Tuesday, April 20, 2010

அரியர் எக்ஸாம்


விடைகானத் தவிக்கும்
வினாக்கள் தாளில்...

என்னத்தைக் கிழித்தாய்
எக்ஸாம் எழுதி
மனசோ உறுமும்...

விடைத்தாளின் வெண்மையை
கரைபடிக்க மனசில்லாமல்
சுவரை வெறிக்கும் கண்கள்...

அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...

இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்....

இவையின்றி வீட்டில்
என்ன செய்ய...
எப்படியும் செல்லவேண்டும்
எக்ஸாம் எழுத

18 comments:

அகல்விளக்கு said...

//விடைத்தாளின் வெண்மையை
கரைபடிக்க மனசில்லாமல்
சுவரை வெறிக்கும் கண்கள்...//

நீங்க என் இனம் அண்ணா....

VELU.G said...

கரெக்ட் அகல் விளக்கு

எல்லாம் ஒரே குட்டை தானே

சிநேகிதன் அக்பர் said...

இதேதான்! இதேதான்.

கவிதை அருமை பாஸ்.

Anonymous said...

SAKTHIcomments; oru manusan evvalavu neram than exam eluthara madhiriye nadikkaradhu. andha kastaththa neenga sollettenga boss. congrates for your super kavitha

Anonymous said...

இப்டித்தாங்க சார்.. ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானுமிருந்தேன்....

கே.பி.

VELU.G said...

நன்றி அக்பர்

நன்றி சக்தி

நன்றி கே.பி

ஹேமா said...

அழகான அருமையான கவிதைகள் கண்டேன்.வாழ்த்துக்கள் வேலு.
வருவேன் இன்னும்.நீங்களும் வாங்களேன்.

VELU.G said...

மிக்க நன்றி ஹேமா

பிரேமா மகள் said...

நீங்க எக்ஸாம் எழும் போது, திரிஷாவும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாங்களா அங்கிள்?

கவிதன் said...

//அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...//

என்னையும் நம்பி பின் சீட்ல இருந்து ஒருத்தன் கேட்குரநேனு ரொம்பப்பெருமையா இருக்குப்பா.....

கவிதை சூப்பர்!

VELU.G said...

//
Blogger பிரேமா மகள் said...
நீங்க எக்ஸாம் எழும் போது, திரிஷாவும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாங்களா அங்கிள்?

//

இருந்திருந்தா நல்லாயிருக்கும்

ஹீம் பழைய கதைய பேசி என்ன ஆகப்போகுது

VELU.G said...

//
கவிதன் said...

//அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...//

என்னையும் நம்பி பின் சீட்ல இருந்து ஒருத்தன் கேட்குரநேனு ரொம்பப்பெருமையா இருக்குப்பா.....

கவிதை சூப்பர்!

//

நன்றி கவிதன்

ரோகிணிசிவா said...

//அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...
இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்....//

O MY GOD ,எவ்ளாவ் டென்ஷன்,பரபரப்பு,
இந்த கேள்விக்கு ஒரு டிப்ஸ் குடுப்பார்னு இன்விஜிலேடர் மூஞ்சிய நாம பார்க்கறது ,
டேய் காப்பாதுடான்னு அடுத்த சீட்காரனை கண்ணுல கெஞ்சறது,
ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த நாட்கள் நினைவுட்டியதற்கு
நன்றி நண்பரே !!!!

VELU.G said...

நன்றி ரோகிணி சிவா

Anonymous said...

// பிரேமா மகள் said...
நீங்க எக்ஸாம் எழும் போது, திரிஷாவும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாங்களா அங்கிள்?//

அதான... நீங்களே கேளுங்க பாட்டி....

க.பாலா......

சத்ரியன் said...

//இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்...//

(புது)மாப்ள பாலாசி,

இவரையெல்லாம் யாரைய்யா பதிவெழுத விட்டது? மொதல்ல போயி அந்த ‘அரியர்’ பேப்பர எழுதி பாஸ் பண்ணச் சொல்லும்.!

VELU.G said...

// ’மனவிழி’சத்ரியன் said...
//இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்...//
(புது)மாப்ள பாலாசி,
இவரையெல்லாம் யாரைய்யா பதிவெழுத விட்டது? மொதல்ல போயி அந்த ‘அரியர்’ பேப்பர எழுதி பாஸ் பண்ணச் சொல்லும்.!

//

பொருள்:
இந்த கவிதை காலேஜ்லே படிக்கும் போது எழுதியது
(போட்டோ இப்ப புடிச்சது)

விளக்கம்:
நன்பனின் அனுபவத்தை கவிதையில் வடித்துள்ளேன்
(சமாளிச்சாச்சு)

தெளிவுரை:
இப்படியெல்லாம் மக்கள் இருக்காங்களேன்னு வேதனைப்பட்டதோட விளைவு
இக்கவிதை
(pointங்கோ)

முடிவுரை:
இப்படி எழுதித்தாங்க அரியர் வந்திச்சு
(கடைசியல ஒத்துக்கிட்டமில்ல)

ரிஷபன் said...

இப்பகூட கனவு வருது.. பரிட்சைல கோட்டை விட்ட மாதிரி.. நல்ல கவிதை..

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...