
கடலோ ஆறோ
குளமோ குட்டையோ
கிணறோ....
மீன்கள் நீந்துகின்றன
நீருக்குள்....
நீரில் இருக்கும்
காற்றை சுவாசித்து...
நீரில் இருக்கும்
உணவை உட்கொண்டு...
கீழே மேலே நடுவே நீர்
எங்கெங்கும் நீர்...
நீரே உலகம்
நீரின்றி அமையாது
எம்மீனுக்கும் வாழ்க்கை...
மனிதர்களுக்கு மீன்கள்
விளையாட
வேடிக்கை பார்க்க
வேட்டையாடி உண்ண.....
.
.
.
சமதளமோ மலையோ
குன்றோ காடோ
பள்ளத்தாக்கோ...
மனிதர்கள் வாழ்கின்றனர்
காற்றுக்குள்.
காற்றில் இருக்கும்
காற்றை சுவாசித்து
நிலத்தில் இருக்கும்
உணவை உட்கொண்டு....
கீழே மேலே நடுவே காற்று
எங்கெங்கும் காற்று...
காற்றின்றி அமையாது
எம்மனிதர்க்கும் உலகு..
யாருக்கு மனிதர்கள்
விளையாட..
வேடிக்கை பார்க்க....
வேட்டையாடி உண்ண.....