Friday, November 19, 2010

கடவுள் நிலை.......

ஒரு மழைநாளை ரசித்துக்கொண்டிருக்கும் போது அருகில் வந்தமர்ந்த என் மகள் கேட்டாள்

அப்பா கடவுள் உங்கள் முன் தோன்றி நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டாள் என்ன சொல்வீர்கள் என்றாள்.

யோசித்தபடியே சொன்னேன் நான் பறவையாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்வேன் என்றேன்.

விலங்குக்ள் உங்களை கொன்று விடுமே என்றாள்.

சரி விலங்காக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றேன்.

மனிதர்கள் உங்களை கொன்று விடுவார்களே என்றாள்.

சரி மனிதர்களாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றேன்.

பாக்டீரியா, வைரஸ் என்று நிறைய கிரிமிகள் காய்ச்சலை ஏற்படுத்தி உங்களை அழித்துவிடுமே என்றாள்.

அப்படியானால் வைரஸ்ஸாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றேன் புத்திசாலித்தனமாக.

அதற்கு மேல் பேசாமல் கொஞ்ச நேரம் யோசித்தாள்.

சரி வைரஸ்ஸிற்கு எந்த பிரச்சனையுமே இருக்காதா அப்பா என்றரள்.

இருக்கலாம். மனிதர்களின் மருந்துகள் இல்லாமல் அதைவிட நுண்ணிய கிருமிகளால் கூட அதற்கு ஆபத்து இருக்கலாம் யார் கண்டது என்றேன்.

அப்படியானால் உயிராக இல்லாமல் ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன... புள்ளியாக இருந்தால் பிரச்சனை வராதா? என்றாள்.

அந்த புள்ளியும் எப்படியும் ஒரு சமயம் ஏதாவது ஒன்றால் அழிந்து விடும் என்றேன்.

மேலும் யோசித்தாள்.

அப்படியானால் அந்த புள்ளியும் இல்லாமல் போய் விட்டால், எதுவுமே இல்லாமல் போய்விட்டால் பிரச்சனை வராதா? என்றாள்.

இப்போது நான் யோசித்தேன். என்னடா இது சரியாக மாட்டிக்கொண்டோமோ, இதற்கு மேல் விளக்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டது.

யோசித்துக்கொண்டிருந்தேன்,

அவளோ விளையாட்டு எல்லாம் மறந்து விட்டு முழு கவனமாக என்னை பார்த்து கொண்டிருந்தாள்.

மெல்ல சொன்னேன். இது உனக்கு புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன் கேள். இது தான் கடவுள் தன்மை என்கிறார்கள். எதுவுமே இல்லாமல் ஒரு பொருளாய்.. ஒரு உருவாய் ஏன் ஒரு அருவமாய் கூட இல்லாமல் இயற்கையோடு ஒன்றி ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுவது தான் கடவுள் நிலை என்று மிகப்பெரும் ஞானிகள் சொல்லியுள்ளனர் என்றேன்.

ஒன்றுமே இல்லாமல் என்றால்... மகிழ்ச்சி, வருத்தம், ஆத்திரம் என்று எதுவுமே இருக்காதா அப்பா?.

எந்த உணர்வும் எந்த நிலையும் எந்த செயலும் இல்லாத ஒரு நிலை தான் கடவுள் நிலை. அந்த நிலையை அடையத்தான் எத்தனையோ ஞானிகள் அரும்பாடுபட்டுள்ளனர் என்றேன்.

போரடிக்காதா அப்பா? என்ன பெரிய கடவுள் நிலை...எதுவும் ஆகாமல் கல்லாட்டம் இருக்கறதுக்கு நாம் இப்படியே இருந்து விடலாமா அப்பா? என்றாள்.

கவலையோடு அவளைப் பார்த்தேன். மழை ரொம்ப வலுத்து விட்டது.

22 comments:

அருண் பிரசாத் said...

நல்ல கேள்வி! நல்ல விளக்கம்

Kousalya Raj said...

//போரடிக்காதா அப்பா? என்ன பெரிய கடவுள் நிலை...எதுவும் ஆகாமல் கல்லாட்டம் இருக்கறதுக்கு நாம் இப்படியே இருந்து விடலாமா///

ரொம்ப சிந்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிக அழகாக ஒரு கேள்வியை கேட்க வைத்து பதிவை முடித்து இருக்கிறீர்கள். பதிவு முடிந்து விட்டது.......கேள்விக்கு பதில்....?? தொடங்கி வைத்து இருக்கிறீர்கள்.......வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

யாரோட பொண்ணு அவங்க...

அப்பா பெயர நிலைநாட்டணுமில்ல...

:)

Unknown said...

குழந்தையும் தெய்வமும் ஒண்ணு.

அன்பரசன் said...

கேள்வியும் அதற்கான பதிலும் அருமை.

ஹேமா said...

கேள்வியும் பதிலும் இன்னும் இன்னும் கேள்விகளை எழுப்புகிறது !

சங்கரியின் செய்திகள்.. said...

நிறைய சிந்திக்கத் தூண்டிய பதிவு......வாழ்த்துக்கள்.

dheva said...

வேலு...@

செம....!!!!!

விளங்க முடியா ஒரு உணர்வுபூவமான விசயத்தை...எளிமையா சொல்லியிருக்கீங்க...


சூப்பர் பாஸ்!!!!!!

Thenammai Lakshmanan said...

அருமை வேலு..:))

KARMA said...

"எந்த உணர்வும் எந்த நிலையும் எந்த செயலும் இல்லாத ஒரு நிலை தான் கடவுள் நிலை. அந்த நிலையை அடையத்தான் எத்தனையோ ஞானிகள் அரும்பாடுபட்டுள்ளனர் என்றேன்.
போரடிக்காதா அப்பா? என்ன பெரிய கடவுள் நிலை...எதுவும் ஆகாமல் கல்லாட்டம் இருக்கறதுக்கு நாம் இப்படியே இருந்து விடலாமா அப்பா? என்றாள்."

தவறான புரிதல்.

மனத்தின் வெளிப்பாடுகள் தான் மேற்சொல்லப்பட்ட அனைத்து உணர்வுகளும்.
மனதின் எல்லைகளுக்குபட்ட எதுவும் (இடையில் மகிழ்ச்சி போல் தோன்றினாலும்) இறுதியாக சோகத்தில் தான் முடியும் என்பதே புத்தன் கண்ட உண்மை.

மனமற்ற வெளிநோக்கி பயணிப்பது மட்டுமே விடுதலை ஆகும். உணர்வுகள் அங்கு நிச்சயம் இருக்கும், மனமென்ற களங்கமின்றி தெளிவான இயற்கையோடு ஒன்றியதாயிருக்கும் அது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சமயத்தில் குழந்தைகள் குரு பீடத்தில்,
அமர்ந்து கொள்ள, பதில் தெரியாத நாம் குழந்தைகளாய்.....

VELU.G said...

நன்றி அருண் பிரசாத்

நன்றி கௌசல்யா

நன்றி அகல்விளக்கு

நன்றி கலாநேசன்

நன்றி அன்பரசன்

நன்றி ஹேமா

நன்றி நித்திலம் சிப்பிக்குள் முத்து

நன்றி தேவா

நன்றி தேனம்மை லெஷ்மணன்

நன்றி ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

VELU.G said...

Blogger KARMA said...
//மனமற்ற வெளிநோக்கி பயணிப்பது மட்டுமே விடுதலை ஆகும். உணர்வுகள் அங்கு நிச்சயம் இருக்கும், மனமென்ற களங்கமின்றி தெளிவான இயற்கையோடு ஒன்றியதாயிருக்கும் அது.
//

அன்பு நண்பர் KARMA.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

என்னுடைய கருத்து என்னவெனில் மனம்,உணர்வு,சிந்தனை எல்லாமே உடல் உறுப்புக்களோடு தொடர்புடையது. உடல் அழிந்த பின் உணர்வு, சிந்தனை என்பதெல்லாம் கிடையாது.

Chitra said...

போரடிக்காதா அப்பா? என்ன பெரிய கடவுள் நிலை...எதுவும் ஆகாமல் கல்லாட்டம் இருக்கறதுக்கு நாம் இப்படியே இருந்து விடலாமா அப்பா? என்றாள்.


..... நல்லா கேக்குராங்கையா டீட்டைலு!!! :-)

pichaikaaran said...

நல்லா கேக்குராங்கையா டீட்டைலு!!! :-) "

ஹா ஹா ஹா

VELU.G said...

நன்றி சித்ரா

நன்றி பார்வையாளன்

ஜீவி said...

அடுத்து அடுத்து என்ன கேள்வி வரும் அதற்கேற்ப என்ன பதில் என்று சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.
குழந்தைப் பருவம் தெய்வ நிலை தான் போலும்.

Anonymous said...

Nice
- Sakthi

சென்னை பித்தன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

VELU.G said...

நன்றி ஜீவி

நன்றி சக்தி

நன்றி சென்னை பித்தன்

Unknown said...

தீர்க்கமான கேள்விகள் ..

கல்லை சாமி என்றான்,
அது உன்னை காக்குமென்றான்..
உள்ளே வைத்து அதை
பூட்டி வைத்தான்...

VELU.G said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...