Tuesday, July 20, 2010

நீ...நான் மற்றும் இயற்கை

ஒரு மழைநாளில்

அறிமுகமானோம்

நதி நணைக்கும்

கோவில் வாசலில்...


மழையை ரசித்தபடி

இருந்த நீ

மழையில் நனைந்தபடி

இருந்த என்னை

நோக்கினாய் வியப்புடன்...


விழிகளில் பேசி

மொழிகளில் கலந்தோம்


உனக்கும் எனக்கும்

இலக்கியம் தத்துவமென

ஒரே சிந்தனை

ஒரே வகை எண்ணங்கள்


பரிமாறிக் கொண்டோம்

நம் சிந்தனைகளை...

இரவு பகல் எல்லையற்று

இடம் பொருள் தடையின்றி

பேசினோம்.....பேசினோம்....


ஞானிகள் அறிஞர்கள்

சிந்தனையாளர்கள்

ஸ்தம்பிக்க.....

இயற்கை அதிர....

பிறந்தன

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...


கணம் தாமதியாமல்

கலந்தாலோசித்த நம் பெற்றோர்

மணமுடித்தனர் நம்மை

இல்வாழ்க்கை துணைவர்களாய்..


காலங்கள் உருண்டன

நமக்கான

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...

ஸ்தம்பிக்க.....

பிறந்தன

குழந்தைகள்.... குழந்தைகள்...

இயற்கை சிரித்தது.

20 comments:

அ.முத்து பிரகாஷ் said...

கொடுத்து வைத்தவர் தோழர் நீங்கள் !
சற்று பொறாமை தான் !!
பின்னர் வருகிறேன்...

ஈரோடு கதிர் said...

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையிருக்கே

அம்பிகா said...

\\இயற்கை சிரித்தது.\\:-)))

vasu balaji said...

utopia:)

ஹேமா said...

காதலிக்கும்போதுதான் தத்துவங்களும் இலக்கியங்களும்.அப்புறம் குழந்தைகளும் குட்டிகளும்தான்.
கூடவே எரிச்சலும் கோபமும் சண்டையும் !

அன்புடன் நான் said...

கலக்குங்க... கவிதை நல்லாயிருக்கு.

தாராபுரத்தான் said...

அருமை..

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

Unknown said...

சிறந்த நடை .காதலை அதன் பின்னான வாழ்வை இத்தனை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்

அகல்விளக்கு said...

//ஹேமா said...

காதலிக்கும்போதுதான் தத்துவங்களும் இலக்கியங்களும்.அப்புறம் குழந்தைகளும் குட்டிகளும்தான்.
கூடவே எரிச்சலும் கோபமும் சண்டையும் ! //


நானும் புரிந்து கொண்டேன்...

நல்ல கவிதை...

செய்தாலி said...

காலங்கள் உருண்டன
நமக்கான
புதிய சிந்தனைகள்
புதிய தத்துவங்கள்
புதிய கோட்பாடுகள்...
ஸ்தம்பிக்க.....
பிறந்தன
குழந்தைகள்.... குழந்தைகள்...
இயற்கை சிரித்தது.
உயிருள்ள வரிகள்
வாழ்த்துக்கள் தோழரே

Karthikeyan said...

"குழந்தைகள்.... குழந்தைகள்..."
இயற்கை சிரிக்கத்தான் செய்யும்.

Anonymous said...

Ayyo Paavam...... - Sakthi

Thenammai Lakshmanan said...

ஈரோடு கதிர் said...
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையிருக்கே
///

ரிப்பீட்ட்ய்ய்,,,

Vel Tharma said...

அழகிய வரிகள்..

Tamilparks said...

நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அற்புதமாக இருக்கு... இயற்கை போல் உங்கள் வரிகள் என்றும் சிறக்கட்டும்...

மழைக்கு என் நன்றிகள்...

சத்ரியன் said...

குழந்தைகள்...குழந்தைகள்..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இயற்கை நியதி அப்படி ... சரியா சொன்னீங்க... சூப்பர்

VELU.G said...

நன்றி நியோ

நன்றி ஈரோடு கதிர்

நன்றி அம்பிகா

நன்றி வானம்பாடிகள்

நன்றி ஹேமா

நன்றி சி.கருணாகரசு

நன்றி தாராபுரத்தான்

நன்றி T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி வித்யா

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி அகல்விளக்கு

நன்றி அ.செய்யது அலி

நன்றி கார்த்திகேயன்

நன்றி சக்தி

நன்றி தேனக்கா

நன்றி வேல்தர்மா

நன்றி Tamilparks

நன்றி தஞ்சை.வாசன்

நன்றி சத்ரியன்

நன்றி அப்பாவி தங்கமணி

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...