
விட்டத்தைப்பார் சிரி
ஏதோ தொலைந்ததாய் தேடு
சுவற்றுப்பல்லியோடு பேசு
சும்மா போகும் பூனையை விரட்டு
தட்டெடுத்து நீயே பரிமாறு
உண்டபின் ஏப்பம் விடு
தண்ணீர் குடி
மனைவி திட்டுகிறாளென்று
மனசு விடாதே
“சாயங்காலம் வருகிறேன்
காபி வைத்துவிடு”
சுவற்றைப்பார்த்து சத்தமாய் சொல்
வீரத்திருமகனாய் வெளியேறு.....