Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, February 27, 2015

சும்மா ஒரு கவிதைங்க........












மனிதர்கள்

நான்
மிகப்பெரும் சாதனையாளனாக
இருப்பதையும்
மிகச்சாதாரண மனிதானாக
இருப்பதையும்
மௌனமாகவே பார்க்கிறது
இயற்கை.

நான்
இப்புவியில் வாழ்ந்ததறகான
அடையாளங்களை
மிக அழுத்தமாக பதிவிட்டாலும்
மனிதர்களைப்போல
பதியவைக்கும் புத்தகங்கள் இல்லை
இயற்கையிடம்

நான்
இங்கே இருக்கிறேன் என்பதற்கும்
இங்கே இல்லை என்பதற்கும்
இடையில் உள்ள
வேறுபாட்டில் மட்டுமே
இருக்கிறது
என் வாழ்க்கை,






Thursday, April 17, 2014

குழந்தை பொம்மைகள்

குழந்தையின்
சிரிப்பில்
மெய்மறந்திருக்கும்
பொம்மைகள்.

குழந்தையின்
அழுகையில்
மௌனம் காக்கிறது.

உறக்கத்தையும்
விளையாட்டையும்
மழலை மொழிகளையும்
ரசிக்கும்
பொம்மைகள்
திரும்பப் பேச
எத்தனிப்பதில்லை எப்போதும்.

கடவுளின் தருணங்கள்
கவனிக்க மட்டுமே.

Thursday, February 3, 2011

கல்கி வரட்டும்.....

ராமனும் சீதையும்
காட்டிற்கு சென்று
தேடியும்
விறகு கிடைக்கவில்லை

பிருந்தாவன்
பூங்கவானதிலிருந்து
கிருஷ்ணனும் வருவதில்லை

அக்னி முறுக்கு கம்பிகளால்
தூண்கள்
கெட்டியாகிவிட்டதால்
நரசிம்மராலும்
ஒளிய முடிவதில்லை

கோடாரியை
பழைய இரும்பிற்கு
போட்ட பரசுராமனுக்கும்
கதையை
பாதி விலைக்கு விற்ற
பலராமனுக்கும்
தொழில்களில்லை

மற்றபடி
கல்கி வந்தால்தான்
எல்லோருக்கும் நிம்மதி
அவனுக்கு
ஐ,டி கம்பெனியில்
பெரிய வேலையாம்
சம்பளமே பெரியதொகை
ஆனால்
குதிரையில் தான்
வருவானாம்

Monday, December 6, 2010

இன்டலிஜன்ட் பெர்ஷன்.....

இந்த வருட
இன்டலிஜன்ட் பெர்ஷன் விருது

எங்கள் நிறுவனத்தில்

எனக்கு கிடைத்த்து.


விற்பனை சம்பந்தமாய்

நான் வகுத்த

விதிமுறைகளில்

அள்ளிய லாபம்


அலுவலக நிமித்தம்

நான் செய்த

மாற்றங்களில்

கிடைத்த பலன்கள்


கிளை மேலாளருக்கோ

பெருமை

சக ஊழியர்களுக்கோ

மகிழ்ச்சி


நான் போடும் கணக்குகள்

எப்போதும் தப்பாதென

என்னைத்தெரிந்த

எல்லோருக்கும்

தெரியுமென்றாலும்

குழம்பி விடுகிறது மனது


முத்தின முருங்கை

மூன்று ரூபாய்

அழுகின தக்காளி
பத்து ரூபாய்க்கு வாங்கி

மானத்தை வாங்குகிறாரே

எனும் என் மனைவியிடமும்


நீ போட்ட கணக்கெல்லாம் தப்பு

மிஸ் திட்றாங்கப்பா

இனி அம்மாகிட்டயே கேட்டுக்கறேன்

எனும் என் மகனிடமும்.




Friday, April 23, 2010

மனிதர் மேய்வர்


ஆடுகளோ
புல் மேயும் மாடுகளோ
அன்றி
இரைதேடும்
விலங்குகள் போக
மிஞ்சிய
மனிதர் மேய்வர்
மனிதரையே
இப்புவியில்......

Tuesday, April 20, 2010

அரியர் எக்ஸாம்


விடைகானத் தவிக்கும்
வினாக்கள் தாளில்...

என்னத்தைக் கிழித்தாய்
எக்ஸாம் எழுதி
மனசோ உறுமும்...

விடைத்தாளின் வெண்மையை
கரைபடிக்க மனசில்லாமல்
சுவரை வெறிக்கும் கண்கள்...

அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...

இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்....

இவையின்றி வீட்டில்
என்ன செய்ய...
எப்படியும் செல்லவேண்டும்
எக்ஸாம் எழுத

Thursday, April 15, 2010

ராணுவத்தில் தங்கராசு


ராணுவத்தில் ஆளெடுக்க...

போய் சேர்ந்தான் தங்கராசு


ஆறடி உயரம் அகலக்கணக்கெல்லாம்

முடிஞ்சு

கண்பார்வை சரிபார்த்து

ஓடச்சொல்லி ஒளியச்சொல்லி

எல்லாம் முடிஞ்சு

எழுத்துத் தேர்வாம் கடைசியிலே...


ரிசல்ட்டில் பாசாகி

கவர்ண்மென்ட் ஆர்டரிலே

வேலைக்குப் போனான் பார்டரிலே..


அம்மா தங்கச்சிக்கெல்லாம்

அடுத்த மாச சம்பளத்தில்

ஆரணிப் பட்டெடுக்க

தோரணையோடு போனான்....


நாலுநாள் சண்டையிலே

நாப்பது பேர் செத்தாங்கன்னு

சண்டைக்கு போச்சு ஒரு குரூப்பு

அதோடு போச்சு இவன் ட்ரூப்பு


பத்தாநாள் காத்தால பன்னென்டு

குண்டு பட்டு

பொட்டியிலே போனான் ஊருக்கே திரும்ப


இப்படியாக

ரானுவத்தில் ஆளெடுக்க

போய் சேர்ந்தான் தங்கராசு



Wednesday, April 14, 2010

குழந்தையாய் ஒரு வரம்


மெல்லிய சிறகொன்று ஒரு

பறவையின் இறகிலிருந்து பிரிந்து

காற்றில் வரையும் ஓவியம் போல்

என் அறையெங்கும் நிறைகிறாய்.....


தொலைந்ததாய் தேடும் என்முன்

வந்தமர்கிறாய்.....


இதைத்தானே தேடுகிறாய்

இல்லை இதையா தேடுகிறாய்

என்பதாய்

இருக்கும் எல்லாவற்றையும்

எடுத்தென் முன்னெங்கும் நிரப்புகிறாய்...


அம்மா அழைக்கிறாள் என்று

அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்

சும்மா சொன்னேன் என்று

சிரிக்கிறாய்......


கண்டுபிடிக்க சொல்லி என்

கண்முன் மறைகிறாய்.......

வெளித்தெரியும் கைகளும்

மறைந்து நோக்கும் கண்களுமாய்

எனைத்தானே தேடுகிறாய்

எனையா தேடுகிறாய் என்று உருகுகிறாய்...


கணப்பொழுதில் வந்தென்

கால் தழுவுகிறாய்

காற்றாய் மாறி என்உயிர் நிறைக்கிறாய்...




  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...