ஒரு துப்பாக்கியிலிருந்து
புறப்படும் தோட்டா
பறந்து கொண்டிருக்கும்
பறவையை அடைவதற்குள்
செத்துப் போய்விடுகிறது
மனிதமும்
அதன் மகத்துவமும்
பின்னர்
பறவை சாவதும்
அதை உண்ட
மனிதன் சாவதும்
காலத்தின் எச்சங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...

-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
கோயில் வாசலில் கால் வைத்ததும் பார்த்தாகி விட்டது, முழுதாகத்தான் இருக்கிறது. வெளிப்பிரகாரம் சுற்றுகையில் பாதியாகி விட்டது மனம் கொஞ்சம் படபடத்...
-
யோசித்து வைத்திருக்கிறேன் உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத.... ஒரு கவிதையை மறுபடியும் கவிதையாய் வடிக்கமுடியுமா தெரியவில்லை...... ந...
28 comments:
அக்மார்க்...
சூப்பர் அண்ணா...
வாழ்க்கையின் நியதி...
நாம் எல்லோரும் எச்சங்களாய்...
Small but truthful kavithai
Super kavithai boss
கவிதைத் தோட்டா அதன் இலக்கைத் தொட்டு விட்டது..
அற்புதமான கவிதை
வாழ்த்துக்கள்.......
எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
மனிதம் தேடும் காலத்தில் தேவையான கவிதை.
;)
நானும் நினைவுதெரிந்த நாளிலிருந்து மானுடத்தை இந்த உலகில தேடிக்கொண்டிருக்கிறேன். குறிஞ்சி மலர்போன்று எப்போதாவதுதான் தட்டுப்படுகிறது. என்ன செய்ய....?
நானும் நினைவுதெரிந்த நாளிலிருந்து மானுடத்தை இந்த உலகில தேடிக்கொண்டிருக்கிறேன். குறிஞ்சி மலர்போன்று எப்போதாவதுதான் தட்டுப்படுகிறது. என்ன செய்ய....?
இக் கவிதை வடிவம் மிகக் கச்சிதமாக யாப்புக் கண்டிருக்கிறது. ஆனால் இதன் கருத்து, இவ்வளவு (57) வயசுக்குப் பின்னும் என்னை இடறுகிறது.
||கன்று முட்டிப்
பால் விளைந்தது
கறவை மடியில்;
பால் பறித்துப்
பணம் பண்ணின
மனித விரல்கள்.
கன்றுக்காக மனமிரங்கிக்
கண்ணீர் விட வேண்டா.
பால் தரும் வரைக்கும் பறிப்பதும்
பிறகு அப் பசுவையே கொன்று
கறி சமைப்பதும்கூட
நியாயம்தான் மனித வாழ்வில்
வயிற்றுப்பசி சாட்சியாக.||
என்றொன்று எழுதிப் பதிந்திருக்கிறேன் எனது 'முகவீதி' கவிதைத் தொகுப்பில்.
உங்கள் கவிதையை நான் வாசிக்கப் போகிறேன் என்று முன்னறிந்தாளோ என்னவோ எங்கள் ஒன்பது வயது மகள், இன்று மாலை ஓர் இறைச்சிக் கடையைக் கடக்கும்போது, "'ஹலால்' என்றால் என்ன?" என்று வினவினாள். "'வீணாக இல்லை, நாங்கள் உயிர்வாழ்வதற்காகக் கொல்கிறோம்' என்று இறைவனிடம் அனுமதி வேண்டித் தொழுதுவிட்டுக் கொன்றது" என்று அர்த்தம்" என்றேன் (அவளுக்குப் புரிகிறாற்போல). கூடவே, "கரப்பான் பூச்சியைக் கொல்லும்போது கொஞ்சம் யோசிக்க வேண்டும்" என்றும் சொன்னேன். (ஜெயகாந்தன், 'அக்ரகாரத்துப் பூனை' என்றொரு கதை எழுதி இருக்கிறார்).
ஆனால், பறவை தன் மீது எச்சம் இட்டுவிட்டது என்பற்காக அதனைக் குறிவைப்பது சரியாகுமோ? (சாரு x தமிழ்ப்பொண்ணு விசயத்தைச் சொல்லவில்லை.)
மனிதம் மரித்துவிட்டதைச் சொன்ன விதம் அருமை !
மனிதனை குறிவைக்கும் போது கூட பதராதவனிடம் (நாம்) எங்கே மனித நேயத்தை தேடுவது
கவிதை நச்!
வேசமாய்ப் போன உலகில்
நேசத்திற்கு எல்லாம் எங்கே
வேலை
என் மனத்தில் இன்னும் ஓடிக் கொண்டு இருக்கும் ராஜா சந்திரசேகர் அவர்களின் வரி(லி)கள்.
/
பறவையின் உயிரில்
அந்தப் பறவையைக்
கொன்றவர்களுக்குத்
தெரியவில்லை
அதன் உதட்டில்
குஞ்சின் பெயர்
ஒட்டி இருந்ததும்
வாயில்
குஞ்சுக்கான
உணவிருந்ததும் /
க்ளாஸ். களாஸிக் கவிதை.
மனிதமும்
அதன் மகத்துவமும்
எச்சமாய் தேடவேண்டிய சொச்சஙள்.
votte pottacchi...
மிக மிக அருமை
இரத்தினச் சுருக்கம் என்பதற்கு
இந்த கவிதையை உவமையாகச் சொல்லலாம்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி அகல்விளக்கு
நன்றி # கவிதை வீதி # சௌந்தர
நன்றி "என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி ரிஷபன்
நன்றி vidivelli
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நன்றி Rathnavel
நன்றி கடம்பவன குயில்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அருமையான வடிவமைப்புடனும் நல்ல கருத்தமைவுடனும் கிண்டல் தொனியில் அமைந்த தங்கள் கவிதை அழகு.
முகவீதி எந்த பதிப்பகம் என்பதை தெரியப்படுத்தவும்
நன்றி
நன்றி ஹேமா
நன்றி சி.கருணாகரச
நன்றி திகழ்
நன்றி சுந்தர்ஜி
நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி ஷர்புதீன்
நன்றி ramani
'முகவீதி'யைப் பதிப்பித்தவர்கள் 'தமிழினி' பதிப்பகத்தார்.
கவிதை அருமை அதைவிட அதில் பொதிந்துள்ள உண்மை அர்த்த்ங்கள் மிக மிக அருமை
சிறுக சொல்லி பெருக விளங்க வைக்கும் கவி வடிவம் அழகு
நள்றி ராஜாசுந்தரராஜன் சார்
நன்றி கிருபா
நன்றி கவி அழகள்
விகடனிலும் படித்தேன் நண்பரே!
மிக நன்று.
வாழ்த்துக்குள் வேலு
வாழ்த்துக்குள் வேலு
Post a Comment