Monday, August 23, 2010

கடலை வியாபாரம்

அஞ்சாம் வகுப்பில்

அருந்ததியை சைட் அடித்ததோ.....

பத்தாம் வகுப்பில்

பவித்ராவின் பார்வைக்கு அலைந்ததோ....

பன்னிரெண்டாம் வகுப்பில்

வருஷம்16 படம்

பதினாறு முறை பார்த்துவிட்டு

குஷ்பு புகழ் பாடியதோ....

கல்லூரி வளாகத்தில்

அடுத்த டிபார்ட்மெண்ட்

அனிதாவிற்கு நூல்விட்டதோ...

வேலையில் சேர்ந்து

கிளார்க் கிருஷ்ணவேணி

வீட்டுக்கு வேலை செய்ததோ...

எதுவென்று தெரியவில்லை

பெண்ணேதும் அமையவில்லை

அருந்ததியோ பவித்ராவோ குஷ்புவோ

அனிதாவோ கிருஷ்ணவேணியோ

ஓகே சொல்லியிருந்தால்

வாழ்க்கை பிரகாசமாகியிருக்குமா

தெரியவில்லை!!!

21 comments:

அகல்விளக்கு said...

ஹாஹாஹா....

நல்லாருக்கு கடலை வியாபாரம்... :)

கவி அழகன் said...

பெண்களால் வாழ்க்கை பிரகாசம் ஆகும்
விரைவில் ஒரு பெண்ணை பாருங்கள் நண்பரே

ஹேமா said...

ரொம்பத்தான்.....!

எஸ்.கே said...

ரசிக்கும்படி உள்ளது! வாழ்த்துக்கள்!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... என்னே ஒரு பீலிங்க்ஸ்.....!!!

அ.முத்து பிரகாஷ் said...

முயற்சி திருவினையாக்கும்னு யாரோ சொல்லியிருக்காங்க தோழர் .. மறந்துடாதீங்க ...

அன்பரசன் said...

பிரமாதம்..

Gayathri said...

haa haa thangamudiala ..super

Anonymous said...

ரைட்டு!

ரிஷபன் said...

//அருந்ததியோ பவித்ராவோ குஷ்புவோ
அனிதாவோ கிருஷ்ணவேணியோ
ஓகே சொல்லியிருந்தால்
வாழ்க்கை பிரகாசமாகியிருக்குமா//

அப்ப கவிதை வேற மாதிரி இருக்குமோ?!

Unknown said...

நல்லாயிருக்கு..

Anonymous said...

Sir, Indha photola yarunga sir kushboo, arundhathi, pavithra, krishnaveni and anitha summa general knowledgeku aka ketten.
Sakthi

RVS said...

"நான் வறுத்த கடலை" அப்படின்னு தலைப்பு வச்சா எப்படி இருக்கும்? கவிதை நல்ல இருந்தது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அன்புடன் நான் said...

பிஞ்சியிலேயே... ஆரம்பிச்சாச்சா....

தூயவனின் அடிமை said...

படித்தேன் நிறைய சிரித்தேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆஹா, மனுசன் பழசெல்லாம் கிளறுறாரே...

பட்டியல் கொஞ்சமா இருக்கே....

விட்டுபோனவர்கள் மீண்டும்வருவார்களா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆமாம் ஒரு வேளை எல்லாருமே ஓகே சொல்லியிருந்திருந்தால்?

//வாழ்க்கை பிரகாசமாகியிருக்குமா//

தெரியவில்லை!!!

VELU.G said...

நன்றி அகல்விளக்கு

நன்றி யாதவன்

நன்றி ஹேமா

நன்றி எஸ்.கே

நன்றி சித்ரா

நன்றி நியோ

நன்றி அன்பரசன்

நன்றி காயத்ரி

நன்றி பாலாஜி சரவணா

நன்றி ரிஷபன்

நன்றி பதிவுலகில் பாபு

நன்றி சக்தி

நன்றி ஆர்.வி.எஸ்

நன்றி சி.கருணாகரசு

நன்றி இளம் தூயவன்

நன்றி தஞ்சை வாசன்

cheena (சீனா) said...

அன்பின் வேலு

யாராவது ஒருவராவது ஓக்கே சொல்லி இருக்கலாம் - அட்லீஸ்ட் குஷ்பூ - ம்ம்ம்ம் - அமைய வில்லையோ - விரைவினில் வாழ்க்கை ஒளிமயமாக அமைய நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

VELU.G said...

நன்றி சீனா சார்

Vel Tharma said...

கடலை வியாபாரம் நட்டமடைந்தாலும் கடலைத் தாண்டி விட்டீர்கள்...

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...