நீ சொன்னது போல் அம்மா
உயில் எல்லாம் பிரித்தாகிவிட்டது
தம்பியோடு இனி என் சண்டை ஏதுமில்லை
அப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன்.
கடன் எல்லாம் அடைத்து விடுகிறோம்.
நீ சொல்வது போல் அம்மா
ஏழைகளுக்கு தானம் செய்துவிடுகிறோம்..
பண்டிகைக்கு உறவினரை..
அழைத்து விருந்து போடுகிறோம்..
உறவுகளில் பகை ஏதும் கொள்ளவில்லை..
நீ சொல்வது போல் அம்மா
கோவிலுக்கு நம்பங்கை கொடுத்துவிடுகிறோம்...
என் பிள்ளைக்கு குலதெய்வக்கோவிலில்
முடிவாங்கி மொட்டை போட்டுவிடுகிறோம்.....
முன்னோர் சாந்தியடைய திதியெல்லாம்
கொடுத்து விடுகிறோம்...
நீ சொல்வது போல் அம்மா
எல்லாம் செய்த நான்
எப்படியம்மா செய்வேன் இதை...
ஏழுகடல் மலைதாண்டி எதையும்
செய்ய வலிமையுள்ள எனக்கு
ஒரு ஊருக்கு வழியனுப்புவதைபோல்
என் காலம் முடிந்தது
எனக்கு விடைகொடுங்கள் என்கிறாயே...
எப்படியம்மா செய்வேன் இதை....