சூரியன் வரத்
தென்னைமரம் காட்டும்
கிணற்று நீர்
பக்கச்சுவற்றில்
முட்டிநிற்கும் ஒற்றைமீன்
கூடி விளையாடும்
குட்டி மீன்கள்
இவை மட்டுமல்ல
வாழ்க்கை சுகமென
ஆழத்திலும் தேடிப்பார்த்தோம்
வான்பிளக்கும் மேல்பகுதி போக
சுற்றிலும் சுவர்
கீழும் தரை எனில்
எங்கிருந்து நீர் வரும்?
அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது
நாம் அறியும்படி அருகில்தான்
ஆனால் எங்கே?
13 comments:
அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது//
உண்மைதான் வேலு தேடிக் கொண்டே இருக்கிறோம்
//அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது
நாம் அறியும்படி அருகில்தான்
ஆனால் எங்கே?//
அகம் நோக்கிய பார்வை அதிகமிருந்து...ஆங்காரம் உள்ளடக்கிம் ஐம்புலனும் சுட்டறுத்தால்...சக்கரம் திறந்து தூங்காமால் தூங்கி சுகம் பெறலாம்னு சித்தர் பாடல் சொல்லுதே வேலு....!
அருமையான பகிர்வு நண்பரே...!
அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது
நாம் அறியும்படி அருகில்தான்
ஆனால் எங்கே?//
இப்படித்தான் தேட வேண்டியுள்ளது....
நல்லாயிருக்கு கவிதை.
அதைதான் தேடிக்கிட்டே இருக்கோம் வாழ்நாள் முழுக்க. :-).
கவிதை மிக அருமை.
வாழ்க்கை சுகமென
ஆழத்திலும் தேடிப்பார்த்தோம்
தேடுதல் தான் வாழ்க்கை..
//அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது
நாம் அறியும்படி அருகில்தான்
ஆனால் எங்கே///
அருகில் தான்.. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை..
அருமையா இருக்கங்க. :)
கண்டவர் விண்டிலரே:(
அகண்ட வாழ்க்கைச்
சக்கரத்தின் திறப்பெங்கோ
இருக்கிறது
நாம் அறியும்படி அருகில்தான்
ஆனால் எங்கே?
...... விடை தெரியாமல் இருப்பதுதான் சிறப்போ?
தேடுதல்தான் வாழ்வின் சுவை.
ஒரு உந்துதல் சக்தியும் கூட.
Arumayana kavithai. Valthukkal- Sakthi
அத்திறப்பு தேடியே மாந்தர் சகலரும் அலைகிறோமே ! மிக நன்று நண்பரே.
நன்றி தேனக்கா
நன்றி தேவா
நன்றி சி.கரணாகரசு
நன்றி இராமசாமி கண்ணண்
நன்றி ரிஷபன்
நன்றி ஆனந்தி
நன்றி வானம்பாடிகள்
நன்றி சித்ரா
நன்றி ஹேமா
நன்றி சக்தி
நன்றி jo
கூகிலில் தேடினால் கூடவா கிடைக்காது?
Post a Comment