Saturday, June 26, 2010

என் முதல் தியான வகுப்பு.


ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது தினமும் எங்கள் ஊர் மைதானத்தில் கிரிக்கெட், புட்பால், பேட்மிண்டன், வாலிபால்னு சீஸனுக்கு தகுந்தமாதிரி விளையாடுவோம். அப்போ வோர்ல்ட் கப் புட்பால் மேட்ச் நடந்த சமயம் எப்பவும் புட்பால் தான் விளையாடுவோம். புதுசா ஒரு வேளாண் அதிகாரி எங்க கிராமத்தில வந்து தங்கியிருந்தாரு. அவரும் விளையாட வருவாரு ரொம்ப சின்ன வயசுதான். நல்ல சிகப்பா இருப்பாரு. பார்க்க ரொம்ப அமைதியான முகம். பேசறது ரொம்ப சாப்ட்டாத்தான் பேசுவாரு. எல்லோரோடும் ரொம்ப மரியாதையா பழகுவார்.


அப்படி ஒருநாள் விளையாட்டு முடிந்து பேசிக்கொண்டு இருக்கும் போது என்னோட சீனியர் அவரைப்பற்றி சொன்னார். அவர் கடந்த ஆறுவருடங்களாக ஒரு தியான வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் இவ்வளவு அமைதியா பொறுமையா இருக்காரு. அவர் தியானம் செய்வதினால் தான் இவ்வளவு சிகப்பா இருக்காரு. அவருக்கு கோபமே வராது அப்படின்னெல்லாம் சொன்னார்.

எனக்கும் அப்போது தியானம் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. நிறைய அதுகுறித்து புத்தகங்கள் படித்ததால், வாய்ப்பு கிடைத்தால் அதை முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது.

என்னோட இன்னொரு சீனியர், ‘நான் அந்த வகுப்பிற்கு போகிறேன். நீயும் வருகிறாயா?’ என்று கேட்க சம்மதித்தேன் சந்தோஷமாய்.

ஒரு மாலை நேரம். தியான வகுப்பு நடந்த இடம் ஒரு மாடி அறை. காற்றோட்டம் மிகுந்திருந்த்து. கூரை வேயப்பட்டு மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒரு துணி விரித்து அதில் அமர்ந்தேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன. பெட்ரும் விளக்கு மாதிரி சின்னதாய் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஒருவர் மைக்கில் சில வாக்கியங்கள் உணர்வுப்பூர்வமாய் சொல்ல அப்படி ஜிவ்வென்று பறக்கிறமாதிரி இருந்தது. பின் பொதுவான தியானம் முடிந்து எனக்கும் என் சீனியருக்கும் தனியாக முதல் பயிற்சியை கொடுத்தனர். அமைதியாக கண்களை மூடி ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தோம். மனம் இலேசாக இருந்தது.

அப்போதெல்லாம் தியான வகுப்புகள் இப்போது போல அவ்வளவு கமெர்ஷியலாக்கப்படவில்லை. வகுப்புகள் போல எடுப்பதுவுமில்லை. ஆட்கள் வருவதே குறைவு. வந்தவர்களையெல்லாம் அப்படியே அமரவைத்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் தியானம் மிக ரம்மியமாய் இருந்தது. நான்காம் நாள் தியானம் முடிந்தவுடன் நான் தேடிய ஞானம் எனக்கு கிடைத்து விட்டது. அதை முழுமையாக உணர்ந்தவுடன் தியான வகுப்பு போவதையே நிறுத்திவிட்டேன்.

எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’


19 comments:

அகல்விளக்கு said...

நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா...

நல்லாருக்கு....

பிரேமா மகள் said...

//ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது//

கணக்கு சரியா வரலையே? நீங்க வெள்ளைக்காரன் காலத்திலேயே காலேஜ் படிச்சவங்கன்னு இங்கிலாந்து கல்வெட்டில் இருக்கே?

Anonymous said...

Idhellam ungalukke konjam overa theriyala. -sakthi

dheva said...

நல்ல ஞானம்தான் வேலு....! ஹா...ஹா

ஈரோடு கதிர் said...

|| இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது ||

எல்லாம் பாலாசி கூட இருக்கிறது வர்ற குறும்பு

Chitra said...

படத்துல தியான நிலை நல்லா இருக்குது..... நீங்க சின்ன வயசுலேயே தியானம் பண்ண ஆரம்பிச்சிட்டதாக இந்த படம் சொல்லுதே.... :-)

கமலேஷ் said...

நல்ல பகிர்வு நண்பரே...போடவும் அருமையா இருக்கு...

Menaga Sathia said...

//நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா...// haa haa

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’ ///

ஹா ஹா ஹா.. :D :D
எந்தா ஒரு ஞானம்...

ரொம்ப நல்லா இருக்கு.. உங்க பதிவும், படமும்.. :-)))

Unknown said...

அதை முழுமையாக உணர்ந்தவுடன் தியான வகுப்பு போவதையே நிறுத்திவிட்டேன்...
SAME BLOOD..

ஹேமா said...

சிவப்பா மாறுறதுக்கும்
தியான வகுப்பா !

ரிஷபன் said...

எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’
ஹா..ஹா..
நான் போன கிளாஸ்ல அத நடத்தறவங்க போட்ட சண்டை.. பாலிடிக்ஸ்.. மேட்டர மட்டும் கத்துக்கணும்.. வேற விஷயம் பார்த்தால் கண்ணை மூடிக்கணும்னு அப்பதான் கத்துகிட்டேன்..

movithan said...

போட்டோ சூப்பர்.

கபிலன் said...

சுபவீ...ஒரு முறை சொன்னார்.....
தியானம் எல்லோருக்கும் அவசியமில்லை.
அதையும் ஒரு மருத்துவம் போலவே தேவைப்பட்டால் அணுகுங்கள் என்று.
அப்படியெனில் இவர்கள் தியானத்தின் பேரில் கல்லா கட்டுவது குறையும்.
கொஞ்சம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டு பாருங்கள்.
அவர்களின் சுயரூபம் வெளியில் எட்டிப்பார்க்கும்.
மற்றபடி...உங்கள் பதிவு...சிரிப்பை வரவைத்தது.
அந்த போட்டோ மிக அருமை.

என் கவிதைகளுக்கு தாங்கள் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.
தாமதமானதற்கு மன்னிக்க.

அன்புடன் கபிலன்.

VELU.G said...

நன்றி அகல்விளக்கு


//
June 26, 2010 3:18 PM
Delete
Blogger பிரேமா மகள் said...

//ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது//
கணக்கு சரியா வரலையே? நீங்க வெள்ளைக்காரன் காலத்திலேயே காலேஜ் படிச்சவங்கன்னு இங்கிலாந்து கல்வெட்டில் இருக்கே?
//
இங்கிலாந்தில் கல்வெட்டெல்லாம் இருக்கா?


நன்றி சக்தி

நன்றி தேவா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி சித்ரா

நன்றி கமலேஷ்

நன்றி மேனகாசத்யா

நன்றி ஆனந்தி

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி ஹேமா

நன்றி ரிஷபன்

நன்றி மால்குடி

நன்றி கபிலன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// அவர் தியானம் செய்வதினால் தான் இவ்வளவு சிகப்பா இருக்காரு//

ஆஹா... இப்படி ஒரு மேட்டர் எனக்கு யாருமே சொன்னதில்ல பாஸ்....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’//

அதானே பாத்தேன்... நமக்கு தெரியாமயா இருக்கும்னு அப்பவே சந்தேகம் தான்... ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Jokes apart - Dyaanam is an excellent thing if we learn it thru proper guru and will make a difference to our life...

VELU.G said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அப்பாவி தங்கமணி

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...