Thursday, February 3, 2011

கல்கி வரட்டும்.....

ராமனும் சீதையும்
காட்டிற்கு சென்று
தேடியும்
விறகு கிடைக்கவில்லை

பிருந்தாவன்
பூங்கவானதிலிருந்து
கிருஷ்ணனும் வருவதில்லை

அக்னி முறுக்கு கம்பிகளால்
தூண்கள்
கெட்டியாகிவிட்டதால்
நரசிம்மராலும்
ஒளிய முடிவதில்லை

கோடாரியை
பழைய இரும்பிற்கு
போட்ட பரசுராமனுக்கும்
கதையை
பாதி விலைக்கு விற்ற
பலராமனுக்கும்
தொழில்களில்லை

மற்றபடி
கல்கி வந்தால்தான்
எல்லோருக்கும் நிம்மதி
அவனுக்கு
ஐ,டி கம்பெனியில்
பெரிய வேலையாம்
சம்பளமே பெரியதொகை
ஆனால்
குதிரையில் தான்
வருவானாம்

20 comments:

Unknown said...

வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

http://meenakam.com/topsites

http://meenagam.org

அன்புடன் அருணா said...

அருமையோ அருமை!பூங்கொத்து!

தீபிகா said...

நல்லாயிருக்கு..

இங்கும் வாங்க,
http://avanidamnaan.blogspot.com/

Chitra said...

Good one.

சிவகுமாரன் said...

அப்படிப் போடுங்க
அருமை

ஹேமா said...

கிண்டல் கூடிப்போச்சு வேலு உங்களுக்கு !

பிரதீபா said...

சூப்பரப்பு !!

rajasundararajan said...

//ஆனால்
குதிரையில் தான்
வருவானாம்//

நக்கல்!?

'குதிரை' என்பது துப்பாக்கியின் ஒரு பகுதி அல்லவா? இப்போது புரிகிறதா, கல்கி அவதாரம் இன்னதென்று? (இதுபோல், 'அஸ்வ:' என்பதின் பொருள்விளக்க ஸம்ஸ்க்ருத பண்டிதர்களை அழைக்கிறேன்.)

Kousalya Raj said...

பின்னிடீங்க போங்க...!!! :))

VELU.G said...

நன்றி அன்புடன் அருணா

நன்றி தீபிகா

நன்றி சித்ரா

நன்றி சிவகுமாரன்

நன்றி ஹேமா

நன்றி பிரதீபா

நன்றி கௌசல்யா

VELU.G said...

தங்கள் வருகைக்கு நன்றி ராஜாசுந்தர்ராஜன் சார்

இந்த அடியவனுக்கு தெரிந்த வரையில் அஸ்வ என்றால் குதிரை அல்லது வீரியமான (சக்தியான) என்று கேள்விபட்டிருக்கிறேன்.

ஆனால் தாங்கள் வேறுபொருள் இருப்பதாக எண்ணுகிறீர்கள் போல் தெரிகிறது.

யாரேனும் தெரிவித்தால் நானும் அறிந்து கொள்வேன்

நன்றி

Yaathoramani.blogspot.com said...

தற்போதுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன்
கவிதைகளும் கதையும் ப்ரமாதம்.
தொடர்ந்து வருவேன் தொடர வாழ்த்துக்கள்

VELU.G said...

வாருங்கள் ரமணி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

rajasundararajan said...

'அஸ்வ:' என்றால் ஏழு என்றும் பொருள்.

அது கிடக்கட்டும், அவதாரங்களையும் மனிதர் தம் மூளைக்கு எட்டிய அளவிலேயே கற்பித்தார் என்னும் உங்கள் நக்கலை வழிமொழிகிறவனே மற்றபடி நானும்.

VELU.G said...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி rajasundararajan sir

ஷர்புதீன் said...

பூங்கொத்து!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//அக்னி முறுக்கு கம்பிகளால்
தூண்கள்
கெட்டியாகிவிட்டதால்
நரசிம்மராலும்
ஒளிய முடிவதில்லை//

உங்கள் கவிதையை இங்கே சுவைத்தேன்.

உங்களை உணர்ந்தேன்.ஹாஸ்யத்திலும் கிண்டலிலும் நம்மை ஆற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது வேலுஜி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை..தொடருங்கள் வாழ்த்துக்கள்...

VELU.G said...

நன்றி ஷர்புதீன்

நன்றி சுந்தர்ஜி

நன்றி தோழி பிரஷா

மோகன்ஜி said...

ஸாரி! கொஞ்சம் லேட் ! உங்கள் கவிதையில் துள்ளும் நையாண்டி அருமை! அழகு!!

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...