சமச்சீர் கல்வியென்பது
அந்தக்காலம்.
அரசன் மகனுக்கும்
ஆண்டி மகனுக்கும்
குருகுலத்தில்
ஒரே மரத்தடியில்
ஒரே மாதிரி உடையில்
ஒரே மாதிரி உணவில்
ஒரே மாதிரி கல்வி
சம வாய்ப்புகளில்.
இன்றைய காலம்
சமச்சீர் பாடத்திட்டம்
மட்டுமே.
ஒரே மாதிரி
படங்களும் பாடங்களும்
வெவ்வேறு சூழ்நிலையில்
வெவ்வேறு உடைகளில்
வெவ்வெறு உணவு வகைகளில்
வெவ்வேறு கலாச்சாரத்தில்.
Wednesday, June 29, 2011
சமச்சீர் கல்வியென்பது.............
Friday, June 24, 2011
எச்சங்கள்
ஒரு துப்பாக்கியிலிருந்து
புறப்படும் தோட்டா
பறந்து கொண்டிருக்கும்
பறவையை அடைவதற்குள்
செத்துப் போய்விடுகிறது
மனிதமும்
அதன் மகத்துவமும்
பின்னர்
பறவை சாவதும்
அதை உண்ட
மனிதன் சாவதும்
காலத்தின் எச்சங்கள்.
Subscribe to:
Posts (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...

-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
கோயில் வாசலில் கால் வைத்ததும் பார்த்தாகி விட்டது, முழுதாகத்தான் இருக்கிறது. வெளிப்பிரகாரம் சுற்றுகையில் பாதியாகி விட்டது மனம் கொஞ்சம் படபடத்...
-
யோசித்து வைத்திருக்கிறேன் உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத.... ஒரு கவிதையை மறுபடியும் கவிதையாய் வடிக்கமுடியுமா தெரியவில்லை...... ந...