
நீ நீர்மம் என்றால்
எனைப்புரிய வைப்பேன் உனக்கு
என்னையே உருக்கி.....
நீ தின்மம் என்றால்
எனைப்புரிய வைப்பேன் உனக்கு
என் இதயவலிமையைக் காட்டி...
நீ வாயு என்றால்
எனைப்புரிய வைப்பேன் உனக்கு
என் இளகிய மனதைக் காட்டி......
என் ஆசான் உரைத்துள்ளார்
இப்புவியில் எதுவும்
இம்மூன்று நிலைகளிலேயே இருக்குமென்று...
நீயோ நெருப்பாய் இருக்கிறாய்!!!!!
எனைத்தெரிந்தோர் யாரேனும்
உதவுவீரோ
நான் அவளை அணுக....
நெருப்பென்பது........
திடமா?......திரவமா?.... வாயுவா?.....