Monday, February 7, 2011

அவதார் ............

பள்ளியில்
எல்லோரையும் விட

குள்ளமானவன் என்பதால்

கொஞ்சம்

செல்லமானவன் கூட

வாமணன் என்பது

என் பெயர்.


தோட்டக்கலை ஆசிரியர்

தோட்டவேலை செய்ய

எல்லோருக்கும்

இடம் ஒதுக்கும்போது

என்னையும் கேட்டார்

உனக்கு
எவ்வளவு இடம்

வேண்டுமென்று?


சார் என் காலில்

மூன்றடி போதுமென்றேன்

வழக்கம் போல.


பின் பெஞ்ச்

சுக்கிரன் கத்தினான்

சார், அவன் உங்களை

ஏமாற்றிவிடுவானென்று.


சுண்டுவிரலால்

அவன் கண்ணில்

குத்தவும்

அமைதியாய் அகன்றான்


ஆசிரியரோ

எடுத்துக்கொள் என்றார்.


முதல் அடியை அளக்க

காலை உயர்த்தினேன்

உலகத்தை ஏற்கனவே

அளந்து விட்டனர்

196936481 சதுர மைல்

விண்ணை அளக்கலாம்

என்றால்

அது வளர்ந்து கொண்டே

போகிறது.

நேரமாகி விடும்

பெல்லடித்து விடுவார்கள்


காலை மடக்கி

மூன்றடி அளந்தேன்

நிலத்திலேயே.


ஆசிரியர் புன்னகைத்தார்

அவர் தலை தப்பியது

எல்லோருக்கும்

இடம் கொடுத்தாகிவிட்டது,


சுக்கிரனுக்கோ

கண்ணில் வலி.

நமக்கோ நெஞ்சில்

அவதார் சினிமா தானோ?

10 comments:

Chitra said...

நான் Avatar பட விமர்சனம் என்று நினைத்து வந்தேன்.... ஹா,ஹா,ஹா,ஹா.... இறுதி வரிகளில், அந்த படத்தை பற்றி குறிப்பிட்டு இருப்பதை கண்டு சிரிப்பு வந்து விட்டது.

ஷர்புதீன் said...

:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு..

பிரதீபா said...

நிச்சயம் வித்தியாசம்- மிக ரசிக்கும்படி.

vasu balaji said...

:))

ஹேமா said...

எல்லாத்தயும் மாத்தி வச்சு நல்லாவே யோசிக்கிறீங்க வேலு.ஆனாலும் ரசிக்கக்கூடியதா இருக்கு !

அகல்விளக்கு said...

அவதாரம் பத்தின உங்க அவதாரம் சூப்பர் அண்ணா....

:-)

VELU.G said...

நன்றி சித்ரா

நன்றி ஷர்புதீன்

நன்றி வெறும்பய

நன்றி பிரதீபா

நன்றி வானம்பாடிகள்

நன்றி ஹேமா

நன்றி அகல்விளக்கு

Anonymous said...

Erode kusumbu enbadhu idhudhono....
Sakthi

இராஜராஜேஸ்வரி said...

அவதாரம் எடுத்தாச்சு!!

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...