கோயில் வாசலில்
கால் வைத்ததும்
பார்த்தாகி விட்டது,
முழுதாகத்தான் இருக்கிறது.
வெளிப்பிரகாரம்
சுற்றுகையில்
பாதியாகி விட்டது
மனம் கொஞ்சம்
படபடத்தது
உள்பிரகாரம்
சுற்றும் போது
ஒருமுறை
எட்டிப் பார்த்த்தில்
கால்வாசியாகி விட்டது.
கருவறைக்குள்
செல்லலாமா? வேண்டாமா?
மனம் சஞ்சலத்தது
தீபாராதனை காட்டும்போது
நெஞ்சுக் கூட்டில்
மேலும் படபடப்பு
முகத்தில் ஒரு கவலை
திருநீறு பூசியதும்
ஓடிச் சென்று
அடித்து பிடித்து
அந்தக் கடைசி தருணத்தில்
வாங்கியாகிவிட்டது
பொங்கல் பிரசாதம்
கடவுளைக் கண்டேன்
இன்னைக்கு
திவ்ய தரிசனம்ங்க
என்று வழியில்
பார்ப்போரிடமெல்லாம்
சொல்ல முடிந்த்து
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
24 comments:
அட சூப்பருங்க... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வயிறு நெறைஞ்சிருந்தா தான் சாமியும், சம்பிரதாயங்களும்.....!
ஆரம்பமே அமர்க்களம் வேலு .
ஆனா பாருங்க... பொங்கலை கலாநேசன் அள்ளிக்கிட்டாரு.
வாங்க சத்ரியன். உங்களுக்கு இல்லாமலா...சேர்ந்தே சாப்பிடுவோம்.
எல்லாத்துக்குமே இருக்குதுங்க
ஆனா மொதல்லயே போயிடனும்
நானெல்லாம் ராத்திரியே துண்டை போட்டு வெச்சுட்டு வந்துடுவமில்ல
தங்கள் வருகைக்கு நன்றி சத்ரியன் மற்றும் கலாநேசன்
வயிறு நிறைந்தாலே மனம் நிறையும்.சாமியும் தெரியும்.
2011 நல்லாதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் வேலு!
மிக்க நன்றி ஹேமா உங்களுக்கும் இவ்வாண்டு சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்
அருமை வேலு. புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க நன்றி வானம்பாடிகள்
தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல பொங்கல் போராட்டம்.
சூப்பர் வேலு..
புத்தாண்டு மற்றும் "பொங்கல்" வாழ்த்துக்கள் :)
If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.
மிக்க நன்றி சிவகுமாரன்
மிக்க நன்றி கௌசல்யா
மிக்க நன்றி இனியவன்
மிக்க நன்றி அன்பரசன்
மிக்க நன்றி சர்பத்
அட....
சூப்பர் அண்ணா... :)
மிக அருமை வேலு.. எல்லாரும் நினைப்பதுதான் இது.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்லா இருந்துச்சுங்க பொங்கல்.
நல்லா இருந்துச்சுங்க பொங்கல்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி அகல்விளக்கு
நன்றி தேனம்மை லெஷ்மணன்
நன்றி சிவகுமாரன்
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
வயிறு அடங்கினால்தான் மனசு அடங்கும். அதனால்தான் அப்போதே கோவில்களில் பிரசாதம் வைத்து விட்டார்கள்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ரிஷபன்
Post a Comment