Monday, June 14, 2010

ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் வாழ்க்கை



ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் வாழ்க்கை நீண்ட கோடுகளாய் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்வுகளுக்கும் கணங்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் முடிவுறா எண்ணிக்கையில் மனிதர்களையும் பிற உயிர்களையும் தாங்கிசெல்லும் பூமி. நிகழ்ந்ததும், நிகழ்வதும், நிகழும்போல தோன்றுவதுமான வாழ்க்கையில் நிச்சயங்களற்றுப் போன பொழுதுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

என்னிலிருந்து என்னை பிரிந்தபோதே என்னுள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. நானே இவ்வுலகின் மையம் என்றெண்ணியபொழுது என்னை கடந்தவர்களின் காலங்களை நினைவில் நிறுத்தமுடியாமல் போய்விட்டது. புரிந்த்திலிருந்து புரியாததற்கும் புரியாததிலிருந்து புரிந்ததற்கும் உழண்டு கொண்டிருக்கிறது வாழ்க்கை. வீடுகள்,உறவுகள்,வேலைகள்,தொழில்கள்......................... சக்கரங்கள் சுற்றிக் கொண்டேயிருப்பதில் தேய்ந்து தேய்ந்து உயிர் மறைந்தே போய்விடுகிறது இருந்ததிற்கான சுவடில்லாமல்.

பிறப்பது,வளர்வது,இறப்பது............ இதே நிகழ்வுகள், இதே நிகழ்வுகள்................................ எண்ணிலடங்கா நிகழ்வுகள்.

பிரபஞ்சம், பால்வீதி, சூரியன்கள், நட்சத்திரங்கள், கோள்கள் விரிந்து கொண்டேயிருக்கிறது ஒரு எல்லையில்லாமல். நிறுத்தமுடியாமல் தடுமாறி நடுங்கும் நரம்புகள் ஒரு குடிகாரனின் தள்ளாட்டத்துடன் வெறித்தபடி இருக்கிறது நான்.

பூகம்பங்கள், சுனாமிகள், புயல்காற்று, பேய்மழை, கொடும் வெயில், உறைபனி, ஊழிக்காற்று என அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி களிநடனம் புரிகையில் மிரண்டு போய்க் கிடக்கிறது நான் உள்ளிருக்கவும் முடியாத வெளியேறவும் மாட்டாத பயத்துடன்.

வீரர்கள்,மாவீரர்கள்,அரசர்கள்,பேரரசர்கள்,ஞானிகள்,அறிஞர்கள்,விஞ்ஞானிகள்,கடவுளை கண்டோர், கானாதோர்,சாதாரணக் குடியானவன், விற்பவன், வாங்குபவன்...................எல்லோரையும் காலடியில் போட்டு மிதித்து மண்ணாக்கி விட்டு விரைந்து கொண்டிருக்கிறது காலம் எனும் பேய், தனை வெல்வாரில்லை என்ற அகந்தையுடன்............ குறுகிப் போய்க் கிடக்கிறது நான் ஒரு குற்றவாளிக்கான மிரட்சியுடன்.

போதும்..............................................................

நீ, நான் என்றாடும் விளையாட்டெல்லாம் விளையாட்டல்ல. உன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு காலம் ஆடும் விளையாட்டைப்பார்.

மழையாய் ஒழுங்கமைத்தும், பேய்மழையாய் அமைந்ததை கலைப்பதும்....

வெப்பமாய் இதமாக்குவதும், கொடும் வெயிலாய் உயிர்பறிப்பதும்..............

ஆழ்கடலில் அமைதியாய் இருந்துவிட்டு, உழன்று எழுந்தால் பூகம்பமாய்,

சுனாமியாய் கலவரம் செய்வதும்

தென்றலாய் தாலாட்டி, சுறாவளியாய் சின்னபின்னப்படுத்துவதுமாய்


காலம் ஆடும் விளையாட்டைப் பார்.


நீ, நான் என்றெல்லாம் ஒன்றில்லாமல் பிரபஞ்சமாய் பரந்து விரிந்து ஆகாசமாய்.. கோள்களாய், எரிநட்சத்திரங்களாய், கருங்குழியாய்.. இன்னபிறவுமாய் தினம் தினம் கொண்டாடும் தீபாவளியைப் பார்.


அகழ்தகழ்ந்து, ஆராய்ந்து நீ போட்டிருக்கும் விஞ்ஞானம் எனம் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு உன் வெறுங்கண்ணால் பார்.


பார்............ ரசி.............. சிரி......................


எழுந்து நில், கால்கள் பூமியில் பரவ எழுந்து நில், கைகளை உயரத்தூக்கு, வேகமாய் தட்டு, சத்தமாய் தட்டு, இடிமுழக்கமாய் தட்டு காலவெள்ளம் ஊளிக்காற்றாய் ஆடும் ஆட்டத்தில் நீயும் ஆடு, ஆடிக்கொண்டேயிரு...............


ஒரு புள்ளியிலிருந்து பயணித்து நீண்டகோடுகளாய் விரிந்து ஒரு புள்ளியாய் மறையும் வரை ஆடு. பிரபஞ்சத்தோடு இயைந்து ஆடு, நீயே பிரபஞ்சமாய், பிரபஞ்சமே நீயாய் ஆடு....................................................




17 comments:

அகல்விளக்கு said...

தத்துவம் நல்லாருக்கு ....

(பின்குறிப்பு : எல்லாரும் ஓடியாங்க....
எல்லாரும் ஓடியாங்க....
வேலு அண்ணாக்கு ஏதோ ஆயிடுச்சு...)

dheva said...

//ஒரு புள்ளியிலிருந்து பயணித்து நீண்டகோடுகளாய் விரிந்து ஒரு புள்ளியாய் மறையும் வரை ஆடு. பிரபஞ்சத்தோடு இயைந்து ஆடு, நீயே பிரபஞ்சமாய், பிரபஞ்சமே நீயாய் ஆடு....................................................//


வேலு சார் .. ஆட்டத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.... ஹா...ஹ... ஹ.. ! அருமையா இருக்க்கு ..வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

//உன் வெறுங்கண்ணால் பார்.//

ம்ம்ம்..

நல்லதொரு படைப்பு

பிரேமா மகள் said...

என்ன நடக்குது இங்கே?

Chitra said...

நீ, நான் என்றெல்லாம் ஒன்றில்லாமல் பிரபஞ்சமாய் பரந்து விரிந்து ஆகாசமாய்.. கோள்களாய், எரிநட்சத்திரங்களாய், கருங்குழியாய்.. இன்னபிறவுமாய் தினம் தினம் கொண்டாடும் தீபாவளியைப் பார்.


அகழ்தகழ்ந்து, ஆராய்ந்து நீ போட்டிருக்கும் விஞ்ஞானம் எனம் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு உன் வெறுங்கண்ணால் பார்.

....... அருமையான வரிகள்! ரொம்ப நல்லா இருக்குங்க....

vasu balaji said...

forcefull:)

Unknown said...

//அகழ்தகழ்ந்து, ஆராய்ந்து நீ போட்டிருக்கும் விஞ்ஞானம் எனம் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு உன் வெறுங்கண்ணால் பார்.//

ரசித்தேன்

Anonymous said...

iyarkayudanum kaalaththudanum iyainthu poividu enra ungal kootru iyarkayai, prabanchathayum nammal purinthukolla mudiyavillai enra aadhangaththayum appadiye purinthukondalum adhanai vella mudiyadhu enra iyalaamayayum velippaduthuvadhagave naan karudhukiren. sakthi

கமலேஷ் said...

ரொம்ப ரொம்ப நல்ல இருக்குங்க...வாழ்த்துக்கள் தொடருங்கள்..

VELU.G said...

நன்றி அகல்விளக்கு
(பின் குறிப்பு நான் நல்லாதான் இருக்கேன். யார் கீழ்பாக்கம் ஆஸ்பிட்டலுக்கு போன் பண்ணாங்கன்னு தெரியல. ஒரே தொல்லை)


நன்றி தேவா
ஆரம்பிச்சிடலாம். டிக்கெட் கவுண்டர யார் பாத்திக்கிறது

தங்கள் மதிப்பிற்கு நன்றி கதிர்

//
பிரேமா மகள் said...
என்ன நடக்குது இங்கே?
//
டாண்ஸ் ஆத்தா, சின்னப்புள்ளைங்கெல்லாம் இங்க வரக்கூடாது

தங்கள் மதிப்பிற்கு நன்றி சித்ரா

மிகவும் நன்றி வானம்பாடிகள்

ரசிப்பிற்கு நன்றி கலாநேசன்

புரிதலுக்கு நன்றி சக்தி

கமலேஷ் உங்கள் வாழ்த்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்

யுக கோபிகா said...

//நானே இவ்வுலகின் மையம் என்றெண்ணியபொழுது என்னை கடந்தவர்களின் காலங்களை நினைவில் நிறுத்தமுடியாமல் போய்விட்டது.//
உண்மை .....பிரபஞ்ச மையமும் ...நம் மையமும் ஒன்றாக வேண்டும்...

யுக கோபிகா said...
This comment has been removed by the author.
அ.முத்து பிரகாஷ் said...

புத்தரின் போதனை தான் ஞாபகத்திற்கு வருகின்றது தோழர் ...
" சாராவதி ! "
பார்... ரசி... சிரி...எழுந்து நில்...ஆடு ...
எத்தனை எளிமையாய் சொல்லி விட்டீர்கள் தோழர் ...
பாதையின் வரைபடத்தை !

VELU.G said...

மிகவும் நன்றி யுககோபிகா

தங்கள் புரிதலுக்கு நன்றி நியோ

Thenammai Lakshmanan said...

மிக அருமை வேலு

hayyram said...

//பிறப்பது,வளர்வது,இறப்பது............ இதே நிகழ்வுகள், இதே நிகழ்வுகள்................................ எண்ணிலடங்கா நிகழ்வுகள்.//

இதைத்தான் ஆதி சங்கரர் புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜகரே சயனம் என்று இவ்வுலகம் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருப்பதை அழகாகப் பாடியுள்ளார்.
அன்புடன் ராம்

www.hayyram.blogspot.com

VELU.G said...

நன்றி தேனக்கா

நன்றி ஹேராம்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...