உருவாக்கப்படுகிறது
ஒரு இயந்திரம்
மின்சாரம் பாய்ந்தவுடன்
உழைக்கத் தயாராகி
உற்பத்தியை தொடங்குகிறது...
அதன் கால எல்லையில்
தேய்ந்தும் தளர்ந்தும்
போனபின்பு
துண்டிக்கப்பட்ட மின்சாரத்துடன்
முடித்துக்கொள்கிறது
அதன் வாழ்க்கையை....
செல்ஃப் லைப் பேட்டரியுடன்
தயாராகிறது
ஒரு மனித இயந்திரம்
உற்பத்திக்காய்.........
சார்ஜ் தீர்ந்தவுடன்
நிறுத்திக்கொள்கிறது
அதன் இயக்கத்தை...
இல்லாததை
இருக்கிறதென்றும்
போகிறதென்றும்
வருகிறதென்றும்
எப்படிச் சொல்வது?....
டிஸ்கி 1) உயிர் என்று எதுவும் ஆகாயத்தில் இருந்து திடீரென்று வந்து
உடலில் புகுந்து கொள்வதில்லை. உயிர்ப்புடன் (self life battery)
ஏற்கனவே இருக்கும் ஒரு விந்தணு மூலமாக குழந்தை
உருவாகிறது என்பது எல்லோரும் அறிந்த அறிவியல் உண்மை.
அது ஒருகாலத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது.
அவ்வளவே.
கம்பெனி(FAMILY) பேட்டரிகளுக்கு வாரண்டி உண்டு.
2) இது ஒரு சின்ன மாற்றுச் சிந்தனையே. தங்களிடம் இருந்து
விமர்சனங்களை வரவேற்கிறேன்.
26 comments:
அப்படியானால் இயந்திரங்களின் உதவியில் உயிர் பிழைத்திருக்கும் ஒரு உயிரினம், அவை நீக்கப்படுகையில் இறந்ததாக மருத்துவ ரீதியில் சொல்லப் படுகிறதே. அப்போது இறப்பது எது? உயிர் என்பது எது?
//
வானம்பாடிகள் said...
அப்படியானால் இயந்திரங்களின் உதவியில் உயிர் பிழைத்திருக்கும் ஒரு உயிரினம், அவை நீக்கப்படுகையில் இறந்ததாக மருத்துவ ரீதியில் சொல்லப் படுகிறதே. அப்போது இறப்பது எது? உயிர் என்பது எது?
//
நன்றி வானம்பாடிகள். ஆக்ஸிஜன் மூலமாகவும், உணவுகள் மூலமாகவும், செயற்கையில் இயந்திரங்கள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. ஆனால் பாகங்கள் மிகவும் சேதமடைந்தால் ரீசார்ஜ் கூட பயனில்லாமல் போய்விடுகிறது. So, இங்கே உயிர் என்று நாம் கருதும் ஒன்றே தேவை இல்லை
வேலு......!
வாவ்....உண்மை...உண்மை... உண்மை...! நான் ஒத்துப் போகிறேன் உங்கள் கருத்துடன்.... !
சூப்பர் பாஸ்!
நல்ல மாற்று சிந்தனை. வாழ்த்துக்கள்.
100 சதம் வழிமொழிகிறேன்...
நீங்க யாரு செத்தாலும் அழக் கூடாது, ஏன்னா உடம்போட விலை அதற்குள்ள இருக்கும் பொருட்களை வைத்து கணக்கிட்டால் இருநூறு ரூபாய் தானாம். உங்க பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள், பெத்தவங்க யாரு செத்தாலும், நானே இருநூறு ரூபாய் கொடுத்துடறேன், அவங்க இருந்தப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தீங்களோ அதே மாதிரி, இந்த இருநூறு ரூபாயோட சந்தோஷமா இருங்க. அப்பா நாங்க நம்புறோம் நீங்க கொண்ட கொள்கையில உருதியானவர்னு. durai_kandasamy@yahoo.in
உசுரே போனாலும் முத்தங்களால் சார்ஜ் எற்றிகொள்ளலாம்
கவிதையில் சிந்திக்க வைக்கிறீர்கள் வேலு !நீங்கள் சொன்னதை சரியாகவே உண்ர்கிறேன்.
அப்படியானால் இயந்திரங்களின் உதவியில் உயிர் பிழைத்திருக்கும் ஒரு உயிரினம், அவை நீக்கப்படுகையில் இறந்ததாக மருத்துவ ரீதியில் சொல்லப் படுகிறதே. அப்போது இறப்பது எது? உயிர் என்பது எது?
...... I second it!
உயிரியல் சிந்தனையால்ல இருக்கு..
// இது ஒரு சின்ன மாற்றுச் சிந்தனையே. //
நோ பாஸ் ... இது மாற்று சிந்தனை அல்ல ... இது தான் சிந்தனை !
// இல்லாததை
இருக்கிறதென்றும்
போகிறதென்றும்
வருகிறதென்றும் //
இங்கே இருந்து தான் ஆரம்பிக்குது தோழர் நம் சமூகத்தோட பெரும்பாலான பிரச்சனைகள் ...
எதையும் எதுவாகவும் கற்பனை செஞ்சுக்காத போது தான் உண்மையை நாம் அறிய முடியும் ...
நான் யார் என்ற உங்கள் கேள்விகள் பெருகட்டும் ...
அத்துணை படைப்புகள் எங்களுக்கு கிடைக்கும் ...
நன்றி .. வருகிறேன் தோழர் !
மிக்க நன்றி தேவா
மிக்க நன்றி பாலமுருகன்
மிக்க நன்றி அகல்விளக்கு
//
Anonymous Anonymous said...
நீங்க யாரு செத்தாலும் அழக் கூடாது, ஏன்னா உடம்போட விலை அதற்குள்ள இருக்கும் பொருட்களை வைத்து கணக்கிட்டால் இருநூறு ரூபாய் தானாம். உங்க பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள், பெத்தவங்க யாரு செத்தாலும், நானே இருநூறு ரூபாய் கொடுத்துடறேன், அவங்க இருந்தப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தீங்களோ அதே மாதிரி, இந்த இருநூறு ரூபாயோட சந்தோஷமா இருங்க. அப்பா நாங்க நம்புறோம் நீங்க கொண்ட கொள்கையில உருதியானவர்னு. durai_kandasamy@yahoo.in
//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி துரை கந்தசாமி.
நான் ஏற்கனவே கூறியுள்ளபடி இது ஒரு மாற்று சிந்தனை தான். எப்போதும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுத்ததையே பாலோ செய்யாமல் வேறு மாதிரி யோசித்ததால் வந்த சிந்தனை தான் இது. இது தான் உண்மையென்றோ அல்லது இது என் கொள்கையென்றோ எதையும் நான் சொல்லவில்லை. மற்றபடி யாராவது செத்தால் அழுகிறேனா என்பது அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்ததே.
மேலும் இந்த வகையில் நீங்கள் சொல்வது தவறானது என்று ஏதாவது உறுதியான கருத்துருக்களோ ஆதாரங்களோ கொடுத்தால் நம் (என்) அறிவை மேலும் விரிவு செய்ய வசதியாக இருக்கும்
தங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்
மிக்க நன்றி கே.ஆர்.பி. செந்தில்
மிக்க நன்றி ஹேமா
மாற்றுச்சிந்தனை...
மற்றற்ற சிந்தனையாய்...
அருமை வாழ்த்துகள்... தொடருங்கள்
//
Blogger Chitra said...
அப்படியானால் இயந்திரங்களின் உதவியில் உயிர் பிழைத்திருக்கும் ஒரு உயிரினம், அவை நீக்கப்படுகையில் இறந்ததாக மருத்துவ ரீதியில் சொல்லப் படுகிறதே. அப்போது இறப்பது எது? உயிர் என்பது எது?
...... I second it!
//
உயிர் இருக்கிறது, பிரிகிறது இதுதான் நாம் இதுவரையில் மருத்துவம் ஆகட்டும் ஆன்மிகம் ஆகட்டும் எல்லாவற்றிலும் பின்பற்றி வந்த கொள்கை. அதற்காக மருத்துவம் சொல்கிறது மருத்துவ ரீதியாக இறந்து விட்டது அப்படின்னா உயிர் இருக்கிறதுன்னதானே மருத்துவம் சொல்லுது அதுதானே உண்மை என்றால் நமக்கோ, மருத்துவத்திற்கோ மேலும் வளர்ச்சியே இருக்காது.
எந்த ஒரு கண்டுபிடிப்பும் முதலில் கேள்விகளிலேயே ஆரம்பிக்கிறது. கேள்விகளே நமக்கு (மனிதஇனத்திற்கு) மிகச்சிறந்த வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
நிற்க. தங்கள் கேள்விக்கு வருவோம்
நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இயந்திரங்கள் உதவியால் இயங்கும் ஒன்று இயந்திரத்தை நிறுத்தியவுடன் நின்று விடுகிறது. இதில் உயிர் எங்கே வந்தது?
மேலும்
நியூட்டன் Motionக்கான முதல்விதிப்படி விசை கொடுக்கப்பட்ட பொருளே இயங்குகிறது. எனவே எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்ட ஒருஇயந்திரம் மின்சாரம் வந்தவுடன் இயங்குகிறது. வேலையை ஆரம்பித்து விடுகிறது செய்துகொண்டே இருக்கிறது. அதுபோல, இப்படித்தான் என்று பதிவாகி இருக்கும் ஒரு DNA - ஒரு EXTERNAL FORCE (OR) ஏற்கனவே Parent உடலில் உள்ள Charge மூலமாக இயங்க ஆரம்பித்தவுடன் அந்த விசைக்கான Force முடியும் வரை இயங்குகிறது
அந்த external Force என்பது ஒரு மின்அதிர்வாகக் கூட இருக்கலாமே, ஏனென்றால் மின்அதிர்வின் மூலமாக இதயத்தை இயங்க வைப்பது என்பது நம் மருத்துவத்திலேயே இருக்கிறதே.
தங்கள் கேள்விக்கு மிக்க நன்றி சித்ரா
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தாராபுரத்தான்
தங்கள் புரிதலுக்கு நன்றி தோழர் நியோ
மிக்க நன்றி தஞ்சை வாசன்
Uyir patri thanakkul evvidha karpidhankalayum vaiththukollamal thirandha manadhodu paarkkum bodhu poruththamana vilakkamagave irukkiradhu.Paththarai MAATRU sindhanaikal thodarattum. - Sakthi
மாற்றி யோசி அப்படியா.
யோசிப்போம். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சக்தி
மிக்க நன்றி அன்புடன் மலிக்கா
மிக எதார்த்தமான உண்மை..
அருமையான சிந்தனை..
வாழ்த்துக்கள்
நன்றி இந்திரா
நல்ல சிந்தனைதான்...
பாராட்டுக்கள்.
நன்றி சி.கருணாகரசு
Gud thoughtz..
நன்றி பேநா மூடி
Post a Comment