
மெல்லிய சிறகொன்று ஒரு
பறவையின் இறகிலிருந்து பிரிந்து
காற்றில் வரையும் ஓவியம் போல்
என் அறையெங்கும் நிறைகிறாய்.....
தொலைந்ததாய் தேடும் என்முன்
வந்தமர்கிறாய்.....
இதைத்தானே தேடுகிறாய்
இல்லை இதையா தேடுகிறாய்
என்பதாய்
இருக்கும் எல்லாவற்றையும்
எடுத்தென் முன்னெங்கும் நிரப்புகிறாய்...
அம்மா அழைக்கிறாள் என்று
அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்
சும்மா சொன்னேன் என்று
சிரிக்கிறாய்......
கண்டுபிடிக்க சொல்லி என்
கண்முன் மறைகிறாய்.......
வெளித்தெரியும் கைகளும்
மறைந்து நோக்கும் கண்களுமாய்
எனைத்தானே தேடுகிறாய்
எனையா தேடுகிறாய் என்று உருகுகிறாய்...
கணப்பொழுதில் வந்தென்
கால் தழுவுகிறாய்
காற்றாய் மாறி என்உயிர் நிறைக்கிறாய்...
10 comments:
மீண்டும் குழந்தையாய் பிறக்க ஒரு வரம் கேட்போம்..
உயிரினில் ஊருகிறாய் கவிதையாய்...
...சிவா...
வாவ் அழகான கவிதை. மிகவும் ரசித்தேன். அதிலும் இந்த படத்தில் இருக்கு குழந்தை சோ க்யூட்!!!
வாவ்...
அருமை தல...
நன்றி சிவா
நன்றி ப்ரியா
நன்றி அகல்விளக்கு
superb kulanthaiyum thaimaiyum oru varam !!!!
மிக்க நன்றி ரோகிணிசிவா
அம்மா அழைக்கிறாள் என்று
அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்
சும்மா சொன்னேன் என்று
சிரிக்கிறாய்......
அழகு!!! கவிதை அருமை!!!
//Blogger கவிதன் said...
அம்மா அழைக்கிறாள் என்று
அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்
சும்மா சொன்னேன் என்று
சிரிக்கிறாய்......
அழகு!!! கவிதை அருமை!!!
//
நன்றி கவிதன்
ஆஹா குழந்தையைப் போன்றே கவிதையும் மென்மையாய் அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி உமா
Post a Comment