
கணினிக்கு அடிப்படை
மூன்று செயல்கள்
இன்புட் புராஸஸ் அவுட்புட்
உள்ளீடொன்றை தகவமைத்து
வெளியீடொன்றை தருவது.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
இதுவே அடிப்படை.
வளர்ச்சிக்கானதென்றால்
உணவை உட்செலுத்தி
ஜீரணித்து பிரித்தெடுத்து
கழிவை வெளியேற்றுவது....
உற்பத்திக்கானதென்றால்
விந்தை உட்செலுத்தி
அண்டத்தில் கலந்துருவாகி
புதியதை வெளியேற்றுவது.....
எல்லாமே செயல்கள் மூன்று.
ஒன்று இரண்டு மூன்று
நான்கு ஐந்து ஆறு
எல்லா அறிவிற்கும்
அதுவே பொதுவிதி.
உள்ளீட்டை அப்படியே
பயன்படுத்தும்
இருசெல் உயிரியோ
வெளியீட்டை திரும்ப
பயன்படுத்தும்
நான்கு.....
ஐந்து........
.........................................
செயல் உயிரியோ இல்லை.
ஒ
இருசெல் உயிரி
என்றெல்லாம் உள்ள இங்கே
ஒருசெயல் உயிரி
இருசெயல் உயிரி
என்றெல்லாம் எங்கே?
மரம்....செடி...கொடி....
மனிதர்....விலங்கு....பறவையென்று
டிசைன்கள் மட்டும் மாற்றி
ஒரு இயந்திரத்தைப்போல்……
ஒன்றையே திரும்பத்திரும்பச்
செய்யும் ஒன்றை
பேரறிவு பேராற்றல்
என்றெல்லாம் எப்படி
நம்புவது?