Saturday, November 27, 2010

ஒரு துறவியுடன் சில கேள்விகள்.......

எங்கள் ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார்.

ஒரு 60 வயதிற்கு மேல் மதிப்பிடலாம். நல்ல பொலிவான முகம். சாந்தமாய் நோக்கும் கண்கள். கொஞசம் தளர்ந்த நடை. காவி உடை, கையில் ருத்ராட்சம் இன்னொரு கையில் ஊன்றுகோல். கூடவே நாலைந்து சீடர்கள் என்று வந்திருந்தார். அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையாருடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருந்தனர். பெண்கள், பிள்ளைகள், ஆண்கள், முதியோர், இளைஞர் என வரிசையாய் ஆசிர்வாதம் பெறுவதும் பழம் கனிகளை அவருக்கு காணிக்கை கொடுப்பதுமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தன் ஆன்மீக உரையை தொடங்கினார்.

குரல் அப்படி ஒரு கணீர் குரல். அவரின் ஆன்மீக உரை கேட்பவர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டது. நடுவே பாசுரங்கள், பிரபந்த்த்திலிருந்து எடுத்துக்காட்டுகள் என எல்லோரையும் ஒரு மூன்று மணி நேரம் கட்டிப்போட்டு வைத்து விட்டார். பின்னர் ஓரு வாழ்த்துப்பாடலுடன் முடிக்க மக்கள் கூட்டம் அமைதியாய் கலைந்து சென்றது.

ஓய்வில் இருந்த மாலை நேரத்தில் நான் தனியாக அவரை அனுகினேன். வணக்கம் சாமி என்றேன். வா அப்பா இப்படி உட்கார் என்று சொன்னார்.

சாமி எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. அதை கேட்டு தெளிவு பெறலாம் என்று வந்தேன். தங்களுக்கு நேரம் இருக்குமா? என்றேன்.

இந்த காலத்து இளைஞர்கள் என்னைப்போன்ற துறவிகளை அனுகி சந்தேகம் என்று கேட்பதே பெரிய விஷயம். தாராளமாக கேள் அப்பா. முதலில் உன்னைப்பற்றி விவரங்களைக் கூறு என்றார்.

சாமி என் பெயர் நரேன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறேன். என் குடும்பம் பாரம்பரியம் மிக்க இந்து குடும்பம். நாள் தவறாது பூஜை செய்யும் என் தாய் மற்றும் கோவில் காரியங்களை முன்னின்று நடத்தும் என் தந்தை என்று எனது குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம். இருந்தாலும் என்னை குடைந்து கொண்டே இருக்கும் சில கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை, தாங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று வந்தேன்.

சரி சொல்லப்பா எனக்கு தெரிந்த விவரங்களை அவசியம் கூறுகிறேன் என்றார்.

நீங்கள் துறவியா? துறவியென்றால் ஏன் துறவியானீர்கள்? துறவு என்றால் என்ன?

ஒரு நிமிடம் திடுக்கிட்டார். பின்னர் மெதுவாக சிரித்தார்.

ஹ ஹ ஹ ஹ ஹா என்னப்பா இது ஆன்மீக கேள்விகள் அல்லது பொதுவான கேள்விகள் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். நீயோ என் சுயசரிதையை கேட்கிறாயே? என்றார்.

சாமி தாங்கள் என்னை தவறாக எண்ண வேண்டாம்? இதுவும் பொதுவான கேள்விதான். அதாவது மனிதர்கள் ஏன் துறவியாகிறார்கள். அதையே கொஞ்சம் மாற்றி உங்கள் அனுபவமாக கேட்டேன் அவ்வளவு தான் என்றேன்.

என்னை உற்றுப்பார்த்தார் “நீ நாத்திகனா?” என்றார்.

இப்போது நான் புன்னகைத்தேன் “சாமி நாத்திகமோ ஆத்திகமோ எல்லாமே ஒரு நிலைதானே தவிர அது தனிமனிதனை அடையாளப்படுத்துவதற்கு தேவையில்லாதது.

நான் ஆத்திகம் பற்றியோ நாத்திகம் பற்றியோ பேசவில்லை சாமி. எனக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். அதை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அவ்வளவுதான்?” என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தார்.

தம்பி உன்னுடைய எண்ணங்கள் புரிகறது. நீ நான் நினைத்தது போல் விளையாட்டுப் பையன் அல்ல. எனவே எனக்கு தெரிந்த விவரங்களை உனக்கு விளக்குகிறேன் என்று ஆரம்பித்தார்.



..
.sorry continue


13 comments:

Unknown said...

நான் ஒரு நாத்திகன் என்கிற வகையில் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

சென்னை பித்தன் said...

கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும்.
பற்றற்ற நிலையை எட்டும் எவருமே துறவிதான்;அதற்கான உடையோ,தோற்றமோ தேவையில்லை அல்லவா?அதற்கான வழி-
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.
துறவியின் பதிலுக்குக் காத்திருக்கிறேன்!

அகல்விளக்கு said...

ஆவலுடன் அடுத்ததை நோக்கி.....

சாமக்கோடங்கி said...

முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.. உங்கள் கேள்வியை யூகிக்க முடிகிறது.. பதிலை எதிர்பார்க்கிறேன்..

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

interesting ஆக ஆரம்பித்து இருக்கீங்க.... தொடருங்க....

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

அன்பரசன் said...

அடுத்ததை எதிர்நோக்கி...

எஸ்.கே said...

வித்தியாசமான ஆரம்பம் தொடரட்டும்!

பவள சங்கரி said...

நல்ல சுவாரசியமான பதிவு.......அடுத்த பகுதியை எதிர்பர்த்து காத்திருக்கிறேன் நன்றி.

எல் கே said...

தொடருங்கள் நண்பா

VELU.G said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி சென்னைப்பித்தன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே

நன்றி அகல்விளக்கு

VELU.G said...

தங்கள் வருகைக்கு நன்றி சாமக்கோடங்கி

நன்றி சித்ரா

நன்றி KANA VARO

நன்றி அன்பரசன்

நன்றி எஸ்.கே.

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி டK

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...