மானிக்கிற அவஸ்தை இன்றி. நிச்சயமாய் தப்பு நமக்குத் தெரியாமலா இருக்கு?!

VELU.G said...

நன்றி ராமலஷ்மி

நன்றி தஞ்சை வாசன்

நன்றி அகல்விளக்கு

நன்றி அன்பரசன்

நன்றி சித்ரா

நன்றி ஹேமா

நன்றி கலாநேசன்

நன்றி பதிவுலகில் பாபு

நன்றி ஆனந்தி

நன்றி ரிஷபன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...