Thursday, January 20, 2011

மரம் வளர்க்கலாம் வாங்க......

அன்பு நண்பர்களே மரம் வளர்க்கறதினால என்ன பயன் அப்படின்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனால சும்மா பேசிட்டிருக்காமா அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்க ஒரு வாய்ப்பு. வீட்டு பக்கத்தில கொஞ்சம் இடமிருந்தோ அல்லது வீட்டு முன்னாடியோ மரம் நட்டு வளர்க்களாம்னு எண்ணமிருக்கிற ஈரோடு அதை சுத்தி இருக்கிற மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை சார்ந்த நண்பர்கள் உங்க வீட்டிலேயே வந்து இலவசமா மரத்தை நட்டு தர்றாங்க. அதை பக்குவமா வளர வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அவ்வளவுதான்.

அந்த அமைப்போட விலாசம் மற்றும் போன் நம்பர் கீழே கொடுத்திருக்கறேன்.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை
26, சொக்கநாதர் வீதி,
ஈரோடு – 638 001
Ph: 94420 58553

எல்லோரும் பயன்படுத்தி பலனைடைவோம்.












20 comments:

Unknown said...

காடு வளர்ப்போம்.. நல்ல நாடு வளர்ப்போம் ..

தகவலுக்கு நன்றி தம்பி ..

dheva said...

ரொம்ப நல்ல விசயம் வேலு.....மாவட்டங்கள் தோறும் இப்படி அமைப்புகள் வந்தா நல்லாதான் இருக்கும்....!

சென்னை பித்தன் said...

ஈரோடு வாழ் பதிவர்கள் அனைவரும் பயன்படுத்திப் பயன் பெற வாழ்த்துகள்!

sathishsangkavi.blogspot.com said...

Very Good Information...

அகல்விளக்கு said...

அனைவரும் பயன் படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு அமைப்பு....

அன்புடன் அருணா said...

ஆஹா!எங்க ஊர்லே உண்டா??

Chitra said...

Great! Best wishes!

VELU.G said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கே.ஆர்.பி. செந்தில்


//dheva said...

ரொம்ப நல்ல விசயம் வேலு.....மாவட்டங்கள் தோறும் இப்படி அமைப்புகள் வந்தா நல்லாதான் இருக்கும்....!
//

கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல நல்ல விசயங்கள் நடக்கும் அதற்கு இதுவே முன்னுதாரனமாக இருக்கும்



சென்னை பித்தன் அவர்களின் நல்ல மனதிற்கு நன்றி. எல்லோரும் இவ்வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்


மிக்க நன்றி சங்கவி

மிக்க நன்றி அகல்விளக்கு

//அன்புடன் அருணா said...

ஆஹா!எங்க ஊர்லே உண்டா??
//

jaipurல மேடம் அங்கெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் விரைவில் எல்லா இடங்களிலும் இது போன்ற அமைப்புகள் தோன்றி எங்கும் பசுமை நிறைய வேண்டும்

VELU.G said...

நன்றி சித்ரா

கவி அழகன் said...

பிரயோசனமான படைப்பு ஜோசிக்க வைக்குது

VELU.G said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யாதவன்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு வேலு.. சாரி ஃபார் லேட்

VELU.G said...

மிக்க நன்றி சி.பி.செந்தில்குமார்

ரிஷபன் said...

தேவையான பதிவு. எங்கள் பகுதியில் இருந்த மரங்களை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.. வீடு கட்ட. ஒரு காலத்தில் சோலைகளாய் இருந்த ஊர் இன்று வெறும் கட்டிடங்களாய்.

VELU.G said...

மிக்க நன்றி ரிஷபன். இந்த பதிவு எவ்வளவு தூரம் ரீச் ஆகும் என்று தான் தெரியவில்லை

பா.ராஜாராம் said...

வணக்கம் வேலுஜி சார்!

என் பழைய கணையாழி கவிதையை மாப்ளையும் நண்பருமான பாலாசி கொண்டு வந்து சேர்த்தார்.
அதன் வேரில் நீங்கள் இருக்கிறீர்கள் என அறிந்தேன்!

யார் யாரோ வைக்கிற மரம்தானே சார் எல்லோருக்குமான நிழலாக இருக்கிறது. இன்று, நீங்கள் வைத்த மரத்தில் இளைப்பாறி வருகிறேன்.

மிகுந்த நன்றி சார்!

VELU.G said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜாராம் சார். அன்றும் சரி இன்றும் சரி நான் உங்கள் கவிதைகளின் ரசிகன். தங்கள் நன்றி சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. உங்களின் நிழலில் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்ற ஆசான்களின் எழுத்துக்களில் தான் எனக்கான எழுத்தார்வம் வித்திட்டது. அதற்கே உங்களுக்கு பலமுறை நன்றி சொல்ல கடமைப்பட்டவன்


மீண்டும் என் நன்றிகள் சார்

Thenammai Lakshmanan said...

தேவையான பகிர்வு .. வாழ்த்துக்கள் வேலு

அன்புடன் நான் said...

அக்கரையுள்ள தகவல் வரவேற்கிறேன்....

VELU.G said...

நன்றி தேனம்மை லெஷ்மணன் மற்றும் சி.கருணாகரசு

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...