
கார்பன்-டை-ஆக்ஸைடோடு கலந்துவரும்
சுழித்து நுரைத்து ஓடும் ஆறு
ஆர்சனிக் கந்தகம் கரைத்து வரும்
என்று தொலையும் இந்த அசுத்தம்
நெஞ்சு நிறுத்திக் கூவும்போது
தெருவினிலே போகும்லாரி
காது சவ்வை கிழித்துப் போகும்
அதிசயமாய் நின்று விழிவிரியப் பார்க்க
ஆயிரம் வாட்ஸ் விளக்கொன்று
கண் அவித்துப் போகும்
ஆங்காங்கே வெடிக்கும்
ஆர்டிஎக்ஸ் குண்டுகளில்
தப்பித்தபின் வேண்டும்
எதிர்கால கனவுகள்.
எங்கோ ஒரு நாட்டின்
அணு உலை வெடிக்க
பிளவுண்ட கதிரின் தாக்கம்
நம் உயிருள் கலவாதிருக்க
ஆண்டவன் அருளே காக்கும்
அத்தனை அழிவிலிருந்தும்
தப்பித்து வாழும் நமக்கேனும்
அண்டும் கனவுகள் விரட்டி
சுத்தமா(க்)கும் எண்ணம் வேண்டும்.