Thursday, October 7, 2010

அசுத்த வெளி

மெல்ல வரும் தென்றல் காற்று
கார்பன்-டை-ஆக்ஸைடோடு கலந்துவரும்
சுழித்து நுரைத்து ஓடும் ஆறு
ஆர்சனிக் கந்தகம் கரைத்து வரும்
என்று தொலையும் இந்த அசுத்தம்
நெஞ்சு நிறுத்திக் கூவும்போது
தெருவினிலே போகும்லாரி
காது சவ்வை கிழித்துப் போகும்
அதிசயமாய் நின்று விழிவிரியப் பார்க்க
ஆயிரம் வாட்ஸ் விளக்கொன்று
கண் அவித்துப் போகும்
ஆங்காங்கே வெடிக்கும்

ஆர்டிஎக்ஸ் குண்டுகளில்
தப்பித்தபின் வேண்டும்

எதிர்கால கனவுகள்.
எங்கோ ஒரு நாட்டின்

அணு உலை வெடிக்க

பிளவுண்ட கதிரின் தாக்கம்
நம் உயிருள் கலவாதிருக்க
ஆண்டவன் அருளே காக்கும்
அத்தனை அழிவிலிருந்தும்
தப்பித்து வாழும் நமக்கேனும்
அண்டும் கனவுகள் விரட்டி
சுத்தமா(க்)கும் எண்ணம் வேண்டும்.

25 comments:

nis said...

வல்லரசுகளின் சதி

தமிழ் உதயம் said...

மனித வாழ்க்கை, கனவு... அக்கறையுடன் கூடிய ஒரு அழகான கவிதை.

vasu balaji said...

கனவு கூட பயந்துதான் வருது:(

Chitra said...

மனதில் கொஞ்சம் கலவரம் ......

ஹேமா said...

அசுத்த அதிர்வுகளின் வேதனைகளை விதம் விதமாக அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறோம் !

எல் கே said...

அறிவியலின் விளைவு

பவள சங்கரி said...

நிதர்சனத்தைக் கவிதையாக்கிய பாங்கு அருமை........வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

நெஞ்சை அச்சம் கொள்ள செய்யும் நிஜங்கள்....அதை உங்கள் கவிதையில் உருக்கமாக உணர்த்தி விட்டீர்கள்.

sakthi said...

உங்கள் ஆதங்கம் கவிதையாய் வெளிப்பட்டுள்ளது

அம்பிகா said...

இன்றைய சூழலுக்கு மிக அவசியமான கவிதை.

ஈரோடு கதிர் said...

ஆண்டவன்(!)களால் தானே இத்தனையும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

முதலில் வெட்டவெளி அசுத்தமானது
இன்று விண்வெளியும் அச்சுறுத்தலாய்.

வேள்வியில் நன்மை பயக்குமெனில் உங்கள் கேள்வியும் நம்மை காக்கட்டும்.

இயற்கையின் பெருமையை உணர்வோம்... அதனை பேணி காப்போம்...

எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம்.

Vetirmagal said...

Superb!

அஹமது இர்ஷாத் said...

True..

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

சுந்தரா said...

சமூக அக்கறை தொனிக்கிற கவிதை.

அருமை வேலுஜி!

VELU.G said...

நன்றி nis

நன்றி தமிழ் உதயம்

நன்றி வானம்பாடிகள்

நன்றி அருண்பிரசாத்

நன்றி சித்ரா

நன்றி ஹேமா

நன்றி LK

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி kousalya

நன்றி சக்தி

நன்றி அம்பிகா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி தஞ்சை வாசன்

நன்றி vetrimagal

நன்றி அஹமது இர்ஷாத்

நன்றி sweatha

நன்றி சுந்தரா

மோகன்ஜி said...

சமுதாயப் பிரக்ஞையுடன் அழகான புனைவு!

மங்குனி அமைச்சர் said...

கண்டிப்பாக மாற்றப் படவேண்டிய ஒரு விஷயம்

thiyaa said...

அழகான கவிதை

Thenammai Lakshmanan said...

தப்பித்து வாழும் நமக்கேனும்
அண்டும் கனவுகள் விரட்டி
//

டெர்ரரா இருக்கே வேலு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகான கவிதை வாழ்த்துக்கள்...

விமலன் said...

மனம் பிழிந்த நல்ல கவிதை

ரிஷபன் said...

தவிப்பு அப்படியே மனதில் பதிந்து போனது.

VELU.G said...

நன்றி மோகன்ஜி

நன்றி மங்குனி அமைச்சர்

நன்றி தியோவின் பேனா

நன்றி தேனம்மை லெஷ்மணன்

நன்றி பிரஷா

நன்றி விமலன்

நன்றி ரிஷபன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...