கணினிக்கு அடிப்படை
மூன்று செயல்கள்
இன்புட் புராஸஸ் அவுட்புட்
உள்ளீடொன்றை தகவமைத்து
வெளியீடொன்றை தருவது.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
இதுவே அடிப்படை.
வளர்ச்சிக்கானதென்றால்
உணவை உட்செலுத்தி
ஜீரணித்து பிரித்தெடுத்து
கழிவை வெளியேற்றுவது....
உற்பத்திக்கானதென்றால்
விந்தை உட்செலுத்தி
அண்டத்தில் கலந்துருவாகி
புதியதை வெளியேற்றுவது.....
எல்லாமே செயல்கள் மூன்று.
ஒன்று இரண்டு மூன்று
நான்கு ஐந்து ஆறு
எல்லா அறிவிற்கும்
அதுவே பொதுவிதி.
உள்ளீட்டை அப்படியே
பயன்படுத்தும்
இருசெல் உயிரியோ
வெளியீட்டை திரும்ப
பயன்படுத்தும்
நான்கு.....
ஐந்து........
.........................................
செயல் உயிரியோ இல்லை.
ஒ
இருசெல் உயிரி
என்றெல்லாம் உள்ள இங்கே
ஒருசெயல் உயிரி
இருசெயல் உயிரி
என்றெல்லாம் எங்கே?
மரம்....செடி...கொடி....
மனிதர்....விலங்கு....பறவையென்று
டிசைன்கள் மட்டும் மாற்றி
ஒரு இயந்திரத்தைப்போல்……
ஒன்றையே திரும்பத்திரும்பச்
செய்யும் ஒன்றை
பேரறிவு பேராற்றல்
என்றெல்லாம் எப்படி
நம்புவது?
16 comments:
:-)
இப்படிக் கூட கவிழ்க்கலாமா???
நல்லாருக்கு அண்ணா...
ரொம்ப நல்லாருக்குங்க. எப்படிங்க இப்படில்லாம் யோசிகிறீங்க. :-).
:-)
மரம்....செடி...கொடி....
மனிதர்....விலங்கு....பறவையென்று
டிசைன்கள் மட்டும் மாற்றி
ஒரு இயந்திரத்தைப்போல்……
ஒன்றையே திரும்பத்திரும்பச்
செய்யும்
........ டிசைன் மாத்துனா mutilation/ defective design/ crazy/weird என்று சொல்லி பயப்படுவோம்ல.... அதான்.... :-)
மனிதன்: இறைவா, நீ இனிமேல் தேவையில்லாத ஒருத்தன் என்று நான் முடிவு செய்து விட்டேன்.
கடவுள்: அப்படியா! ஏன் இந்த முடிவு.
மனிதன்: இனிமேல் நானே உயிரை படைக்கும் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன், கல் மண்ணிலிருந்து அப்பா அம்மா இல்லாமல் நேரடியாக உயிர் உண்டாக்கும் வித்தையை
கண்டுபிடித்துவிட்டேன், படைக்கும் ஆற்றல் எனக்கு வந்து விட்டதால், இனிமேல் உனக்கு வேலை இல்லை.
கடவுள்: ஓஹோ, சரி எங்கே ஒரு உயிரை உருவாகிக் காட்டு பார்க்கலாம்!
மனிதன்: இதோ இப்போதே செய்து காட்டுகிறேன்.
[குனிந்து கீழே உள்ள மண்ணை அள்ளப் போனான் அந்த விஞ்ஞானி! ]
கடவுள் அவன் கையில் இருந்த மண்ணை பிடிங்கிக் கொண்டு சொன்னார்:
இந்த மண் நான் படைத்தது, நீ உன் சொந்தமாக மண்ணையும் படைத்து பின் அதிலிருந்து உயிரையும் படைத்துக் கொள்.
என்று சொல்லி மறைந்து போனார்!
இது ஒரு கற்பனைக் கதை தான். அனால் ஒரு விடயம், மனிதனால் இன்னமும் ஒரு செல் [அமீபா மாதிரி] உயிரியைக் கூட சோதனைச் சாலையில் உருவாக்க முடியவில்லை. இருந்தாலும் தலைக் கணம் மட்டும் எவ்வளவு? நியூட்டன், ஐன்ஸ்டீன் மாதிரி அறிவியலாளர்கள் மனித சமுதாயத்திலேயே தோன்றிய மேல் இரண்டு பேர் [Top 2] எனச் சொல்லலாம், அவர்கள் ஏன் இறைவன் இருக்கிறான் என்று நம்பினார்கள் என்று ஒருபோதும் யோசிப்பதில்லை இந்த அரை வேக்காடுகள். என்ன சொல்லியும் திருத்த முடியாதவர்கள்.
அட... புதுக் கவிஞர்...
வாழ்க வாழ்க..
கடவுளையே கவுக்கத் திட்டமா !சரிதான் !
கவுத்தீட்டீங்களே!!
நல்லா சொல்லி கவுத்தீங்க!! ரசித்து படித்தேன்!
நன்றி அகல்விளக்கு
நன்றி இராமசாமி கண்ணண்
நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி சித்ரா
உங்கள் கருத்துக்கு நன்றி ஜெயதேவா
நன்றி பிரேமா மகள்
நன்றி ஹேமா
நன்றி வடுவூர் குமார்
நன்றி ஜான் கார்த்திக் ஜெ
நல்லாக் கவுத்தீங்க.
Mookku Podappa irundha eppadiyellam yosikka vaikkum - Sakthi
நன்றி மகேஷ்:ரசிகன்
நன்றி சக்தி
wow...good one... good thought process... ippadiyum sollalamaa?
கவிழ்த்து விட்டீர்கள்....கணனியில் இருந்து கடவுள் வரை, உயிர் கலங்கள் வரை...
பேராற்றலை கவிழ்த்தலே சந்தோசம்தான் ;-)
Post a Comment