Saturday, August 28, 2010

என்னவளே அடி என்னவளே

யோசித்து வைத்திருக்கிறேன்

உன்னைப் பற்றி

ஒரு கவிதை எழுத....


ஒரு கவிதையை மறுபடியும்

கவிதையாய் வடிக்கமுடியுமா

தெரியவில்லை......


நீ அழகு என்பதை

நான் சொல்வதை விட

உன் தெருவில் நடந்த

சாலை விபத்துக்கள்

நிறைய சொல்கின்றன...


நீ அறிவு என்பதை

நான் சொல்வதை விட

உன் பல்கலைக்கழகப் பட்டங்கள்

நிறைய சொல்கின்றன....


உன் புன்னகையில்

பல இதயங்கள் நின்றுவிட்டன

என்பதை நான் சொல்வதை விட

இடுகாட்டுத் தகவல்கள்

நிறைய சொல்கின்றன....


உன் மலர்ப்பாதம் படும் பூமி

ஒரு மெல்லிய பனித்துளி

கண்ணத்தில் விழுந்ததைப்

போல் சிலிர்ப்பதை

நான் சொல்வதை விட

நீ நடந்த இப்பூமி

நிறைய சொல்கின்றன...


ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்.

22 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு...

காதலை உணர காதலி தேவை
கவிதையை வடிக்க பொய் தேவை...

பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லி இருக்கீங்க....

இன்னும் நிறைய பொய் சொல்லுங்கள் எங்களுக்கும்...

மிகவும் சுவையா இருக்கு.வாழ்த்துகள்
பொய் அல்லாத என் வரிகள் இவை...

சத்ரியன் said...

’பொய்யர்கள் சங்கத் தலைவன் ‘ வாழ்க!

இதென்னங்க புது கணக்கு வேலு. ஒரு நாளைக்கு அஞ்சே அஞ்சு பொய்!

Anonymous said...

ஒரு கவிதையை மறுபடியும்

கவிதையாய் வடிக்கமுடியுமா

தெரியவில்லை....../////////////////


நல்ல ரசனை நண்பா....

தூயவனின் அடிமை said...

அருமையாக உள்ளது.

vasu balaji said...

அழகாருக்கு வேலு:)

Chitra said...

ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்.


...:-) nice.

கனிமொழி said...

mmmm.... gud one!!

க ரா said...

good one :) cute one :)

அன்புடன் நான் said...

நீ அழகு என்பதை

நான் சொல்வதை விட

உன் தெருவில் நடந்த

சாலை விபத்துக்கள்

நிறைய சொல்கின்றன...//

மிக ரசித்தேன்.... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்//

ஏங்க அந்த புள்ளமனசு என்ன பாடுபடும்?

a said...

கவிதை நல்லா இருக்கு
(இதோடு இன்றய கணக்கு முடிந்து விட்டது...)

அம்பிகா said...

\\ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்.\\
இது நல்லாயிருக்கு.

Unknown said...

நல்லா இருக்குங்க... ஆனா

//நீ நடந்த இப்பூமி
நிறைய சொல்கின்றன...//

இது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. 'சொல்கிறது' என்றிருக்க வேண்டுமோ...

Vel Tharma said...

அப்படி ஒரு பெண்ணைக் காண விரும்புகிறேன்...

cheena (சீனா) said...

அன்பின் வேலு

அருமை அருமை - அததனை பொய்களும் உதித்த சிந்தனை அருமை. கவிதையைக் கவிதையாய் வடித்த விதம் அருமை. அழகு - விபத்துகள்; அறிவு - பட்டங்கள் ; புன்னகை - இடுகாடு; பாதம் - பூமி; அத்த்னை கற்பனைகளூம் அருமை. நல்வாழ்த்துக்ள் வேலு - நட்புடன் சீனா

Anonymous said...

Kavithai romba super.

Naan oru naalaikku oru poi than solluven - Sakthi

Gayathri said...

oh my...eppadi...super

சாந்தி மாரியப்பன் said...

ரைட்டு.. தினம்தினம் இப்படியே நிறைய பொய் சொல்லுங்க :-))))

vinthaimanithan said...

To be frank.... என்னாடா ஒரே க்ளிஷேவா போகுதேன்னு பாத்தா கடேசி வரில ஒளிச்சு வெச்சிருக்கீங்க கவிதைய.. நல்லாருக்கு

VELU.G said...

நன்றி தஞ்சை வாசன்

நன்றி சத்ரியன்

நன்றி படைப்பாளி

நன்றி நண்டு@நொரண்டு

நன்றி இளம் தூயவன்

நன்றி வானம்பாடிகள்

நன்றி சித்ரா

நன்றி கனிமொழி

நன்றி இராமசாமி கண்ணன்

நன்றி சி.கருணாகரசு

நன்றி வழிப்போக்கன் யோகேஷ்

நன்றி அம்பிகா

நன்றி கலாநேசன்

நன்றி வேல்தர்மா

VELU.G said...

மிக்க நன்றி சீனா சார்

தங்கள் வருகை என்னை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது

தங்களின் நட்பை என்றும் விரும்பும் வேலு

VELU.G said...

நன்றி சக்தி

நன்றி காயத்ரி

நன்றி அமைதிச்சாரல்

நன்றி விந்தை மனிதன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...