மறுபடியும்
பாற்கடலைக் கடைந்தபோது
வெண்ணைதான் வந்ததாம்.
கோபத்தில்
சிவன் தொண்டையில்
இருந்த விஷத்தை கக்கியதும்
இருமல் சரியானது.
பெனடிரில் சிரப்
ஒத்துக்கொள்வதில்லை
இப்போதெல்லாம்.
பிரம்மச்சுவடி
தொலைந்த வருத்தத்தில்
அரிச்சுவடி படிக்க
ஆரம்பித்து விட்டார் பிரம்மா.
எட்டாம் வாய்ப்பாட்டிற்குமேல்
வரவில்லையாம்
சிவன், பிரம்மா, விஷ்னு
மூவரும்
ஒன்றாம் வகுப்பிலிருந்தே
நண்பர்கள்தான் என்றாலும்
அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
தொழில்கள் வேறு வேறு.
நடுத்தரக் குடும்பங்கள் தான்
என்றாலும்
குகை மலைகள் தான்
வீடு என்பதால்
வாடகை தொல்லை இல்லை.
சூரியன் சந்திரனென்று
பவர்கட் எப்போதுமில்லை.
வாகனங்களுக்கு
பெட்ரோல் பிரச்சனையுமில்லை.
மனிதர்களுக்குத் தான்
எல்லாமே.
Friday, December 17, 2010
Monday, December 13, 2010
சரியோ தவறோ....
இதுசரி இதுதவறு
என்று
அம்மா சொன்னாள்
அப்பாவும் அதையே
சொன்னார்.
மாமாவும் அத்தையும்
வேறு மாதிரி
சொன்னார்கள்
நண்பர்கள் இன்னும்
வேறு மாதிரி
சொன்னார்கள்.
எல்லாவற்றையும் குழப்பி
நானொன்றை செய்தால்
தவறென்றனர்
எல்லோருமே.
எல்லோருக்கும் சரி
என்று
இங்கே ஏதுமில்லை.
சரியோ தவறோ.....
நேரே செய்துகொண்டிருப்பதால்
உணரப்படுகிறது
என் இருப்பு
ஒரு கடவுளைப்
போலில்லாமல்.
என்று
அம்மா சொன்னாள்
அப்பாவும் அதையே
சொன்னார்.
மாமாவும் அத்தையும்
வேறு மாதிரி
சொன்னார்கள்
நண்பர்கள் இன்னும்
வேறு மாதிரி
சொன்னார்கள்.
எல்லாவற்றையும் குழப்பி
நானொன்றை செய்தால்
தவறென்றனர்
எல்லோருமே.
எல்லோருக்கும் சரி
என்று
இங்கே ஏதுமில்லை.
சரியோ தவறோ.....
நேரே செய்துகொண்டிருப்பதால்
உணரப்படுகிறது
என் இருப்பு
ஒரு கடவுளைப்
போலில்லாமல்.
Monday, December 6, 2010
இன்டலிஜன்ட் பெர்ஷன்.....
இந்த வருட
இன்டலிஜன்ட் பெர்ஷன் விருது
எங்கள் நிறுவனத்தில்
எனக்கு கிடைத்த்து.
விற்பனை சம்பந்தமாய்
நான் வகுத்த
விதிமுறைகளில்
அள்ளிய லாபம்
அலுவலக நிமித்தம்
நான் செய்த
மாற்றங்களில்
கிடைத்த பலன்கள்
கிளை மேலாளருக்கோ
பெருமை
சக ஊழியர்களுக்கோ
மகிழ்ச்சி
நான் போடும் கணக்குகள்
எப்போதும் தப்பாதென
என்னைத்தெரிந்த
எல்லோருக்கும்
தெரியுமென்றாலும்
குழம்பி விடுகிறது மனது
முத்தின முருங்கை
மூன்று ரூபாய்
அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி
மானத்தை வாங்குகிறாரே
எனும் என் மனைவியிடமும்
நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு
மிஸ் திட்றாங்கப்பா
இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்
எனும் என் மகனிடமும்.
இன்டலிஜன்ட் பெர்ஷன் விருது
எங்கள் நிறுவனத்தில்
எனக்கு கிடைத்த்து.
விற்பனை சம்பந்தமாய்
நான் வகுத்த
விதிமுறைகளில்
அள்ளிய லாபம்
அலுவலக நிமித்தம்
நான் செய்த
மாற்றங்களில்
கிடைத்த பலன்கள்
கிளை மேலாளருக்கோ
பெருமை
சக ஊழியர்களுக்கோ
மகிழ்ச்சி
நான் போடும் கணக்குகள்
எப்போதும் தப்பாதென
என்னைத்தெரிந்த
எல்லோருக்கும்
தெரியுமென்றாலும்
குழம்பி விடுகிறது மனது
முத்தின முருங்கை
மூன்று ரூபாய்
அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி
மானத்தை வாங்குகிறாரே
எனும் என் மனைவியிடமும்
நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு
மிஸ் திட்றாங்கப்பா
இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்
எனும் என் மகனிடமும்.
Wednesday, December 1, 2010
ஒரு துறவியுடன் சில கேள்விகள் - 3.......
நரேன் உன் வார்த்தைகள் மிகக் கடுமையாக உள்ளன. உனக்கு யார் மீது கோபம்?
தவறிருந்தால் மன்னியுங்கள் சாமி. எனக்கு யார்மீது கோபம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என் ஆத்திரத்தை அப்படியே கொட்டிவிட அனுமதியுங்கள். பிழையிருந்தால் பொறுத்துக்கொள்ளவும் சாமி.
சரி கேள் நரேன். கடமையைச் சரிவரச் செய்யும் எல்லா ஆன்மாக்களுக்குமே அதன் பலன் உண்டு. நீ கடவுளை நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அவரவர் வினைகளின் படி அதன் பலனை அனுபவிக்கும் பாக்கியத்தை பெறுவர் என்று நான் கற்ற வேதங்கள் சொல்கின்றன.
அப்புறம் நீங்கள் ஏன் அந்த இல்லறவாசியை உங்கள் ஆன்மிக உரைகளுக்கு இழுக்கிறீர்கள். விட்டு விடுங்களேன் உங்கள் போதனைகளை. அவன் பாட்டுக்கு அவன் பலனை அனுபவித்து விட்டு போகிறான்?.
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா அது அப்படி இல்லை நரேன். நான் கற்ற வேதங்கள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்னதான் கடமைகளைச் செய்தாலும் நம்மை படைத்த கடவுள் நமக்கு வாழும் வழிவகையும் செய்து இப்புவியில் நமக்கு துணையாக இருக்க பல உயிர்கள், தாவரங்கள் என பலவற்றை படைத்து நமக்கு பக்க பலமாக இருக்கச் செய்தவனுக்கு நம் ஒரு நன்றியாவது செலுத்த வேண்டாமா?.
சரி இல்லறவாசியை விடுங்கள் சாமி ஒரு துறவி எதை நோக்கிச்செல்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன?
ஓரு துறவி இறைநிலை நோக்கியே பயணிக்கிறான். அவன் அதற்காக பல யோகங்கள், தியானங்கள் என்று சதா இறையையே நினைத்துப் பயணிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் தன்னுள்ளே கலந்து தன்னையே இறையாக கானவும் “தான்” என்ற எதுவும் இல்லை என உணரவும் செய்கிறான்.
ஞானமடைதல் என்கிறார்களே அது இதுதானா சாமி?
இருக்கலாம். நான் அதைப்பற்றி இன்னும் தெளிவாக விளக்க முடியவில்லை.
சிலர் நான் ஞானமடைந்து விட்டேன் என்று மக்களுக்கு போதனை செய்யக் கிளம்பி விடுகிறார்களே சாமி இது சரியா? .
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா என்னை விடமாட்டாய் போலிருக்கிறது?. எனக்குத் தெரிந்து ஒரு துறவி தன் ஞானமடைதலுக்கு பின்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு பின் சிந்தனைகளுக்கு வேலை இல்லை. சிந்தனையை நிறுத்திய பிறகு தான் அனைத்துமே சித்தியாகும்.
சாமி புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள், இந்து மதத்தில் நிறைய ஞானிகள் என்று இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தோன்றி இந்த உலக மக்களுக்கு எத்தனையோ விதமான நல்ல கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்.
உனக்கு அதிலென்ன சந்தேகம்?.
எல்லா ஞானிகளுமே இறைவனைப்பற்றி ஒருமித்த கருத்து ஏதும் சொல்லவில்லை. எல்லாருமே அவரவர் காலங்களில் அந்தந்த நிலையில் இருந்தே தங்கள் கருத்துக்களை சொல்லயுள்ளனர். அவர்கள் எல்லோரையும் தவறு சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும்.....
என்றாலும்?!!!!!!!!!!!!!!!!!!!!!!.....
நாம் இன்னும் கடவுள் என்ற த்த்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று சந்தேகம் வருகிறது?
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா நரேன் மிக சமார்த்தியசாலி நீ கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று என்னிடமே கேட்கிறாய்?. இல்லையா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா..............
நரேன் நீ மற்றவர்களைப் போல அல்ல. உன்னுடைய கேள்விகள் அடுத்த தலைமுறைக்கு நிறைய செய்திகளை சொல்ல வேண்டும். நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த மனிதர்களிலிருந்தோ, இப்போது வாழும் மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இனி ஏதுமில்லை. நீ உனக்குள் தேடு. உன்னிடமே எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும். நீ உன்னையே கேள். இங்கே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள எல்லாருக்கும் சம வாய்ப்புகள் தான். ஒரு துறவிக்கு ஒரு ஞானிக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளனவோ அதுவே எல்லா மனிதர்களுக்கும். உன் கேள்வி என்கிற பூட்டிற்கு நீயே தான் சாவி. உன்னையே அதற்குள் நுழைத்து தெரிந்து கொள். இருக்கும் போதே உணர்ந்து கொள் அப்போது தான் இல்லாமல் போவதில் அர்த்தம் இருக்கும்.
கடவுள் இருக்கிறாரா?, இல்லையா? அவர் வியாபாரியா?, பஜனை கோஷ்டிகளின் தலைவனா? எல்லாம உனக்கே தெரியும் வகையில் தான் இங்கே எல்லாமே இருக்கிறது. நானும் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதால் காலத்தின் கட்டாயம் இருந்தால் மீண்டும் சந்திப்போம். வருகிறேன்.
கிளம்பி விட்டார்.

Subscribe to:
Posts (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...

-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
கோயில் வாசலில் கால் வைத்ததும் பார்த்தாகி விட்டது, முழுதாகத்தான் இருக்கிறது. வெளிப்பிரகாரம் சுற்றுகையில் பாதியாகி விட்டது மனம் கொஞ்சம் படபடத்...
-
யோசித்து வைத்திருக்கிறேன் உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத.... ஒரு கவிதையை மறுபடியும் கவிதையாய் வடிக்கமுடியுமா தெரியவில்லை...... ந...