Tuesday, March 30, 2010

நித்தியானந்தமே பரமானந்தம்


எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கிறது. அல்லது சும்மா இருப்பதே ஒரு வேலையாகவும் வைத்துள்ளார்கள். யாரை எப்போது கேட்டாலும் எனக்கு நிக்க நேரமில்லை எனக்கு அந்த வேலை இருக்கிறது இந்த வேலை இருக்கிறது என்று ஓடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். எதிலும் டென்சன். எங்கு சென்றாலும் பரபரப்பு.

ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அது காலை நேரம். கணவன், மனைவி இருவரும் அலுவலகம் செல்லக் கிளம்புகிற சமயம். இரு குழந்தைகளும் பள்ளிக்கு தயாராகி உணவருந்திக் கொண்டு இருந்தனர். நண்பர் எதையோ தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருந்தார். கூடவே எடுத்தால் எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை என்று பயங்கர சத்தத்துடன் கத்திக் கொண்டிருந்தார். குழந்தைகள் பயத்துடன் எங்கே நம் மீது பாய்ந்து விடுவாரோ என்று நடுங்கியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தன. நடுவில் நான் ஒருவன் அமர்ந்திருப்பதே அவர்கள் நினைவில் இல்லை.

இது பெரும்பாலான வீடுகளின் அன்றாட நிலையாகி விட்டது.

அலுவலகத்திலும் இதே கதைதான். நமக்கும் மேலதிகாரிகளுக்குமான செய்தித் தொடர்பில் எங்கோ விட்டு போய் கடைசில் பிரச்சனை ஆகி விடுகிறது, அந்த கடுப்பில் வீடு வரும் போதும் அதுவே தொடர்கிறது,

பிரச்சனைகள் எங்கு சென்றாலும் பிரச்சனைகள் என்று வாழ்க்கையையே போராட்டமாக்கி கொண்டு, இருப்பதை தொலைப்பதில் ஏனிந்த ஆர்வம் நமக்கு.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் டாக்டரிம் பிரஷ்சர் செக்கப்பிற்கு சென்று இருந்தார். அவருக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை சரியாக 12 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். ஆஸ்பிட்டல் வந்த்தோ 11 மணிக்கு. டாக்டரிடம் செல்லும் போது 11.45 மணி. டாக்டரிடம் தனக்கு பிரஷ்சர் இருப்பதாகவும் தன்னை உடணடியாக செக்கப் செய்து விட்டு 10 நிமிடத்தில் விட்டு விடவும், ஏனென்றால் 12 மணிக்கு முக்கிய வேலையாக நான் அலுவலகம் செல்லவேண்டும் அதற்கு கூடுதல் கட்டணமாக எவ்வளவு வேண்டுமானலும் தருகிறேன் என்று கூறியுள்ளார். டாக்டர் டென்ஷன் ஆகி அவரை அப்போதே வெளியே அனுப்பி விட்டாராம். அந்த நண்பர் புலம்பித் தள்ளிவிட்டார்.

நாம் எப்போதுமே இப்படித்தான் நம்முடைய வேலையை அடுத்தவர் தலையில் போட்டு அவரையும் நிம்மதியில்லாமல் இருக்க விடுவது அல்லது அடுத்தவருடைய வேலையை நம் மேல் திணித்துக் கொண்டு நாமும் டென்ஷன் ஆகி விடுவது என்று பாரபட்சமில்லாமல் நடந்து கொள்கிறோம்.

விட்டு விடுங்கள் எல்லாவற்றையும் ......

வேலை, டென்ஷன், கோபம் மட்டுமல்ல நம் கொள்கைகள், கோட்பாடுகள், எண்ணங்கள், மொழிகள், மதங்கள், இனங்கள், ஜாதிகள், கடவுள் இல்லை, இருக்கிறான் என்ற விவாதங்கள், மற்றும் எல்லவற்றையும்...... எல்லாவற்றையும்.......

மலையின் மேல் ஏறுங்கள் ஓ வென கூச்சலிடுகள்……..

ஆற்றில் நீந்துங்கள், தரையில் சுகமான காற்றை சுவாசித்த படி வெகு தொலைவு நடந்து செல்லுங்கள் இயற்கையின் அற்புதங்களை ரசியுங்கள். உங்களுக்கு வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதியுள்ள இவ்வுலகை அப்படியே ரசியுங்கள். உங்களைச் சுற்றியுள்ளோரை அவர்களின் நிறை குறைகளோடு அப்படியே உங்களவரகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் அனுபவியுங்கள்,

நமக்கு ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை முடிய இன்னும் 5 மணி நேரமே உள்ளது. அதை தடை செய்ய யாராலும் முடியாது எனும் போது நம் மன நிலை எவ்வாறு இருக்கும்?

நமக்கு கிடைத்த ஒவ்வொரு நிமிடமும் அவ்வளவு முக்கியமான நிமிடம். அதை எவ்வளவு பயனுள்ளதாக கழிக்க முடியும்.

ஒவ்வொரு நிமிடத்தின் ஆனந்தத்தையும் அனுபவிக்க நினைப்போம் அல்லவா?. நித்தம் நித்தம் அனுபவிக்கும் அந்த நித்திய ஆனந்தத்தை ஏன் நான் நம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாது.......

முயற்சி செய்யுங்கள், அந்த நித்தியானந்தமே பரமானந்தம்...

வாழ்த்துக்கள்


7 comments:

பனித்துளி சங்கர் said...

உண்மைதான் ,,,நல்ல பதிவு ,உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

அகல்விளக்கு said...

நித்தியானந்தாவின் கொள்கை போல இருக்கிறது....

VELU.G said...

//பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உண்மைதான் ,,,நல்ல பதிவு ,உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

//
நன்றி பனித்துளி சங்கர்



//அகல்விளக்கு said...

நித்தியானந்தாவின் கொள்கை போல இருக்கிறது....
//

அப்படியா! யார் அது!

பிரேமா மகள் said...

மேட்டரு சூப்பர்தான்.. ஆனா தலைப்பை பார்த்தால் தான் பயமா இருக்கு... ஆபீஸில் இந்த பதிவை ஓபன் பண்ணி வைத்தால்.. எல்லோரும் வித்தியாசமாக பார்க்கிறாங்க.. ஏங்க இப்படி?.......

பிரேமா மகள் said...

மேட்டரு சூப்பர்தான்.. ஆனா தலைப்பை பார்த்தால் தான் பயமா இருக்கு... ஆபீஸில் இந்த பதிவை ஓபன் பண்ணி வைத்தால்.. எல்லோரும் வித்தியாசமாக பார்க்கிறாங்க.. ஏங்க இப்படி?.......

Unknown said...

NITYANADAM KOLKAI VEEDAM IYA

Thoduvanam said...

முயற்சி பண்றேங்க ..

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...