
வெள்ளையாய்
அதில்லாமல் இருப்பது
கருப்பு.....
அரசாங்கம் அடித்தால்
நல்லநோட்டு
அடுத்தவர் அடித்தால்
கள்ளநோட்டு........
மேஜைக்கு மேலே வந்தால்
ஆபிஸ்ஸிற்கு
மேஜைக்கு கீழே வந்தால்
ஆபிஸ்ஸருக்கு......
ஓட்டு போடும் முன்
கவரில் வந்தது வேறு
ஓட்டு போட்ட பின்
கையில் தந்தது தனி......
லஞ்சம்,லாவண்யம்,
ஊழல், கையூட்டு,
அன்பளிப்பு, பரிசு,
டிப்ஸ்,இனாம்.....
மொத்தம் எட்டுத்தொகை
மிஞ்சியது குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு பேசி
அகப்பட்டால் பத்துப்பாட்டு.......
6 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ஆப்பு மாதிரி இருக்கே....
//மொத்தம் எட்டுத்தொகை
மிஞ்சியது குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு பேசி
அகப்பட்டால் பத்துப்பாட்டு....... //
nice.......
அருமை நண்பரே
வாழ்த்துகள்
//அகல்விளக்கு said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ஆப்பு மாதிரி இருக்கே....//
நன்றி அகல்விளக்கு
//ஆரூரன் விசுவநாதன் said...
மொத்தம் எட்டுத்தொகை
மிஞ்சியது குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு பேசி
அகப்பட்டால் பத்துப்பாட்டு.......
nice.......
//
மிக்க நன்றி ஆரூரன் சார்
//திகழ் said...
அருமை நண்பரே
வாழ்த்துகள்
//
நன்றி நண்பரே
nice..மேலும் எழுதுங்க..
அன்பின் வேலு
கலித்தொகை அருமை - சிந்தனை அருமை - பத்துப்பாட்டு தானிறுதியில் ....
நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா
Post a Comment