
நேற்றிருந்த ஆற்றின்
மணல் வெளிகள்
இன்றில்லை
ஆறேயில்லை.............
ஆறிருந்த இடம் குளமாகி
குளம் குட்டையாகி
குட்டை கிணறாகி
கிணறு மழைநீர் தொட்டியாகி....
அதுவும் எலி வளரும் பட்டியானது
சாலை மரமிழந்தோம்
வயலிழந்தோம்
காடிழந்தோம்
மலையிழந்தோம்
ஈரக்காற்றினை இழந்தோம்
நம்மையும் இழந்தோம்
நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி......
4 comments:
//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //
நச்சென்று.....
கவிதை அருமை.
Blogger அகல்விளக்கு said...
//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //
நச்சென்று.....
நன்றி அகல்விளக்கு
//Blogger ராமலக்ஷ்மி said...
கவிதை அருமை.//
நன்றி
pudicha lines podaanumna motha kavitaiyum podanum -totally superb
Post a Comment