Tuesday, November 16, 2010

நீ சொன்னது போல் அம்மா.....


நீ சொன்னது போல் அம்மா
உயில் எல்லாம் பிரித்தாகிவிட்டது
தம்பியோடு இனி என் சண்டை ஏதுமில்லை
அப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன்.
கடன் எல்லாம் அடைத்து விடுகிறோம்.

நீ சொல்வது போல் அம்மா
ஏழைகளுக்கு தானம் செய்துவிடுகிறோம்..
பண்டிகைக்கு உறவினரை..
அழைத்து விருந்து போடுகிறோம்..
உறவுகளில் பகை ஏதும் கொள்ளவில்லை..

நீ சொல்வது போல் அம்மா
கோவிலுக்கு நம்பங்கை கொடுத்துவிடுகிறோம்...
என் பிள்ளைக்கு குலதெய்வக்கோவிலில்
முடிவாங்கி மொட்டை போட்டுவிடுகிறோம்.....
முன்னோர் சாந்தியடைய திதியெல்லாம்
கொடுத்து விடுகிறோம்...

நீ சொல்வது போல் அம்மா
எல்லாம் செய்த நான்
எப்படியம்மா செய்வேன் இதை...
ஏழுகடல் மலைதாண்டி எதையும்
செய்ய வலிமையுள்ள எனக்கு
ஒரு ஊருக்கு வழியனுப்புவதைபோல்
என் காலம் முடிந்தது
எனக்கு விடைகொடுங்கள் என்கிறாயே...
எப்படியம்மா செய்வேன் இதை....

14 comments:

தமிழ் உதயம் said...

யாரால் தான் முடியும். தம் தாயை வழியனுப்ப.

அன்பரசன் said...

உணர்வுப்பூர்வமான பதிவு.
Nice.

Unknown said...

மிகவும் உருக்கமான கவிதை ....

sakthi said...

வேலு மனசை கொஞ்சம் அசைச்சுட்டீங்க

Ravi kumar Karunanithi said...

//நீ சொல்வது போல் அம்மா
எல்லாம் செய்த நான்
எப்படியம்மா செய்வேன் இதை...
ஏழுகடல் மலைதாண்டி எதையும்
செய்ய வலிமையுள்ள எனக்கு
ஒரு ஊருக்கு வழியனுப்புவதைபோல்
என் காலம் முடிந்தது
எனக்கு விடைகொடுங்கள் என்கிறாயே...
எப்படியம்மா செய்வேன் இதை....//

i like this line so much

Unknown said...

உண்மையான வரிகள்...உருக்கமாய்...

க ரா said...

ரொம்ப உருக்குதுங்க மனச

vasu balaji said...

செம ஜீவி:(

ஹேமா said...

அழவைக்கிறீர்களே வேலு !

Unknown said...

மிகவும் உருக்கமான வரிகள்.. படிச்சவுடனே கஷ்டமாயிடுச்சு..

தமிழ் said...

:((

ரிஷபன் said...

அப்படியே என் உணர்வுகளும்.. அனுப்பிவிட்டு ஒரு வருடம் போய் விட்டது.. அம்மா இல்லாமல்.

எஸ்.கே said...

அற்புதமான கவிதை!

VELU.G said...

நன்றி தமிழ் உதயம்

நன்றி அன்பரசன்

நன்றி கே.ஆர்.பி. செந்தில்

நன்றி சக்தி

நன்றி Ravikumar Karunanithi

நன்றி கலாநேசன்

நன்றி இராமசாமி கண்ணன்

நன்றி வானம்பாடிகள்

நன்றி ஹேமா

நன்றி பதிவுலகில் பாபு

நன்றி திகழ்

நன்றி ரிஷபன்

நன்றி எஸ்.கே

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...