Tuesday, January 12, 2010

மனமாம் வனத்தை அழித்து



நேற்றென் கனவில்
வந்தாய் காதலாய் .....

நிலவிருந்தது குளுமையாய்
காற்றிருந்தது தென்றலாய்
நெருப்பிருந்தது தீபமாய்
மண்ணிருந்தது பாண்டங்களாய்

பின்னொருநாளில்...
நிஜத்தில் வந்தாய் மனைவியாய்....

நிலவைச் சூரியனாக்கி
தென்றலைப் புயலாக்கி
தீபத்தை பெருநெருப்பாக்கி

என் மனமாம் வனத்தை அழித்துக்
கொண்டே செல்கிறாய்....

அனுமன் வால் பற்றி
எறிந்த இலங்கை போல
சிதலமாகிக்கொண்டே இருக்கிறேன்.....



இக்கவிதை உரையாடல் கவிதைப்போட்டிக்காக...


4 comments:

வெள்ளிநிலா said...

இனிய உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

VELU.G said...

நன்றி உலவு.

நன்றி வெண்ணிலா.

நன்றி சக்தி.


அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

thiyaa said...

அருமை

simariba said...

மிகவும் அருமை! பாவாமான ஒரு கணவனின் நிலை! பாராட்டுக்கள்.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...