Tuesday, August 17, 2010

சகலரும் சுயநலமிகள்

Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து..........

சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையிட்டாலும் சுயநலம் பாலூட்டி வளர்ப்பதும் சுயநலம். ஏசு சுயநலம், புத்தன் சுயநலம், சுயநலம் இயல்பு. தியாகம் பொய். தியாகம் ஏமாற்று வேலை, தகிடுத்த்தம் என்று பொட்டில் அறைந்து கூறுகிறது அந்தப் புத்தகம்.

எனக்கு தலைவலி என்றால் உன்னோடு நான் பேசுவது எங்ஙனம்? அப்படி பேசினாலும் வலிந்து நின்றாலும் உன்னை எப்படி கவனிக்க முடியும்? உன்பேச்சு எப்படி எனக்குள் வரும் போ என்கிற சீற்றமும் ஒழிய மாட்டாயா என்கிற ஏக்கமும் வரும். எனவே என் தலைவலியை மதித்து உன்னை விலக்கிவிடுவதே உத்தமம்.

எனக்கு தலைவலி என்று உனக்குப் புரிய நீயும் விலகுவது நன்று. என் தலைவலி உனக்கு எப்போது புரியும்? உன் தலைவலியை நீ மதித்தால் என் தலைவலி, என் வேதனை புரியும்.

அதாவது உன்னை மதி. உன்னை மதிக்க உன்னால் பிறர் உணர்வு மதிக்க முடியும். உனக்கு நீ முக்கியம். எனக்கு நான் முக்கியம். என்னளவில் நானே இன்றைய உலகத்தின் மையம்.

நானில்லையெனில் இவ்வுலகம் இல்லை. நானில்லாத இடத்தில் உள்ள குழப்பம் சந்தோஷம் பற்றி எனக்கு அக்கரையில்லை. நானில்லாத, நான் சம்பந்தப்படாத எதுவும் எனக்கு முக்கியமில்லை. என் பார்வையில் உள்ள உலகம் தான் எனக்குத் தெரியும். அவ்விதம் தான் என்னால் புரிந்து கொள்ள முடியும். நீயும் அவ்வாறே.

தாயன்பு என்கிற பெரும்பொய் உலகத்தில் உள்ளது, எல்லா தாயும் உன்னதமான சுயநலமி. உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் தெரியுமாஎன்று கேட்காத தாயில்லை.

ஏன்? வளர்ந்து நிழல் தருவாய் என்று வளர்த்தாள் தாய். இல்லையெனில் இதைச் செய்யாள், நீதான் வேண்டுமென்று அவள் பெறவில்லை. நீ வந்தாய் அவ்வளவே. உன் வருகை ஒரு சகமதிப்பு, உன் வளர்ச்சி அவளுக்கு பாதுகாப்பு. மதிப்பும் பாதுகாப்பும் தரும் சந்தோஷம் அதில் உண்டு, அதற்காக பாலூட்டினாள். உனக்காக அல்ல.

அவளுக்கு நீ பயன்பட்டாய், உனக்கு அவள் பயன்பட்டால். இதில் தியாகம் எங்கிருந்து வந்தது?.
















9 comments:

சத்ரியன் said...

இதுவும் கூட நியாயமாத்தான் படுது.

அ .செய்யது அலி said...

தோழரே அருமையான பகிர்வு
உண்மையான வரிகள்

VELU.G said...

நன்றி சத்ரியன்

நன்றி அ.செய்யது அலி

தனி காட்டு ராஜா said...

//தாயன்பு என்கிற பெரும்பொய் உலகத்தில் உள்ளது, எல்லா தாயும் உன்னதமான சுயநலமி. ‘உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் தெரியுமா’ என்று கேட்காத தாயில்லை.//


தல,

சுய நலம் என்பது தான் வாழ்வு .....
ஒரு ஆல மரம் இருக்கிறது என்றால் ....அதன் நிழல் மனிதனுக்கு உதவுகிறது ....
அந்த மரத்தில் எத்தனயோ குருவிகள் வந்து தங்கு கின்றன ....
அந்த மரம் ஒரு போதும் தான் தியாகி என்று சொல்லி கொள்வதில்லை ....[ஒரு வேலை அதற்கு பேச வாய் இருந்தால் சொல்லுமா ?]......மரத்தின் இயல்பு அது ......
நாம் தான் ஏதாவது செய்து விட்டால் பொது நலம் ,தியாகம் என்று சொல்லி கொள்கிறோம் .....
பொது நலம் என்பது கொஞ்சம் விரிவு படுத்தப்பட்ட சுய நலம் .....அவ்வளவு தான் .....

Anonymous said...

Very wonderful passages. Thanks
Velu, - Sakthi

VELU.G said...

நன்றி தனி காட்டு ராஜா

நன்றி சக்தி

cheena (சீனா) said...

அன்பின் வேலு

சிந்தனை செல்லும் திசை நன்று. உலகில் எச்செயலுமே எதிர்பார்ப்பின்றி நடப்பதில்லை. வெளிப்படையாக சில தெரியும் - சில மறைந்து வெளியே தெரியாது.அவ்வளவுதான்.

நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா

கிருத்திகன் said...

படிக்க ,உணர , எழுத இன்னும் எவ்வளவோ இருப்பாதாய் உணர்த்துகிறது இந்த பதிப்பு .(பின்னூட்டம் இடுவதைக்கூட சுயநலம் என்றும் சொல்லாம் இல்லையா?)

sakthi said...

நண்பா சொல்ல வார்த்தை வரவில்லை நண்பா

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...