Friday, January 14, 2011

துறவியும்.... திருடனும்....

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். எங்காவது திருடலாம் என்று ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை சந்தித்தான். அவரிடம் எதுவும் இருக்காது என்று தெரிந்தாலும் சரி வந்ததுக்கு எதையாவது பிடுங்கிக்கலாம் என்று கத்தியை காட்டி மிரட்டினான்.

புன்முறுவல் பூத்த துறவி “உனக்கு என்னப்பா வேண்டும்”. என்று கேட்டார்.

அவரை ஏளனமாக பார்த்தபடி திருடன் சொன்னான் “ எனக்கு மூட்டை நிறைய தங்கம் வேண்டும் கொடுப்பாயா” என்றான்.

உடனே துறவி “ இவ்வளவு தானே, இங்கிருந்து அரைக்கல் தொலைவில் ஒரு மரம் இருக்கிறது. அதனடியில் நிறைய தங்கம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்” என்றார்.

அவரை சந்தேகமாக பார்த்தபடி சென்றவன் ஆச்சரியபட்டு போனான். அவர் சொன்னது போலவே அந்த மரத்தடியில் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. உடனே ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்தவன், வரும் வழியில் சாமியாரைப் பார்த்தான்.

அவர் அமைதியாக இவனைப்பார்த்து “என்னப்பா தங்கம் கிடைத்த்தா” என்று சாதாரணமாக கேட்டார்.

உடனே இவனுக்கு மீண்டும் சந்தேகம் இதைவிட பெரிய விஷயம் ஏதோ இவரிடம் இருக்கிறது என நிணைத்து “ ஐயா இதைவிட மேலாக வைரம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான்.

துறவி சொன்னார் “இங்கிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அங்கே போனால் வைரம் நிறைய இருக்கிறது என்றார்.

பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைரம் ஒரு மூட்டை அள்ளி வந்தான்.

ஆனாலும் திருப்தி ஆகாமல் “ ஐயா இதைவிட வைடுரியம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான் துறவியிடம்.

துறவி சொன்னார் “இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அங்கே போனால் வைடுரியம் நிறைய இருக்கிறது என்றார்.

மீண்டும பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைடுரியத்தையும் அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தியடையாமல் இந்த ஆள் இதெல்லாம் வேண்டாம் என்று அமர்ந்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் என்னவோ இவரிடம் இருக்கிறதென்று அவரிடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி கேட்டான்.

உடனே சிரித்தபடி துறவி அவனுக்கு தவம் செய்து ஆண்டவனை அடைவது தான் இதெல்லாம் விட சிறந்த மகிழ்ச்சியான விஷயம் என்று அவனை அருகில் அமர்த்தி தவம் செய்ய கற்றுக் கொடுத்தார்.

.
.
.
.
.
.

இரண்டு நாள் கழித்து திருடனின் மகன் அந்த வழியாக வந்தவன் இருவரையும் பார்த்தபடி அருகில் சென்றான். துறவியிடம் சென்று நடந்ததை கேட்டான். பின்னர் அருகில் இருந்த மூன்று மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.

உடனே துறவி அவனை அழைத்து “குழந்தாய் இவையெல்லாம் வெறும் கற்கள், இவற்றைவிட மேலான விஷயங்களை நான் உனக்கு சொல்லித்தருகிறேன் கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

திருடனின் மகன் சொன்னான் “ஐயா என் அம்மா வரும்போதே சொல்லிவிட்டார்கள், வேலையில்லாத வெட்டிப்பயலுக எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, உங்கப்பன் அதை உக்காந்து கேட்டுட்டு இருப்பான். நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க, நான் வரட்டுங்களா ஐயா”, என்று மூட்டையை தூக்கிய படி நடையை கட்டினான்.

துறவி அவனைப்பார்த்து திகைத்து நின்றார்.


••••••••••••••••••••••

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

12 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா..

சென்னை பித்தன் said...

//நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க//
நல்லாத்தான் சொல்லிருக்காங்க அவன் அம்மா!
இனிய பொங்கல் வாழ்த்துகள், நண்பரே!

VELU.G said...

நன்றி பட்டாபட்டி

நன்றி சென்னை பித்தன்

இருவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

ஆஹா... சூப்பர்...

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா... :-)

Unknown said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..

VELU.G said...

நன்றி அகல்விளக்கு

நன்றி பதிவுலகில் பாபு

அன்புடன் நான் said...

இந்த காலத்து பிள்ளைங்க ரொப்ப விவரமாத்தான் இருக்காங்க....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்றின் மனோபாவத்தைக் கதை கட்டியம் கூறியது வேலு ஜி. அருமை.

VELU.G said...

நன்றி சி.கருணாகரசு

நன்றி தஞ்சை.வாசன்

நன்றி சுந்தர்ஜி

ரிஷபன் said...

பொறுப்பான அம்மா.. பிள்ளை!

VELU.G said...

நன்றி ரிஷபன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...