Saturday, June 19, 2010

நான் யார்?

கண் நுரைத்து விழி பொங்கி

சிதிலமடைந்த மூளையின்

பகுதிகளை சேகரித்து

மண்டைக்குள் பதுக்கியபடி

படுத்திருந்தோம்.....


நேற்றைய

தெருவில் வெட்டிபோட்ட

கால்கள் தேவையில்லாமல்

போனபிறகு

அழுகிய கைகளை

கவனிக்க முடியாத

துக்கத்தில்

மூடிய இமைகள்

எண்ணங்களை தாக்கியது


எந்த ஒரு சேர்மமும்

கால நீட்டிப்பின்

கடைசி சுற்றுக்குப்பின்

தன் இயல்புநிலை

அடையும்


வேதியல் ஆசான்

வேதம் ஓதின காதுகள்

மீண்டும்

தன் கேள்விக்கான

விடை தேடிக்கொண்டிருந்தன


எலும்பின் கால்சியமும்

சதைகளின் கொழுப்பும்

பொட்டாசியமும்

நகங்கள் நரம்புகள்

இன்னபிறவும்

பிரிந்து போனபின்பு

நான் யார்?


கேள்வியெழுப்பிக்

கதறின

பழைய நாட்களின்

முன்னோர் நரிகளின்

வாய் கிழித்து வந்து விழுந்தன

மதங்களும்

அதற்கான சர்ச்சைகளும்


எல்லாவற்றிற்கும் காரணமாக

இறைவன் அகப்பட்டான்


தூசுகள் போல் துரும்புகள் போல்

இயற்கைக்கு

மனிதமும் ஒருகுப்பை

என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல்...

தனித்துவம் வேண்டி

உடல் இருக்கும் ஆன்மா பிரிந்து

ஆண்டவனை அணுகும்

என்று அதுபற்றி துக்கம்

தணித்தான்


பின்னும் நிம்மதியை

தொலைத்து விட்டுக்

கேள்வியைக் கையில்

எடுத்தான்.

தலைமுறைகள் சரிந்தன.


கிடைக்காத விடையுடனும்

இல்லாத தலையுடனும்

இன்னும் பிழைத்தபடி நான்


பரவாயில்லை

நாமும் கேள்வி கேட்டுக்கொண்டே

சாவோம் வா...........


21 comments:

Anonymous said...

Migavum Negilchiyaga ulladhu. Paaratta vaarththaikale illai..
Arumai. Arpudham. - Sakthi

dheva said...

//கிடைக்காத விடையுடனும்

இல்லாத தலையுடனும்

இன்னும் பிழைத்தபடி நான்//

உண்மைதான் வேலு.....ரொம்ப ஆழமான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

vasu balaji said...

/கிடைக்காத விடையுடனும்
இல்லாத தலையுடனும்
இன்னும் பிழைத்தபடி நான்

பரவாயில்லை
நாமும் கேள்வி கேட்டுக்கொண்டே
சாவோம் வா.........../

இப்படியேதான் போய்விட்டது கனகாலமும், பல தலைமுறையும்.

Chitra said...

தூசுகள் போல் துரும்புகள் போல்

இயற்கைக்கு

மனிதமும் ஒருகுப்பை

என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல்...

தனித்துவம் வேண்டி

உடல் இருக்கும் ஆன்மா பிரிந்து

ஆண்டவனை அணுகும்

என்று அதுபற்றி துக்கம்

தணித்தான்

..... ஆழமாக யோசிக்க வைக்கும் வரிகள்..... ம்ம்ம்ம்......

அகல்விளக்கு said...

ஆகா....

அற்புதம் அண்ணா...

ஆழமாக யோசிக்கிறீர்கள்..

Unknown said...

கிளைமாக்ஸ் நல்லா இருக்கு !!

ஹேமா said...

வேலு....பதிலற்ற கேள்விகள்தான் வாழ்க்கையாகிறது.மனிதம் மலிவில்கூட இல்லை இப்போ !

கண்ணா.. said...

//பின்னும் நிம்மதியை

தொலைத்து விட்டுக்

கேள்வியைக் கையில்

எடுத்தான்.

தலைமுறைகள் சரிந்தன
//

எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு..

கவிதை அருமை...

ரிஷபன் said...

சிந்திக்க வைத்த கவிதை..

ஈரோடு கதிர் said...

கேள்விகளும் வெறும் முனகலாகவே

Vel Tharma said...

Nice

அன்புடன் அருணா said...

கேள்விகள்...கேள்விகள் இப்படியே கேள்விகளோடயே முடியப் போகிறது வாழ்க்கை.

அன்புடன் நான் said...

படித்தேன்... ஓட்டு போட்டுட்டேன்.... ஆனா உண்மையிலேயுமே... என்னறிவுக்கு எட்டல.

VELU.G said...

நன்றி சக்தி

நன்றி தேவா

நன்றி வானம்பாடிகள்

நன்றி சித்ரா

நன்றி அகல்விளக்கு

நன்றி ஆறுமுகம் முருகேசன்

நன்றி ஹேமா

நன்றி கண்ணா

நன்றி ரிஷபன்

நன்றி ஈரோடு கதிர்

நன்றி வேல் தர்மா

நன்றி அன்புடன் அருணா

தங்கள் நட்புக்கு மிகவும் நன்றி சி.கருணாகரசு

யுக கோபிகா said...

//பரவாயில்லை

நாமும் கேள்வி கேட்டுக்கொண்டே

சாவோம் வா...........//
கேள்வி கேட்பதே தேடலின் முதல் துவக்கம் .....

ஜெயந்தி said...

//எலும்பின் கால்சியமும்
சதைகளின் கொழுப்பும்
பொட்டாசியமும்
நகங்கள் நரம்புகள்
இன்னபிறவும்
பிரிந்து போனபின்பு
நான் யார்? //
அருமை.

Vidhya Chandrasekaran said...

விடைகளற்ற வாழ்க்கை:(

ப.கந்தசாமி said...

கருத்தாழம் மிக்க கவிதை.

பிரேமா மகள் said...

இதனால இந்த சமூகத்திற்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

VELU.G said...

நன்றி யுககோபிகா

நன்றி வித்யா

நன்றி Dr.P.Kandaswamy Sir

VELU.G said...

பிரேமா மகள் said...
இதனால இந்த சமூகத்திற்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

தங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி

சமூகத்திற்கு கருத்து சொல்லும் அளவிற்கு நான் வளர்ந்துவிடவோ, அறிவு பெற்று விடவோ இல்லை.

ஆனால் என்னுள் எழும் சில ஆதங்கங்களை பகிராமல் இருக்க முடியவில்லை.

நான் யார்? என்ற கேள்வி மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. இதற்கான தெளிவான விளக்கம் யாரிடமும் இல்லை. இருந்திருந்தால் ஈஸ்வரன்,அல்லா,இயேசு போன்ற கடவுள்களும் அதற்கான குழப்பங்களும் இருந்திருக்காது. புத்தர், மகாவீரர், ரமணர் போன்ற எத்தனையோ ஞானிகள் மற்றும் அறிஞர்கள் போன்றோர் யாருமே ஒருமித்த கருத்துக்களை ஏற்படுத்தவில்லை. எல்லோரும் தங்களுக்கென்று ஒரு கோட்பாடுகள் கருத்துக்களை கொண்டிருந்தனர் யானையை தொட்டுபார்த்து அளவிட்ட குருடர்கள் போலவே. எனவே இயற்கை என்பது நம் அறிவை தாண்டியே எப்போதும் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...