Thursday, January 13, 2011

மார்கழி காலைகள்

அதிகாலை
ஐந்துமணி அலாரம்...
கடிகாரம் கண்டறிந்தவனை
கண்டபடி திட்டியபின்
கொதிக்கும் வெந்நீர்
குளியல் உடம்புக்கு
வெளியே...
சுடச்சுட காப்பி உடம்புக்கு
உள்ளே...

வழக்கமான உடைகளுக்கு
மேலே ஸ்வெட்டர்
தலைக்கு குல்லா
கைக்கு உறை எனும்
முப்பெரு (தெய்வக்) காவல்

கோவில் பிரகாரம் சுற்றி
குருக்கள் தேவாரம் கேட்க
வீட்டுத் தாழ்வாரக்கதவு
சாத்தினோமாவெனுங் குழப்பம்
தீபாராதனை நடுவே
பையன் எழுந்து
பல் துலக்கினானோ
பெண் எழுந்து
பெட் காப்பி குடித்தாலோ
எனுங்கவலை

திருவாசகத்துக்கு உருகாமல்
சர்க்கரைப் பொங்கலுக்கு உருக
மலங்க மலங்க விடிகிறது
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்நாட்கள்

6 comments:

Unknown said...

நல்கவிதை...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Chitra said...

nice....

HAPPY PONGAL!

பிரதீபா said...

:)

சென்னை பித்தன் said...

சூடான சக்கரைப் பொங்கலில் ஊற்றிய நெய்யுருக,அதைப் பார்த்து நா ஊற,மனமும் உருகுவது இயற்கைதானே!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

VELU.G said...

நன்றி கலாநேசன்

நன்றி சித்ரா

நன்றி பிரதீபா

நன்றி சென்னை பித்தன்

ரிஷபன் said...

அவங்கவுங்க டேஸ்ட் அவங்கவுங்களுக்கு!

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...