Thursday, June 24, 2010

மீன்களும் மனிதர்களும்

கடலோ ஆறோ

குளமோ குட்டையோ

கிணறோ....

மீன்கள் நீந்துகின்றன

நீருக்குள்....

நீரில் இருக்கும்

காற்றை சுவாசித்து...

நீரில் இருக்கும்

உணவை உட்கொண்டு...


கீழே மேலே நடுவே நீர்

எங்கெங்கும் நீர்...

நீரே உலகம்

நீரின்றி அமையாது

எம்மீனுக்கும் வாழ்க்கை...


மனிதர்களுக்கு மீன்கள்

விளையாட

வேடிக்கை பார்க்க

வேட்டையாடி உண்ண.....

.

.

.

சமதளமோ மலையோ

குன்றோ காடோ

பள்ளத்தாக்கோ...

மனிதர்கள் வாழ்கின்றனர்

காற்றுக்குள்.

காற்றில் இருக்கும்

காற்றை சுவாசித்து

நிலத்தில் இருக்கும்

உணவை உட்கொண்டு....


கீழே மேலே நடுவே காற்று

எங்கெங்கும் காற்று...

காற்றின்றி அமையாது

எம்மனிதர்க்கும் உலகு..


யாருக்கு மனிதர்கள்

விளையாட..

வேடிக்கை பார்க்க....

வேட்டையாடி உண்ண.....

15 comments:

Anonymous said...

Senthamil naattu makkalukkor narseithi. Engal velu.g kelvikku vidayalippavarkalukku aayiram porkasukal.- Sakthi

Unknown said...

முடிவு அருமை.

அகல்விளக்கு said...

நல்லா யோசிக்க வைக்கிறீங்க அண்ணா...

Chitra said...

யாருக்கு மனிதர்கள்

விளையாட..

வேடிக்கை பார்க்க....

வேட்டையாடி உண்ண.....


...... ஆஹா..... நல்லா கிளப்புறாங்க பீதியை...... ஹா,ஹா,ஹா,ஹா...


கவிதையில், உங்கள் சிந்தனை ரொம்ப நல்லா இருக்குங்க..!

ஹேமா said...

எப்போதும்போல சிந்திக்கவைக்கும் கவிதை.முடிவில அழகா சொல்லியிருக்கீங்க வேலு.

பிரேமா மகள் said...

நாமெல்லாம் கவிதை-எழுதறதுக்கு சாரி.. நீங்கெல்லாம் கவிதை எழுதறதுக்கு காரணமா இருக்கறாங்கல்ல அது வேட்டை..

அவங்களைப் பத்தி பேசி காலம் ஓட்டும் போது வேடிக்கை பொருளாகிறார்கள்..

.

Unknown said...

பஞ்ச பூதங்களில் காற்றும் , நீரும் இன்றி அமையாதவை.. இரண்டுக்குமான உருவகம் அற்புதம் ..

அன்புடன் அருணா said...

அட!

VELU.G said...

நன்றி சக்தி

நன்றி ஆறுமுகம் முருகேசன்

நன்றி அகல்விளக்கு

நன்றி வானம்பாடிகள்

நன்றி சித்ரா

நன்றி ஹேமா

நன்றி பிரேமா மகள்

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி அன்புடன் அருணா

அன்புடன் நான் said...

நியாயமான கேள்விதான்.

Anonymous said...

வரிகள் அருமை நண்பரே

ரிஷபன் said...

இரு கவிதைகளுமே அருமை.

VELU.G said...

நன்றி சி.கருணாகரசு

நன்றி படைப்பாளி

நன்றி ரிஷபன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...super

VELU.G said...

நன்றி அப்பாவி தங்கமணி

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...