யார் யாரோ வந்தார்கள்
யார் யாரோ போனார்கள்
யார் யாரோ....
யார் யாரோ....
உலகே எதிர்த்தாலும்
உன்னுடனே வருவேனென்று
ஊர்மெச்ச வாழ்ந்தவன்
பாதியிலே விட்டுவிட்டு
நடுவீட்டில் கிடக்கின்றான்
பேர் சொல்ல ஒரு பிள்ளை
ஊர் சிறக்க ஒரு பெண்ணென்று
வாயாடிச் சென்றவனை
கண்மூடி உடல்போர்த்தி
பாயோடு போட்டார்கள்
பார்ப்போரே கேளுங்களேன்
வேலைக்குப் போகாத
வெறும் மனைவி போதுமென்று
வீட்டிலேயே எனை விட்டு
காட்டுக்குப் போகிறானே
கேட்பாரே இல்லையா
நீரெடுக்கப் போனாலே
கைகால்கள் வலிக்குமென்று
தைலமிட்டு சீராட்டி........
தலைகுளித்து வந்தாளோ
சளிபிடித்து தொலைக்குமென்று
புகைபோட்டு தாலட்டி....
நான் உறங்கி அவன் பார்த்த
காலம் போய்
அவன் உறங்கி நான்பார்க்க
வைத்தானே.......
பெற்றோர் உற்றார் வராதவீடு
வெறும் வீடென்று சொல்வானே
எழுந்து பார்க்கச்சொல்லுங்களேன்
வீடே நிரம்பி இங்கே
யார் யாரோ வருகிறார்கள்
யார் யாரோ போகிறார்கள்
யார் யாரோ.....
யார் யாரோ.....
கால்தடுக்கி நின்றாளே
மனம்பதறிப் போவானே
உயிர் பதறி நிற்கிறேன்
உணர்வில்லாமல் உறங்குகிறானே
ராணியென்ற ஒருத்தியை
கதைகளில்தான் கேட்டோம்
இப்போதுதான் பார்க்கிறோம்
நேரிலென்று.......
பலரை சொல்ல வைத்துவிட்டு
பார்க்காமலே உறங்குகிறான்
பார்த்தோரே கேளுங்களேன்
பெண்ணெத்தனை பிறந்தாலும்
நீதான் என்முதல் பெண்ணென்று
பெற்றோரும் காட்டாத
பேரின்பம் தந்தானே
ஒருபெண்ணே போதுமென்று
ஏன் விட்டு சென்றானோ
யார் யாரோ வருவார்கள்
யார் யாரோ போவார்கள்
நீயில்லா இவ்வீட்டில்
நிச்சயமாய் நானில்லை
உன்னுடனே வருகிறேன்
எப்போதும் உன்வீட்டின்
ராணி நான்.
21 comments:
வேலு,
ஆரம்பிச்சதுமே நெனைச்சேன். அழகா எழுதி இருக்கீங்க.
மரணத்தை தாங்காது பாடிப் பாடி அழுவது இப்போதெல்லாம் மறைந்துக் கொண்டு வருகிறது.
பாமரப் பெண்கள்தான் பெரும்பாலும் இப்படி ஒப்பார் வைத்து அழுவார்கள்.பாமரர்களாய் பெண்கள் இப்போது இல்லை.
இப்போதெல்லாம் மரணத்திலும் எவரும் வாய் விட்டு அழுவதில்லை.. இரண்டு சொட்டு கண்ணீரிலையே நிறுத்திவிடுகிறார்கள்...
அழகா சொல்லியிருக்கீங்க.. வேதனைகளை வரிகளாக...
ஒப்பாரி இசையோடு வாசிக்க மனசுக்கு கனமாவும் இருக்கு வேலு.
உருக்கம்.
ம்ம்ம்ம்....
சோகம் தொத்திக்குது...
கவிதைல சோகம் நிரம்பி வழியுது...
நீயில்லா இவ்வீட்டில்
நிச்சயமாய் நானில்லை
உன்னுடனே வருகிறேன்
எப்போதும் உன்வீட்டின்
ராணி நான்.
கவிதை நனைந்த வரிகள்.
Nice Velu...
கால்தடுக்கி நின்றாளே
மனம்பதறிப் போவானே
உயிர் பதறி நிற்கிறேன்
உணர்வில்லாமல் உறங்குகிறானே
....வேதனையை வெளிப்படுத்தி இருக்கும் கவிதை.
மனதை கனக்கச்செய்யும் வரிகள்!!
சோகம்..
//////நீயில்லா இவ்வீட்டில்
நிச்சயமாய் நானில்லை
உன்னுடனே வருகிறேன்
எப்போதும் உன்வீட்டின்
ராணி நான்.
////////
இந்த வரிகளின் வலிகள் புரிகிறது . மிகவும் அருமை
very nice i like this very much
மனம் துயரினை சுமக்கின்றது கவிதையை வாசிக்கையில்
அருமை, வேதனை தாங்கிய வரிகள்....
நன்றி சத்ரியன்
நன்றி வெறும்பய
நன்றி ஹேமா
நன்றி ராமலஷ்மி
நன்றி அகல்விளக்கு
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி ரிஷபன்
நன்றி அன்பரசன்
நன்றி சித்ரா
நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி Anonymous
நன்றி சக்தி
நன்றி r.k.guru
யார் யாரோ வருவார்கள்
யார் யாரோ போவார்கள்..
அழகான உங்கள் எழுத்துகளை
வாழ்த்திவிட்டு..
எழுத்துக்கள் ஆழம்..அருமை
வேதனை நிறைந்த வரிகள்.. ரொம்ப உருக்கமா இருக்கு..
நன்றி படைப்பாளி
நன்றி பதிவுலகில் பாபு
I feel the sad.
Post a Comment