Tuesday, June 29, 2010

கடவுளையும் கவிழ்க்கலாம்


கணினிக்கு அடிப்படை

மூன்று செயல்கள்

இன்புட் புராஸஸ் அவுட்புட்

உள்ளீடொன்றை தகவமைத்து

வெளியீடொன்றை தருவது.


பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்

இதுவே அடிப்படை.


வளர்ச்சிக்கானதென்றால்

உணவை உட்செலுத்தி

ஜீரணித்து பிரித்தெடுத்து

கழிவை வெளியேற்றுவது....


உற்பத்திக்கானதென்றால்

விந்தை உட்செலுத்தி

அண்டத்தில் கலந்துருவாகி

புதியதை வெளியேற்றுவது.....


எல்லாமே செயல்கள் மூன்று.


ஒன்று இரண்டு மூன்று

நான்கு ஐந்து ஆறு

எல்லா அறிவிற்கும்

அதுவே பொதுவிதி.


உள்ளீட்டை அப்படியே

பயன்படுத்தும்

இருசெல் உயிரியோ


வெளியீட்டை திரும்ப

பயன்படுத்தும்

நான்கு.....

ஐந்து........

.........................................

செயல் உயிரியோ இல்லை.


ருசெல் உயிரி

இருசெல் உயிரி

என்றெல்லாம் உள்ள இங்கே

ஒருசெயல் உயிரி

இருசெயல் உயிரி

என்றெல்லாம் எங்கே?


மரம்....செடி...கொடி....

மனிதர்....விலங்கு....பறவையென்று

டிசைன்கள் மட்டும் மாற்றி

ஒரு இயந்திரத்தைப்போல்……

ஒன்றையே திரும்பத்திரும்பச்

செய்யும் ஒன்றை

பேரறிவு பேராற்றல்

என்றெல்லாம் எப்படி

நம்புவது?


Saturday, June 26, 2010

என் முதல் தியான வகுப்பு.


ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது தினமும் எங்கள் ஊர் மைதானத்தில் கிரிக்கெட், புட்பால், பேட்மிண்டன், வாலிபால்னு சீஸனுக்கு தகுந்தமாதிரி விளையாடுவோம். அப்போ வோர்ல்ட் கப் புட்பால் மேட்ச் நடந்த சமயம் எப்பவும் புட்பால் தான் விளையாடுவோம். புதுசா ஒரு வேளாண் அதிகாரி எங்க கிராமத்தில வந்து தங்கியிருந்தாரு. அவரும் விளையாட வருவாரு ரொம்ப சின்ன வயசுதான். நல்ல சிகப்பா இருப்பாரு. பார்க்க ரொம்ப அமைதியான முகம். பேசறது ரொம்ப சாப்ட்டாத்தான் பேசுவாரு. எல்லோரோடும் ரொம்ப மரியாதையா பழகுவார்.


அப்படி ஒருநாள் விளையாட்டு முடிந்து பேசிக்கொண்டு இருக்கும் போது என்னோட சீனியர் அவரைப்பற்றி சொன்னார். அவர் கடந்த ஆறுவருடங்களாக ஒரு தியான வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் இவ்வளவு அமைதியா பொறுமையா இருக்காரு. அவர் தியானம் செய்வதினால் தான் இவ்வளவு சிகப்பா இருக்காரு. அவருக்கு கோபமே வராது அப்படின்னெல்லாம் சொன்னார்.

எனக்கும் அப்போது தியானம் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. நிறைய அதுகுறித்து புத்தகங்கள் படித்ததால், வாய்ப்பு கிடைத்தால் அதை முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது.

என்னோட இன்னொரு சீனியர், ‘நான் அந்த வகுப்பிற்கு போகிறேன். நீயும் வருகிறாயா?’ என்று கேட்க சம்மதித்தேன் சந்தோஷமாய்.

ஒரு மாலை நேரம். தியான வகுப்பு நடந்த இடம் ஒரு மாடி அறை. காற்றோட்டம் மிகுந்திருந்த்து. கூரை வேயப்பட்டு மிகவும் ரம்மியமாக இருந்தது. ஒரு துணி விரித்து அதில் அமர்ந்தேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன. பெட்ரும் விளக்கு மாதிரி சின்னதாய் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஒருவர் மைக்கில் சில வாக்கியங்கள் உணர்வுப்பூர்வமாய் சொல்ல அப்படி ஜிவ்வென்று பறக்கிறமாதிரி இருந்தது. பின் பொதுவான தியானம் முடிந்து எனக்கும் என் சீனியருக்கும் தனியாக முதல் பயிற்சியை கொடுத்தனர். அமைதியாக கண்களை மூடி ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தோம். மனம் இலேசாக இருந்தது.

அப்போதெல்லாம் தியான வகுப்புகள் இப்போது போல அவ்வளவு கமெர்ஷியலாக்கப்படவில்லை. வகுப்புகள் போல எடுப்பதுவுமில்லை. ஆட்கள் வருவதே குறைவு. வந்தவர்களையெல்லாம் அப்படியே அமரவைத்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் தியானம் மிக ரம்மியமாய் இருந்தது. நான்காம் நாள் தியானம் முடிந்தவுடன் நான் தேடிய ஞானம் எனக்கு கிடைத்து விட்டது. அதை முழுமையாக உணர்ந்தவுடன் தியான வகுப்பு போவதையே நிறுத்திவிட்டேன்.

எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’


  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...